சுக்கிரன் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகத்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்?
Sukran Transit 2024 Palan in Tamil: நவம்பர் 7ஆம் தேதி சுக்கிரன் தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். இந்த பெயர்ச்சி 3 ராசிகளுக்கு சாதகமான பலன்களை அளிக்கும். தொழில், குடும்பம், காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும்.
Sukran Transit 2024 Palan in Tamil, Sukran Transit in Sagittarius, Zodiac Sign
Sukran Transit 2024 Palan in Tamil:: காதல் மற்றும் திருமண வாழ்க்கைக்கு சுக்கிர பகவான் மிகவும் முக்கியமான கிரகம். ஜாதகத்தில் சுக்கிரன் சாதகமான திசையில் இருந்தால் தான் தாம்பத்திய வாழ்க்கை சிறப்பாக இருக்கும். வசியம் மற்றும் அழகுக்கு பொறுப்பான கிரகம். அப்படிப்பட்ட சுக்கிரன் இந்த மாதம் நவம்பர் 7ஆம் தேதி அதிகாலை 3.21 மணிக்கு தனுசு ராசிக்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். இந்த பெயர்ச்சி இந்த 3 ராசிகளுக்கு ராஜயோகத்தை கொட்டி தரப் போகிறது. அதைப் பற்றி விரிவாக பார்க்கலாம் வாங்க…
Sukran Peyarchi 2024 Palan in Tamil
மேஷம் ராசி:
மேஷ ராசிக்கு 2 மற்றும் 7ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிர பகவான். இப்போது 9ஆம் வீட்டிற்கு பெயர்ச்சியாகிறது. இந்த பெயர்ச்சி மேஷ ராசியினருக்கு குடும்பத்தோடு நேரத்தை செலவிட வழி வகுக்கும். வெளியூர், வெளிநாடு பயணம் இருக்கும். தொழில் ரீதியாக அதிர்ஷ்டம் தேடி வரும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய ஆர்டர்கள் வரும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். செலவுகளும் அதிகரிக்கும். பொறுமை அவசியம்.
பரிகாரம்: வாரந்தோறும் வியாழக்கிழமை ஏதாவது ஒரு பிராமணருக்கு சாப்பாடு வழங்கி வந்தால் நன்மை உண்டாகும்.
Virgo, Zodiac Sign, Sukran Peyarchi 2024 Palan in Tamil
கன்னி ராசி:
2 மற்றும் 9ஆம் வீட்டிற்கு அதிபதி சுக்கிர பகவான். இப்போது 4ஆவது வீட்டிற்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். இது எந்த மாதிரியான பலனை அளிக்கும் என்று பார்க்கலாம். தன்னம்பிக்கை அதிகரிக்கும். வசதி வாய்ப்பு பெருகும். அலுவலகத்தில் உங்களது செயல்பாடு நன்றாக இருக்கும். இதன் காரணமாக உங்களது மதிப்பு மரியாதை அதிகரிக்கும். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும்.
பரிகாரம்: விஷ்ணு சஹஸ்ரநாமத்தை சொல்ல வேண்டும்.
Virgo, Sukran Transit in Dhanusu Rasi, Sukran Transit in Sagittarius
துலாம்:
முதல் மற்றும் 8ஆவது வீட்டிற்கு அதிபதியான சுக்கிர பகவான் இப்போது 3ஆவது வீட்டிற்கு பெயர்ச்சி ஆக இருக்கிறார். இது வேலையில் டிரான்ஸ்பர் கிடைக்க வழி வகை செய்யும். அதிகமாக பயணம் செய்யும் நிலை உண்டாகும். வணிகத்தில் முன்னேற்றம் உண்டாகும். பணம் சம்பாதிப்பதில் முழு கவனத்தையும் செலுத்துவீர்கள். காதல் வாழ்க்கை சிறப்பானதாக இருக்கும்.
பரிகாரம்: லலிதா சஹஸ்ரநாமம் சொல்ல வேண்டும்.