- Home
- Astrology
- Astrology: புத்தாண்டில் எதிரி கிரகங்களின் சேர்க்கை.! 5 நாட்களுக்கு இந்த ராசிகள் ரொம்ப கவனமா இருக்கணும்.!
Astrology: புத்தாண்டில் எதிரி கிரகங்களின் சேர்க்கை.! 5 நாட்களுக்கு இந்த ராசிகள் ரொம்ப கவனமா இருக்கணும்.!
Sevvai Sukran Serkkai: 2026 ஆம் தொடக்கத்தில் சுக்கிரன் மற்றும் செவ்வாய் ஆகிய இரண்டு எதிரி கிரகங்களின் சேர்க்கை நடைபெற இருக்கிறது. இதன் காரணமாக 4 ராசிக்காரர்கள் சவால்களை சந்திக்கக்கூடும். அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

செவ்வாய்-சுக்கிரன் சேர்க்கை
வேத ஜோதிடத்தில் கிரகங்களின் இணைப்புகள் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றன. சில கிரகங்கள் ஒரே ராசியில் அல்லது ஒரே நட்சத்திரத்தில் சந்திக்கும் பொழுது அது மனிதர்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் ஜனவரி 2026 அன்று சுக்கிரனும், செவ்வாயும் ஒன்றுக்கொன்று மிக அருகில் வரும். இது ‘கிரகப் போர்’ என்று அழைக்கப்படுகிறது. சுக்கிர பகவான் அன்பு, மகிழ்ச்சி, செல்வத்தின் காரகராகவும், செவ்வாய் பகவான் ஆற்றல், தைரியம், கோபத்தின் காரகராகவும் விளங்குகின்றனர்.
கிரகப்போர் காலம்
இந்த இரண்டு எதிர் குணாதிசயங்கள் கொண்ட கிரகங்களின் ஆற்றல்கள் மோதும் பொழுது தேவையற்ற மன அழுத்தம், தகராறுகள், நிதி சிக்கல்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. ஜனவரி 6, 2026 முதல் ஜனவரி 10, 2026 வரை சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். சிறிய விஷயங்களுக்கு கோபப்பட்டு அவசர முடிவுகளை எடுக்க நேரிடலாம். குடும்ப உறுப்பினர்களின் மோதல்கள், தேவையற்ற பிரச்சனைகள், வாக்குவாதங்கள் எழும் அபாயமும் உள்ளது. எனவே இந்த ஐந்து நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு விரிவாகப் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்கள் ஜனவரியில் முதல் இரண்டு வாரங்களுக்கு மிகவும் கவனத்துடன் இருக்க வேண்டும். சுக்கிரன் மற்றும் செவ்வாயின் ஆற்றல்கள் மோதுவதன் காரணமாக மன அழுத்தம், கோபம் ஆகியவை அதிகரிக்கலாம். இரவில் தூக்கம் வராமல் தவிக்க நேரிடலாம். சிறிய விஷயங்களுக்கு கூட அதிக கோபம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேல் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் வாக்குவாதங்கள் ஏற்படும். எனவே இந்த காலகட்டத்தில் பொறுமையை கடைப்பிடிப்பது நல்லது. அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாம். உடல் நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதத்தின் முதல் 10 நாட்கள் மிகவும் கவனமும், எச்சரிக்கையும் தேவைப்படும் நாட்களாக இருக்கும். குடும்ப விஷயங்களில் பதற்றம் அதிகரிக்கலாம். பண விஷயங்களில் ஏற்ற இறக்கங்கள் ஏற்படக்கூடும். தங்கள் மீது வைக்கப்படும் விமர்சனங்களை பொறுத்துக் கொள்ள முடியாமல் போகலாம். கோபத்தை கட்டுப்படுத்துவது கடினமாக இருக்கக்கூடும். தேவையில்லாத விஷயங்களுக்கு பணத்தை செலவு செய்ய வேண்டிய சூழல் உருவாகலாம். எனவே இந்த காலகட்டத்தில் நிதி சார்ந்த விஷயங்களில் கவனத்துடன் இருப்பது, கோபத்தை கட்டுப்படுத்துவது, பிறர் கூறும் நேர்மையான விமர்சனங்களை பொறுத்துக் கொள்ளும் திறனை வளர்த்துக் கொள்வது ஆகியவை முக்கியமாகும்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ஜனவரி மாதத்தில் முதல் 10 நாட்கள் உணர்ச்சி ரீதியாக பின்னடைவு ஏற்படலாம். உறுதியற்ற தன்மை, தேவையற்ற சண்டைகளின் காலமாக இருக்கக்கூடும். குடும்பம் அல்லது தொழில் ரீதியாக பிரச்சனைகள் ஏற்படலாம். எந்த ஒரு சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பொழுதும் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்பம் அல்லது உறவினர்களிடம் நல்லிணக்கத்தை பேணுவது மிகவும் சவாலானதாக இருக்கலாம். குடும்ப உறுப்பினர்களுடன் பேசும் பொழுது வார்த்தைகளில் கவனத்துடன் இருக்க வேண்டும். ஆரோக்கியத்திலும் பின்னடைவுகள் ஏற்படக்கூடும் என்பதால் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம்.
விருச்சிகம்
செவ்வாய் மற்றும் சுக்கிரன் நடத்தும் கிரகப் போர் விருச்சிக ராசிக்காரர்களுக்கு மன அழுத்தம் நிறைந்ததாகவும், பதட்டம் நிறைந்ததாகவும் காணப்படும். வேலை அழுத்தம் மற்றும் பொறுப்புகள் காரணமாக மனச்சோர்வு அதிகரிக்கும். தொழில் ரீதியாக அவசர முடிவுகளை எடுப்பதை தவிர்க்க வேண்டும். தேவையற்ற சண்டைகள், மோதல்கள், வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த ஆரோக்கியமான உணவு பழக்க வழக்கம், உடற்பயிற்சிகள் ஆகியவற்றை மேற்கொள்ள வேண்டியது அவசியம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

