- Home
- Astrology
- Shukra Gochar 2026: இன்று சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி: 5 ராசிக்காரர்களுக்கு சுக்கிர மகா தசை தொடக்கம்.! குபேரனாக மாற பொன்னான வாய்ப்பு.!
Shukra Gochar 2026: இன்று சுக்கிரன் நட்சத்திரப் பெயர்ச்சி: 5 ராசிக்காரர்களுக்கு சுக்கிர மகா தசை தொடக்கம்.! குபேரனாக மாற பொன்னான வாய்ப்பு.!
Shukra Gochar 2026: சுக்கிர பகவான், சனி பகவானின் சொந்த நட்சத்திரமான பூச நட்சத்திரத்திற்குப் பெயர்ச்சியாக இருக்கிறார். இதனால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

Venus Transit 2026 in Poosam Natchathiram
Shukra Gochar 2026: வேத ஜோதிடத்தில் சுக்கிர பகவான் முக்கிய கிரகமாக அறியப்படுகிறார். இவர் செல்வம், செழிப்பு, ஆடம்பரம் ஆகியவற்றின் காரகராவார். ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால் அவர்களுக்கு செல்வ செழிப்பிற்கு குறைவிருக்காது. அப்படிப்பட்ட சுக்கிர பகவான் பூச நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாகி இருக்கிறார். ஜூன் 23ஆம் தேதி வரை அவர் இந்த நட்சத்திரத்தில் நிலைத்திருப்பார். இதன் காரணமாக சில ராசிக்காரர்களுக்கு பெரும் அதிர்ஷ்டமும், நிதி ரீதியான முன்னேற்றமும், தொழில் வளர்ச்சியும் கிடைக்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
இதையும் படியுங்கள்: Today Rasi Palan: இன்று சுக்கிர பிரதோஷம்.! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்குமான பலன்கள் மற்றும் பரிகாரங்கள்.!
ரிஷபம்
சுக்கிரனின் ராசி மாற்றம் ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வ செழிப்பை கொண்டு வரும். சுக்கிர பகவான் ரிஷப ராசியின் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த காலகட்டத்தில் நீங்கள் சந்தித்த கஷ்டங்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். உங்கள் தன்னம்பிக்கையும், தைரியமும் அதிகரிக்கும்.
துணிச்சலான முடிவுகளை எடுத்து வெற்றிகளைப் பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்த தகராறுகள் தீர்க்கப்படும். பணம் தொடர்பாக உங்களுக்கு இருந்து வந்த மனம் கவலைகள் அனைத்தும் அகலும். நிதி நிலைமை மேம்படும். வாழ்க்கை வசதியாக மாறும். கடந்த காலம் செய்த முதலீடுகளில் இருந்து கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள்.
இதையும் படியுங்கள்: Labh Drishti Rajyog 2026: குரு - செவ்வாய் இணைவு.! 4 ராசிகளின் தலைவிதியே மாறப்போகுது.!
கடகம்
சுக்கிர பகவானின் ராசி மாற்றம் கடக ராசிக்காரர்களுக்கு நல்ல நேரத்தை கொண்டு வரும். குறிப்பாக வேலை மற்றும் வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை விலகி, நல்ல லாபம் கிடைக்கும். தனியார் துறையில் பணியாற்றி வருபவர்களுக்கு மேலதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும். உங்கள் வேலையைப் பார்த்து மகிழும் உயர் அதிகாரிகள் சம்பள உயர்வு அல்லது பதவி உயர்வை வழங்குவார்கள்.
குடும்பத்தில் அமைதியும், நல்லிணக்கமும் நிலவும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக மாறும். வாழ்க்கையில் அனைத்து விதமான மகிழ்ச்சியும், சகல வசதிகளும் கிடைக்கும். சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். இதுவரை சந்தித்து வந்த பல பிரச்சனைகளுக்கு முடிவு எட்டப்படும்.
இதையும் படியுங்கள்: Parivartana Yoga 2026: சுக்கிரன் சந்திரனின் அபூர்வ கூட்டணி.! குபேர யோகத்தை பெறப்போகும் அந்த 6 அதிர்ஷ்ட ராசிகள் யார்?
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திர மாற்றத்தால் தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் இது. உங்களுக்கு வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். கூட்டாக தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் நன்மையைத் தரும்.
சிறிதாக தொழில் தொடங்கி வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள். வாடகை கட்டிடத்தில் வசித்து வருபவர்கள் சொந்த வீட்டிற்கு மாறுவீர்கள். நீண்ட நாட்களாக இருந்த உடல்நலக் குறைபாடுகள் நீங்கி, உடல் ஆரோக்கியம் சீராகும். உற்சாகம் அதிகரிக்கும். அதிர்ஷ்டக் காற்று வீசத் தொடங்கும். தந்தை வழியில் இருந்த சொத்து தகராறுகள் முடிவுக்கு வரும். பூர்வீக சொத்துக்களால் லாபம் உண்டாகும்.
இதையும் படியுங்கள்: Numerology: இந்த தேதிகள்ல பொறந்தவங்க வாழ்க்கையில பணத்துக்கு பஞ்சமே இருக்காதாம்.! நீங்க பிறந்த தேதி இருக்கா?
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சி எதிர்பாராத நன்மைகளைக் கொண்டு வரும். துலாம் ராசிக்காரர்களுக்கு அடுத்த சில தினங்களில் மகத்தான காலம் தொடங்க இருக்கிறது. உங்கள் வேலை மற்றும் தொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். நீங்கள் முக்கிய முடிவுகளையும், பொறுப்புகளையும் ஏற்க வேண்டிய நேரம் ஆகும்.
உயர்கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு ஆசை நிறைவேறும். உங்கள் அலுவலகத்தில் இருந்து வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகளைப் பெறுவீர்கள். புதிய வாகனம் அல்லது கார் வாங்கும் யோகம் உண்டு. பழைய வாகனங்களை விற்றுவிட்டு புதிய வாகனங்களை வாங்குவீர்கள். வீடு, நிலம், மனை, தங்கம் போன்ற நல்ல திட்டங்களில் முதலீடுகளைத் தொடங்குவீர்கள்.
இதையும் படியுங்கள்: Numerology: இந்த தேதிகளில் பிறந்தவர்கள் முரட்டு சிங்கிளாக இருப்பார்களாம்.! திருமணம் என்றாலே அலர்ஜியாம்.!
கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் நட்சத்திரப் பெயர்ச்சியால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்க இருக்கிறது. உங்கள் நிதி நிலைமை முன்பை விட பல மடங்கு உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்கள் கடன்கள் படிப்படியாக குறையும். திருமணம் ஆகாமல் தடை ஏற்பட்டு வந்தவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமைந்து திருமணம் கைகூடும். காதல் வயப்பட்டு இருப்பவர்களுக்கு குடும்பத்தினரின் ஒப்புதலுடன் திருமணம் நடக்கும்.
குழந்தை வரம் வேண்டி காத்திருக்கும் தம்பதிகளுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். உங்கள் குழந்தைகளால் பெருமை உண்டாகும். மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவார்கள். கணவன் மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி ஒற்றுமை பலப்படும். படித்து முடித்து வேலைக்காக காத்திருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு பன்னாட்டு நிறுவனங்களில் இருந்து வேலைக்கான அழைப்புகள் வரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

