- Home
- Astrology
- சுக்கிரன் அஸ்தமனத்தால் அடி வாங்கப் போகும் 4 ராசிக்காரர்கள்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள் இதோ!
சுக்கிரன் அஸ்தமனத்தால் அடி வாங்கப் போகும் 4 ராசிக்காரர்கள்.. தப்பிக்க எளிய பரிகாரங்கள் இதோ!
Shukra Asthamana 2026: சுக்கிர பகவான் செப்டம்பர் 23 முதல் அடுத்த 37 நாட்களுக்கு அஸ்தமன நிலையில் இருப்பார். இந்த 37 நாட்களும் இந்த 4 ராசிக்காரர்கள் ரொம்பவே உஷாராக இருக்க வேண்டும். இது குறித்து விரிவாக பார்ப்போம்.

Shukra Asthamana 2026
ஜோதிட சாஸ்திரத்தின்படி சுக்கிரன் அஸ்தமனம் ஆவதால் மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளிலும் நல்லதும் கெட்டதுமான மாற்றங்கள் நடக்கும். இதில் குறிப்பாக மேஷம், விருச்சிகம், மிதுனம், மகரம் ஆகிய 4 ராசிக்காரர்களுக்கு செப்டம்பர் 23-க்குப் பிறகான 37 நாட்கள் காதல், வேலை, ஆரோக்கியம் என எல்லாவற்றிலும் சிக்கல்கள் வரலாம். இதுகுறித்து விரிவான பலன்களை பார்ப்போம்.
மேஷம்
சுக்கிரன் அஸ்தமனத்துக்குப் பிறகு மேஷ ராசிக்காரர்கள் ரொம்ப உஷாராக இருக்க வேண்டும். இந்த நேரத்தில் உங்கள் தன்னம்பிக்கை குறையலாம். உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்காமல் மனது கஷ்டப்படும். பணப் பிரச்சனைகள் வரலாம். அதனால் பண பரிவர்த்தனைகளில் கவனமாக இருங்கள். அக்டோபர் மாதம் வரை வேலை பார்க்கும் இடத்தில் பல சவால்களை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும்.
பரிகாரம்: தினமும் அதிகாலையில் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை வழிபடுவது உங்களது தன்னம்பிக்கையை அதிகரிக்கும். ஏழைகளுக்கு அல்லது முதியவர்களுக்கு சிவப்பு நிற ஆடைகள் அல்லது உணவு தானங்களை தானமாக வழங்குவது சுக்கிரன் மற்றும் செவ்வாயின் தோஷங்களைக் குறைக்க உதவும்.
மிதுனம்
சுக்கிரன் அஸ்தமனம் மிதுன ராசிக்காரர்களுக்கு பல பிரச்சனைகளை கொடுக்கும். வாழ்க்கை துணையுடன் சண்டை அல்லது கருத்து வேறுபாடுகள் வரலாம். வேலையில் தடங்கல்கள் ஏற்படும். இந்த நேரத்தில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம், கொடுத்த பணம் திரும்ப வராது. வேலை தேடுபவர்கள் இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும். ஆபீஸ் அரசியலில் இருந்து தள்ளி இருங்கள், கோபத்தை கட்டுப்படுத்துங்கள்.
பரிகாரம்: ஒவ்வொரு நாளும் அல்லது புதன்கிழமைகளில் விஷ்ணு சகஸ்ரநாமம் பாராயணம் செய்வது அல்லது கேட்பது நல்லது. பசுக்களுக்கு அகத்திக்கீரை அல்லது பச்சைப் புல் வழங்குவது புதன் பகவானின் அருளைப் பெற்றுத் தரும்.
விருச்சிகம்
அக்டோபர் 30 வரை உள்ள காலம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு கொஞ்சம் மோசமாகவே இருக்கும். குடும்பத்தில் நிறைய பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். பண விஷயத்திலும் சிக்கல்கள் வரலாம். வியாபாரம் செய்பவர்கள் போட்டிகளை சந்திக்க நேரிடும். குழந்தைகளை பற்றிய கவலை அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் சண்டைகள் வரலாம். இந்த நேரத்தில் பயணங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்: தினமும் நரசிம்மர் அல்லது பைரவரை வழிபடுவது எதிர்ப்புகளையும், போட்டி மனப்பான்மையையும் சமாளிக்க உதவும். வெள்ளிக்கிழமைகளில் ஏழைப் பெண்களுக்கு வெள்ளை நிற வஸ்திரம் அல்லது சர்க்கரை தானம் வழங்குவது குடும்ப ஒற்றுமையைத் தரும்.
மகரம்
சுக்கிரன் அஸ்தமனத்தால் மகர ராசிக்காரர்களுக்கு கவலைகள் அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சும். மன அழுத்தம் அதிகமாகலாம். கடன் வாங்கும் சூழ்நிலை கூட வரலாம், அதனால் செலவுகளை குறைத்துக்கொள்ளுங்கள். மன உளைச்சலுக்கு ஆளாக வாய்ப்புள்ளது. ஜோதிடத்தின்படி, இந்த நேரத்தில் புது வேலைகளை தொடங்குவதை தவிர்க்க வேண்டும். நஷ்டம் வர வாய்ப்புள்ளதால் முதலீடுகள் செய்வதையும் தவிர்த்து விடுங்கள்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் சனீஸ்வர பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், எளியவர்களுக்கு அன்னதானம் செய்வதும் மன அழுத்தத்தைக் குறைக்கும்.

