MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Venus Transit: சுக்கிரன் பெயர்ச்சி..காதல், திருமணம், பண விஷயங்களில் என்ன மாற்றம்?

Venus Transit: சுக்கிரன் பெயர்ச்சி..காதல், திருமணம், பண விஷயங்களில் என்ன மாற்றம்?

Venus Transit: சுக்கிரன் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ள நிலையில் காதல், திருமணம், பணம், ஆடம்பரம், தொழில் உள்ளிட்ட விஷயங்களில் மாற்றங்கள் ஏற்படலாம் என ஜோதிடப் பார்வையில் கூறப்படுகிறது

3 Min read
Author : Vishnupriya
Published : Sep 20 2026, 09:23 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
சுக்கிரன் பெயர்ச்சி
Image Credit : pinterest

சுக்கிரன் பெயர்ச்சி

ஜோதிடத்தில் சுக்கிரன் என்பது காதல், திருமணம், தாம்பத்யம், கலை, அழகு, ஆடம்பரம், வசதி, வாகனம், செல்வம் உள்ளிட்ட விஷயங்களின் காரக கிரகமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ஒருவரின் உறவுகள் மற்றும் பொருளாதார வாழ்க்கையைப் புரிந்துகொள்ளும்போது சுக்கிரனின் நிலை முக்கியமாக பார்க்கப்படுகிறது.

தற்போது 2026 ஆம் ஆண்டில் செப்டம்பர் 2-ஆம் தேதி சுக்கிரன் கன்னி ராசியிலிருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைந்துள்ளடாக ஜோதிட கணக்குகள் குறிப்பிடுகின்றன. துலாம் சுக்கிரனின் சொந்த ராசி என்பதால், ஜோதிடப் பார்வையில் சுக்கிரனின் இயல்பான காரகத்துவங்கள் வலுப்பெறும் காலமாக இது பார்க்கப்படுகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
சுக்கிரன் துலாம் ராசிக்கு வந்தால் என்ன சிறப்பு?
Image Credit : pinterest

சுக்கிரன் துலாம் ராசிக்கு வந்தால் என்ன சிறப்பு?

துலாம் ராசி என்பது உறவுகள், திருமணம், தொழில் கூட்டாண்மை, விட்டுக்கொடுத்தல், சமரசம் மற்றும் பிறருடன் இணைந்து செயல்படுதல் போன்றவற்றுடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது.

சுக்கிரன் தனது சொந்த ராசியில் இருப்பதால்,

  • காதல் உறவுகளில் புரிதலுக்கு முக்கியத்துவம் ஏற்படலாம்.
  • திருமண பேச்சுகள் தீவிரமடையலாம்.
  • ஏற்கனவே இருக்கும் உறவில் சமரசம் மற்றும் விட்டுக்கொடுத்தல் அதிகரிக்கலாம்.
  • அழகு, ஆடை, கலை, பொழுதுபோக்கு சார்ந்த விஷயங்களில் ஆர்வம் அதிகரிக்கலாம்.
  • ஆடம்பரப் பொருட்கள் வாங்கும் எண்ணம் அதிகரிக்கலாம்.
  • கூட்டாண்மை சார்ந்த தொழில் மற்றும் வணிக பேச்சுவார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கிடைக்கலாம்.
37
காதல் வாழ்க்கையில் என்ன மாற்றம்?
Image Credit : pinterest

காதல் வாழ்க்கையில் என்ன மாற்றம்?

சுக்கிரன் காதல் மற்றும் உறவுகளின் முக்கிய காரகனாக கருதப்படுவதால், இந்தப் பெயர்ச்சி காதல் விஷயங்களில் கவனம் அதிகரிக்கும் காலமாக ஜோதிடத்தில் பார்க்கப்படுகிறது.

காதலர்கள் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது, எதிர்காலம் குறித்து பேசுவது போன்ற விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம். சிலருக்கு நீண்ட நாட்களாக இருந்த கருத்து வேறுபாடுகளை பேசி சரிசெய்யும் சூழல் உருவாகலாம்.

திருமணத்திற்காக காத்திருப்பவர்களுக்கு புதிய அறிமுகங்கள் ஏற்படுவது, திருமண பேச்சுகள் தொடங்குவது அல்லது ஏற்கனவே இருக்கும் உறவை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வது போன்ற விஷயங்களில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது.

47
திருமண வாழ்க்கையில் என்ன மாற்றம்?
Image Credit : pinterest

திருமண வாழ்க்கையில் என்ன மாற்றம்?

சுக்கிரன் துலாம் ராசியில் இருப்பது திருமண உறவில் சமநிலை மற்றும் புரிதல் தொடர்பான விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக்கூடிய காலமாக ஜோதிடர்கள் கருதுகின்றனர்.

  • கணவன் மனைவிக்குள் தேவையற்ற வாக்குவாதங்களைத் தவிர்த்து ஒருவருக்கொருவர் அதிக நேரம் செலவிடுவது,.
  • குடும்பம் தொடர்பான முக்கிய முடிவுகளை இணைந்து எடுப்பது
  • வீடு, வாகனம், அழகு மற்றும் வசதிகளுக்கான செலவுகள்
  • எதிர்காலத்திற்கான நீண்டகால குடும்பத் திட்டங்கள் குறித்தும் இருவரும் ஆலோசித்து முடிவெடுக்கலாம்.
57
பண விஷயங்களில் என்ன மாற்றம்?
Image Credit : pinterest

பண விஷயங்களில் என்ன மாற்றம்?

சுக்கிரன் செல்வம், ஆடம்பரம் மற்றும் பொருள் வசதிகளுடன் தொடர்புடையதாக ஜோதிடத்தில் கருதப்படுவதால், இந்தப் பெயர்ச்சிக் காலத்தில் பணவரவு, செலவுகள், சேமிப்பு மற்றும் பொருளாதாரத் திட்டங்கள் தொடர்பான விஷயங்களில் கவனம் அதிகரிக்கலாம். குறிப்பாக,

  • இந்த காலகட்டத்தில் புதிய வருமான வாய்ப்புகளைத் தேடுவது.
  • வணிகக் கூட்டாண்மையில் ஈடுபடுவது.
  • கலை, அழகு, ஃபேஷன் மற்றும் மீடியா போன்ற துறைகளில் புதிய வாய்ப்புகளைப் பெறுவது
  • ஆடம்பரப் பொருட்கள் வாங்குதல்
  • வீடு அல்லது வாகனம் தொடர்பான செலவுகள் செய்வது
  • ஏற்கனவே இருந்து வரும் பழைய பணப் பிரச்சினைகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கான முயற்சிகளும் மேற்கொள்ளப்படலாம்.

அதே நேரத்தில் சுக்கிரன் வலுவாக இருப்பதாகக் கருதப்படும் காலம் என்பதால் அதிக செலவு செய்வது நல்லது என்ற அர்த்தம் கிடையாது. ஆடம்பரச் செலவுகள் அதிகரிக்காமல் பட்ஜெட்டை கவனிப்பதும் அவசியம்.

67
தொழில் மற்றும் வியாபாரத்தில் தாக்கம்
Image Credit : pinterest

தொழில் மற்றும் வியாபாரத்தில் தாக்கம்

துலாம் ராசி கூட்டாண்மை மற்றும் பேச்சுவார்த்தையுடன் தொடர்புடையதாகக் கருதப்படுவதால், தொழிலில் மற்றவர்களுடன் இணைந்து செயல்பட வேண்டிய சூழல்கள் அதிகரிக்கலாம்.

மீடியா, கலை, ஃபேஷன், அழகு, டிசைன், பொழுதுபோக்கு, ஹாஸ்பிடாலிட்டி, விற்பனை, மக்கள் தொடர்பு போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு சுக்கிரனின் காரகத்துவங்கள் முக்கியமாக பார்க்கப்படுகின்றன.

வணிகத்தில் புதிய கூட்டாளரை தேர்வு செய்யும்போது வெறும் ஜோதிடப் பலனை மட்டும் நம்பாமல், ஒப்பந்தம், முதலீடு, பொறுப்புகள் மற்றும் நிதி நிலை ஆகியவற்றையும் முறையாக சரிபார்ப்பது அவசியம்.

77
முக்கியமாக கவனிக்க வேண்டிய காலம்
Image Credit : pinterest

முக்கியமாக கவனிக்க வேண்டிய காலம்

இந்த சுக்கிரப் பெயர்ச்சிக்கு இன்னொரு முக்கிய அம்சம் உள்ளது. ஜோதிடக் கணக்குகளின்படி, 2026 அக்டோபர் 3ஆம் தேதி சுக்கிரன் துலாம் ராசியிலேயே வக்கிரப் பயணத்தைத் தொடங்கி, 2026 நவம்பர் 14ஆம் தேதி வக்கிரநிவர்த்தி அடைகிறார்.

இதனால், அக்டோபர் முதல் நவம்பர் நடுப்பகுதி வரை காதல், திருமணம், பணம் மற்றும் ஆடம்பரச் செலவுகள் தொடர்பான விஷயங்களில் ஏற்கனவே எடுத்த முடிவுகளை மறுபரிசீலனை செய்வது அல்லது பழைய பிரச்சினைகள் மற்றும் பேசப்படாமல் இருந்த விஷயங்களை மீண்டும் எடுத்துப் பேசுவது போன்ற சூழல்கள் ஏற்படலாம் என்று ஜோதிடப் பார்வையில் கூறப்படுகிறது.

குறிப்பு: மேலே கூறப்படும் பலன்கள் பொதுவான ராசி அடிப்படையிலான ஜோதிடப் பார்வை. ஒருவருடைய தனிப்பட்ட பலனைத் துல்லியமாக அறிய லக்னம், சந்திர ராசி, பிறந்த நட்சத்திரம், தசா-புக்தி மற்றும் பிறப்பு ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை ஆகியவற்றையும் இணைத்து பார்க்க வேண்டும்.

About the Author

V
Vishnupriya
கா. விஷ்ணுபிரியா செய்தித் துறையில் 3 வருடம் அனுபவம் கொண்டவர். ETV Bharat இணையத்தளத்தில் பணியாற்றிய இவர் தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் மல்டிமீடியா ஜர்னலிஸ்டாக பணிபுரிகிறார். இவர் அரசியல், சினிமா மற்றும் லைஃப் ஸ்டைல் உள்ளிட்ட துறைகளில் தொடர்ந்து எழுதி வருகிறார்.
ஜோதிடம்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Weekly Horoscope: செப்.20 முதல் 26 வரை அதிரடி திருப்பம்.. இந்த 12 ராசிகளுக்கு என்ன காத்திருக்கு?
Recommended image2
Rasipalan: ஞாயிற்றுக்கிழமை அதிர்ஷ்டம் யாருக்கு? 12 ராசிகளுக்கும் இன்று குடும்பத்தில் நடக்கப்போவது..
Recommended image3
Zodiac Signs: யார் என்ன சொன்னாலும் உடனே நம்பி ஏமாறும் 5 ராசிகள்
Related Stories
Recommended image1
Astrology: ராகுவுடன் கூட்டணி அமைத்த புதன்.! கேதுவை அணைத்துக்கொண்ட குரு.! இனி 4 ராசிகளுக்கு சிங்கார வாழ்க்கை.!
Recommended image2
Lakshmi Narayana Yoga: லட்சுமி நாராயண யோகம்; புதன்-சுக்கிரன் சேர்க்கையால் பலன் பெறும் 4 ராசிகள் இவைதான் - முழு லிஸ்ட் உள்ளே
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved