செவ்வாய் பெயர்ச்சியால் கோடீஸ்வர யோகம் பெறும் 4 ராசிகள்.. சொந்த வீடு கனவு நனவாகும்!
Mars Transit 2026: செவ்வாய் பெயர்ச்சியால் 4 ராசிகள் கோடீஸ்வர யோகம் பெறப்போகின்றன. இந்த ராசிக்காரர்களின் சொந்த வீடு வாங்கும் கனவு நனவாகப் போகிறது. இது குறித்து விரிவான பலன்களை பார்ப்போம்.

செவ்வாய் பெயர்ச்சி 2026
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நவகிரகங்களின் தளபதியாகப் போற்றப்படும் செவ்வாய் பகவான், தைரியம், வீரம், தன்னம்பிக்கை மற்றும் நிலம், கட்டிடங்களுக்கு உரிய காரணியாக விளங்குகிறார். இவர் மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளின் அதிபதியாவார். பொதுவாக செவ்வாய் பகவான் சுமாா் 45 நாட்களுக்கு ஒருமுறை தனது இடத்தை மாற்றக்கூடியவர். அந்த வகையில், கடந்த செப்டம்பர் 18 அன்று செவ்வாய் பகவான் சந்திரன் ஆளும் கடக ராசிக்குள் பிரவேசித்துள்ளார்.
கடக ராசியில் செவ்வாய் நீச்சம் பெற்றாலும், அதே ராசியில் தேவகுருவான குரு பகவான் அமர்ந்திருப்பதால் 'குரு-மங்கள யோகம்' உருவாகியுள்ளது. இந்த கிரகங்களின் சேர்க்கை மற்றும் இடமாற்றம் அனைத்து ராசிகளிலுமே குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தினாலும், குறிப்பான சில ராசிக்காரர்களுக்கு இது மிகப்பெரிய அளவில் நன்மைகளைத் தரவுள்ளது. குறிப்பாக, நீண்ட நாட்களாகக் கனவில் இருந்த சொந்த வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் சில ராசிக்காரர்களைத் தேடி வரப் போகிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.
1. மேஷம்
மேஷ ராசியின் நான்காம் வீட்டிற்கு செவ்வாய் பெயர்ச்சியாகியுள்ளார். நான்காம் வீடு என்பது சுகஸ்தானம், சொத்து மற்றும் வாகனங்களை குறிக்கும் இடமாகும். எனவே, இந்த ராசிக்காரர்களுக்கு அசையா சொத்துக்கள் வாங்கும் வாய்ப்புகள் பிரகாசமாகியுள்ளன. புதிய வீடு அல்லது சொகுசு வாகனம் வாங்கும் கனவு நனவாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிர்பாராத அளவில் பண வரவு அதிகரிக்கும். ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையில் இருப்பவர்களுக்கு இந்த காலம் பொற்காலமாக அமையும்.
2. விருச்சிகம்
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் வீட்டிற்குச் செவ்வாய் செல்வதால், உங்கள் அதிர்ஷ்டக் கதவுகள் திறக்கப்படவுள்ளன. உத்தியோகம் மற்றும் தொழில் நிமித்தமாக மேற்கொள்ளும் பயணங்கள் நல்ல லாபத்தை தரும். குடும்பத்தினரின் ஆதரவுடன் நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த சொத்து விவகாரங்கள் உங்களுக்கு சாதகமாக முடிவுக்கு வரும். தந்தைவழி சொத்துக்கள் மூலம் பெரிய அளவிலான லாபம் அல்லது பரம்பரை சொத்து கைக்கு வந்து சேரும் யோகம் உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சிகளும் வெற்றியடையும்.
3. தனுசு
தனுசு ராசியின் எட்டாம் வீட்டிற்கு செவ்வாய் பெயர்ச்சியாகியுள்ளார். இதன் காரணமாக உங்கள் வாழ்க்கையில் சிலிர்ப்பூட்டும் திடீர் மாற்றங்கள் நிகழக்கூடும். மூதாதையர் சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் விலகி, அவை உங்களுக்குச் சொந்தமாகும் வாய்ப்புள்ளது. பல்வேறு வழிகளில் இருந்தும் பணம் தேடி வரும் என்பதால், உங்கள் பொருளாதார நிலை உயரும். எனினும், பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யும்போதும், பத்திரப் பதிவுகளை மேற்கொள்ளும்போதும் கூடுதல் விழிப்புடன் இருப்பது நல்லது.
4. சிம்மம்
சிம்ம ராசியை பொறுத்தவரை, செவ்வாயின் இந்த சஞ்சாரம் பன்னிரண்டாம் வீட்டில் நிகழ்கிறது. இதனால் வெளிநாடு தொடர்பான விஷயங்களில் இருந்த தடைகள் நீங்கும். மேலும், நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த முக்கியமான வேலைகள் வெற்றிகரமாக முடிவடையும். புத்திசாலித்தனமான முதலீடுகள் மூலம் கணிசமான லாபத்தைப் பெறுவீர்கள். ஆன்மீக ஈடுபாடு அதிகரிக்கும் அதேவேளையில், ஆடம்பரப் பொருட்கள் மற்றும் சொந்த வீடு வாங்குவதற்கான முயற்சிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படும்.

