MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • சனி - செவ்வாய் பார்வை: ஆகஸ்ட் வரை' இந்த' 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! உங்க ராசி இருக்கா?

சனி - செவ்வாய் பார்வை: ஆகஸ்ட் வரை' இந்த' 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை! உங்க ராசி இருக்கா?

Shani Mangal Drishti 2026: சனி - செவ்வாய் பார்வையில் ஆகஸ்ட் மாதம் வரை 4 ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழியப் போகிறது. அவை என்னெனன் ராசிகள்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jul 11 2026, 11:28 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Shani Mangal Drishti 2026
Image Credit : AI

Shani Mangal Drishti 2026

ஜோதிட ரீதியாக ஜூலை மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் பல முக்கிய கிரகங்களின் இயக்கத்தில் பெரிய மாற்றங்கள் நிகழ்கின்றன. குறிப்பாக, சனி பகவான் வக்ர நிலையில் பின்னோக்கி நகரத் தொடங்கியுள்ளார். அதே நேரத்தில், மங்கள காரகனான செவ்வாய் பகவான் ரிஷப ராசிக்குள் நுழைந்துள்ளார்.

தற்போது சனி பகவான் மீன ராசியிலும், செவ்வாய் பகவான் ரிஷப ராசியிலும் சஞ்சரிக்கின்றனர். ஜோதிட விதிகளின்படி, சனி பகவானுக்கு 3, 7, 10 ஆகிய சிறப்புப் பார்வைகள் உண்டு. அந்த வகையில், மீனத்தில் இருக்கும் சனியின் 3-வது பார்வை, ரிஷபத்தில் இருக்கும் செவ்வாயின் மீது விழுகிறது. இந்த இரு சக்திவாய்ந்த கிரகங்களின் பார்வையால், ஆகஸ்ட் மாதம் வரை சில ராசிக்காரர்களின் வாழ்வில் அதிர்ஷ்டக் காற்று வீசப்போகிறது. அந்தப் அதிர்ஷ்ட ராசிகள் எவை என்று பார்ப்போம். 

இதையும் படிங்க: வீட்டில் பணம் தங்கலையா? பீரோ, பணப்பெட்டியை 'இந்த' திசையில் வைங்க.. செல்வம் பொங்கும்!

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
25
ரிஷபம்
Image Credit : Asianet News

ரிஷபம்

ரிஷப ராசியில் உள்ள செவ்வாய் மீது சனியின் பார்வை விழுவதால், இந்த ராசிக்காரர்களுக்கு பொற்காலம் என்றே சொல்லலாம். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு புதிய முயற்சியும் எதிர்பார்த்ததை விடப் பெரிய வெற்றியைத் தரும். நீண்ட நாட்களாக இழுபறியில் இருந்த காரியங்கள் அனைத்தும் தடங்கலின்றி முடியும். இந்த காலகட்டத்தில் நீங்கள் போடும் புதிய திட்டங்கள் அனைத்தும் உங்களுக்கு லாபத்தையும், நற்பெயரையும் தேடித்தரும்.

இதையும் படிங்க: Chanakya Niti: வேலையில் சீக்கிரம் புரொமோஷன் வேணுமா? இந்த 5 டிப்ஸை ஃபாலோ பண்ணுங்க!

Related Articles

Related image1
Astrology: குரு செய்யும் மாயாஜாலம்.! சனி திசையிலும் 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.! உங்க ராசி இருக்கா?
Related image2
Love Horoscope: மனைவியை ராணி போல் தாங்கும் 'அந்த' 4 ராசி ஆண்கள்! காதல் மன்னர்கள்!
35
கன்னி
Image Credit : Asianet News

கன்னி

சனியின் 3-ஆம் பார்வை செவ்வாயின் மீது படுவதால், கன்னி ராசியினருக்கு ஆகஸ்ட் மாதம் வரை நற்பலன்கள் தேடி வரும். பணிபுரியும் இடத்தில் உங்களின் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகளும், சம்பள உயர்வும் கிடைக்க வாய்ப்புள்ளது. நிதி நிலைமையில் பெரிய முன்னேற்றம் உண்டாகும். தொழிலை விரிவுபடுத்த நினைப்பவர்களுக்கு இது சாதகமான சூழல். வியாபாரத்தில் லாபம் இரட்டிப்பாகும்.

இதையும் படிங்க: புதன் தரும் பத்ர ராஜயோகம் 2026: கடன் தீரும், காசு சேரும்.. அதிர்ஷ்டக் காற்றில் மிதக்கப்போகும் 3 ராசிகள்!

45
மகரம்
Image Credit : Asianet News

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு சனியின் இந்த பார்வை மாற்றமானது, ஆகஸ்ட் மாதம் வரை பெரும் நன்மைகளை அள்ளித் தரப்போகிறது. நீங்கள் நீண்ட நாட்களாகப் பட்ட கஷ்டங்களுக்கும், கடின உழைப்பிற்கும் இப்போது தகுந்த பலன் கிடைக்கும். நீதிமன்ற விவகாரங்கள் மற்றும் சட்டப் பிரச்சனைகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்பு வரும். எதிர்பாராத பண வரவும், நல்ல செய்திகளும் தேடி வரும். முந்தைய முதலீடுகள் மூலம் சிறப்பான லாபத்தைக் காண்பீர்கள்.

55
கும்பம்
Image Credit : Asianet News

கும்பம்

கும்ப ராசியினருக்கு இந்த கிரகங்களின் சேர்க்கை தொழில் ரீதியாகப் பெரிய திருப்பங்களை ஏற்படுத்தப் போகிறது. நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக் கிடந்த பணம் கைக்கு வந்து சேரும். ஒன்றுக்கு மேற்பட்ட புதிய வருமான வழிகள் உருவாகும். திடீர் பணவரவால் சேமிப்பு உயரும். தொழிலில் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வியாபாரிகளுக்கு இந்த காலகட்டம் லாபத்தை வாரி வழங்கும் பொன்னான நேரமாக அமையும்.

பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Rahu Transit 2026: இனி உங்களுக்கு ஏறுமுகம் தான்! ஆகஸ்ட் 2 முதல் ராகு பகவானின் ஆட்டத்தால் இந்த 3 ராசிகளுக்கு திடீர் ஜாக்பாட்!
Recommended image2
Astrology : கண்ட யோகம் + விருத்தி யோகம்: சனி பகவான் அருளால் பணமழையில் நனையப்போகும் 5 ராசிகள்!
Recommended image3
Astrology: குரு செய்யும் மாயாஜாலம்.! சனி திசையிலும் 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: குரு செய்யும் மாயாஜாலம்.! சனி திசையிலும் 3 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம்.! உங்க ராசி இருக்கா?
Recommended image2
Love Horoscope: மனைவியை ராணி போல் தாங்கும் 'அந்த' 4 ராசி ஆண்கள்! காதல் மன்னர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved