- Home
- Astrology
- Astrology: சனி-கேது சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளின் காட்டில் 'இனி' பண மழை தான்! உங்க ராசி இருக்கா?
Astrology: சனி-கேது சேர்க்கை 2026: இந்த 3 ராசிகளின் காட்டில் 'இனி' பண மழை தான்! உங்க ராசி இருக்கா?
Shani Ketu Conjunction 2026: சனி-கேது சேர்க்கையால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தால் 2026 இறுதி வரை 3 ராசிகளின் காட்டில் பணமழை பொழிய போகிறது. அவை என்னென்ன ராசிகள்? என்பது குறித்து பார்ப்போம்.

சனி-கேது சேர்க்கையால் ஷடாஷ்டக யோகம்
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சியும், அவற்றால் ஏற்படும் சேர்க்கைகளும் மனித வாழ்க்கையில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில், தற்போது சனி மற்றும் கேது ஆகிய கிரகங்களின் இணைப்பால் 'ஷடாஷ்டக யோகம்' உருவாகியுள்ளது. இந்த கிரக நிலை வரும் நவம்பர் 2026 இறுதி வரை நீடிக்கும் என்று ஜோதிட நிபுணர்கள் கணிக்கின்றனர்.
இந்தக் கிரக அமைப்பானது சில ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தப் போகிறது. குறிப்பாக, மூன்று ராசியினருக்கு தொழில், வியாபாரம் மற்றும் நிதி நிலைகளில் எதிர்பாராத நன்மைகளும் அதிர்ஷ்டமும் கிடைக்கவுள்ளன. அந்த அதிர்ஷ்டப் பிரசாதத்தைப் பெறப்போகும் ராசிகள் எவை என்று கீழே பார்ப்போம்.
இதையும் படிங்க: உயிரே போனாலும் இந்த 5 பேர் வீட்ல சாப்பிடாதீங்க!: https://tamil.asianetnews.com/gallery/astrology/why-not-eat-at-these-5-houses-chanakya-niti-w3lxmx8
மேஷ ராசி
மேஷ ராசியினருக்கு இந்த 'ஷடாஷ்டக யோகம்' பல சாதகமான திருப்பங்களைக் கொண்டுவரவுள்ளது. இவர்களின் சுயநம்பிக்கை பலமடங்கு அதிகரிப்பதுடன், கூட்டுத்தொழில் மற்றும் சுயதொழிலில் நல்ல லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்குப் பதவி உயர்வு மற்றும் புதிய பொறுப்புகள் தேடிவரும்.
பொருளாதார ரீதியாகப் பணப்புழக்கம் அதிகரித்து, நிதி நிலைமை சீராகும். புதிய சொத்துக்கள் அல்லது வாகனங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், சுபகாரியங்களுக்கான பேச்சுவார்த்தைகளும் கைகூடும். திருமணமானவர்களின் வாழ்வில் அன்யோன்யம் கூடும்; சிங்கிளாக இருப்பவர்களுக்குப் பொருத்தமான வரன் அமைய வாய்ப்புள்ளது.
பரிகாரம்: ஏழை எளியவர்களுக்கு அல்லது துப்புரவுத் தொழிலாளர்களுக்கு உங்களால் இயன்ற உளுந்து கலந்த உணவு அல்லது கருப்பு நிற ஆடைகளைத் தானமாக வழங்கலாம். இது கூடுதல் முன்னேற்றத்தை கொடுக்கும்.
மிதுன ராசி
மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் பல்வேறு வழிகளில் பண வரவைத் தேடித்தரும். நீண்ட நாட்களாக மனதை வாட்டி வதைத்த குழப்பங்களுக்கும் பிரச்சினைகளுக்கும் ஒரு தெளிவான தீர்வு கிடைக்கும். தொழிலில் முதலீடுகளுக்கு ஏத்த இரட்டிப்பு லாபத்தைக் காணலாம்.
பணியிடத்தில் மேலதிகாரிகளின் ஆதரவோடு உங்கள் திறமைகள் அங்கீகரிக்கப்படும். மாணவர்கள் கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்களுடன் சாதனை படைக்க வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்தமாக உங்கள் லட்சியங்களை நோக்கி எளிதாக முன்னேறும் பொற்காலமாக இது அமையும்.
பரிகாரம்: புதன்கிழமைகளில் பசு மாட்டிற்கு அகத்திக் கீரை அல்லது பச்சைப் பயறு வழங்குவது கல்வியிலும் தொழிலிலும் பெரும் முன்னேற்றத்தைத் தரும்.
இதையும் படிங்க: மகாலட்சுமி யோகத்தால் 'ஓஹோன்னு' வாழப்போகும் 4 ராசிகள்!: https://tamil.asianetnews.com/gallery/astrology/maha-lakshmi-rajayoga-july-2026-4-zodiac-signs-to-get-wealth-and-success-nqpmx59
தனுசு ராசி
தனுசு ராசியினருக்கு நீண்ட நாள் கனவுகளும் ஆசைகளும் நிறைவேறும் காலகட்டமாக இது இருக்கும். சமுதாயத்தில் உங்களுக்கான மதிப்பும் மரியாதையும் அந்தஸ்தும் உயரும். உங்களின் கனிவான பேச்சும் சாதுரியமான நடத்தையும் குடும்பத்தினரிடமும், சுற்றத்தாரிடமும் நல்ல உறவை மேம்படுத்த உதவும்.
குறிப்பாக, வெளிநாட்டுத் தொடர்புகள் மற்றும் ஏற்றுமதி-இறக்குமதி வணிகத்தில் இருப்பவர்களுக்குப் பெருமளவு லாபம் கிடைக்கும். ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வருமானம் வருவதற்கான புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இது மிகவும் சாதகமான நேரமாகும்.
பரிகாரம்: சனிக்கிழமைகளில் அரச மரத்திற்கு அடியில் நல்லெண்ணெய் தீபமேற்றி, காகங்களுக்கு சமைத்த சாதத்தில் கொஞ்சம் கருப்பு எள் கலந்து வைப்பது கேது மற்றும் சனியின் தோஷங்களை நீக்கி நன்மைகளைத் தரும்.

