MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • அஸ்வினி நட்சத்திரத்தில் குடியேறும் செவ்வாய் பகவான்.! மே முழுவதும் இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும்.! அதிர்ஷ்டம் பெருகும்.!

அஸ்வினி நட்சத்திரத்தில் குடியேறும் செவ்வாய் பகவான்.! மே முழுவதும் இந்த 4 ராசிகளுக்கு பணமழை கொட்டும்.! அதிர்ஷ்டம் பெருகும்.!

Sevvai Bhagavan Ashwini Natchathira Peyarchi : செவ்வாய் பகவான் விரைவில் அஸ்வினி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். இதன் காரணமாக மே மாதத்தில் நான்கு ராசிகளுக்கு பணமழை கொட்ட இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 12 2026, 10:47 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Sevvai Bhagavan Ashwini Natchathira Peyarchi
Image Credit : Asianet News

Sevvai Bhagavan Ashwini Natchathira Peyarchi

வேத ஜோதிடத்தில் செவ்வாய் பகவான் கிரகங்களின் தளபதியாக அறியப்படுகிறார். இவர் ஆற்றல், வீரம், துணிச்சல் ஆகியவற்றின் காரகராவார். இவர் குறிப்பிட்ட கால இடைவெளியில் தனது நட்சத்திரத்தை மாற்றுகிறார். அந்த வகையில் மே 11 ஆம் தேதி அவர் அஸ்வினி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாக இருக்கிறார். ஜோதிடத்தில் இந்த பெயர்ச்சி சுபமான பெயர்ச்சியாக கருதப்படுகிறது. செவ்வாய் பகவானின் இந்த பெயர்ச்சியானது சில ராசிக்காரர்களுக்கு பொருளாதார முன்னேற்றத்தை மட்டுமின்றி, பணி சார்ந்த முன்னேற்றத்தையும் வழங்க இருக்கிறது.

26
செவ்வாய் பகவான் அஸ்வினி நட்சத்திரப் பெயர்ச்சி
Image Credit : Asianet News

செவ்வாய் பகவான் அஸ்வினி நட்சத்திரப் பெயர்ச்சி

செவ்வாய் பகவானின் அஸ்வினி நட்சத்திர பெயர்ச்சியானது மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி அவர் உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைந்தார். இந்த நிலையில் மே 11 திங்கட்கிழமை மதியம் 12:00 மணியளவில் அஸ்வினி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி அடைய இருக்கிறார். அஸ்வினி நட்சத்திரம் கேது பகவானுக்கு சொந்தமான நட்சத்திரம் ஆகும். அவர் மே 29 வரை அஸ்வினி நட்சத்திரத்தில் பயணிப்பார். இந்த சுப பெயர்ச்சியால் நான்கு ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டம் மிக சிறப்பாக இருக்கும். அந்த ராசிகள் பற்றி பார்க்கலாம்.

Related Articles

Related image1
தங்கம் விலை விண்ணைத் தொடும்.! AI-யால் அனைவரின் வேலை பறிபோகும்.! பணம் செல்லாமல் போகும்.! அதிர வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்.!
Related image2
தமிழ் புத்தாண்டு அன்று சுக்கிரன் உருவாக்கும் அர்த்த கேந்திர ராஜயோகம்.! 3 ராசிகளுக்கு பணமழை.! வாழ்வில் புதிய உச்சம் பெறுவீர்கள்.!
36
மேஷம்
Image Credit : Asianet News

மேஷம்

மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இவர் அஸ்வினி நட்சத்திரத்திற்கு பெயர்ச்சியாவது என்பது மேஷ ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தை அளிக்கும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். தைரியம் கூடும். கடினமான வேலைகள் முடிக்கப்படும். இழுபறியில் இருந்த வேலைகளை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். வேலையில் சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். பணியிடத்தில் புதிய வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். செலவுகள் அதிகரித்தாலும் வரவும் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும்.

46
மிதுனம்
Image Credit : Asianet News

மிதுனம்

செவ்வாய் பெயர்ச்சி மிதுன ராசிக்காரர்களின் வாழ்க்கையில் புதிய தொடக்கங்களை கொண்டு வரும். வேலையிடத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். சமூகத்தில் மதிப்பு உயரும். தொழிலில் முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். பணியிடத்தில் வளர்ச்சியின் மீது கவனம் செலுத்தி எதிர்காலத்திற்கு தேவையான பலன்களை அடைவீர்கள். மே மாதம் முழுவதும் மிதுன ராசிக்காரர்கள் புதிய உற்சாகத்துடனும், தன்னம்பிக்கையுடனும் காணப்படுவீர்கள்.

56
சிம்மம்
Image Credit : Asianet News

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு செவ்வாய் பகவானின் அஸ்வினி நட்சத்திரப் பெயர்ச்சி பொருளாதார ரீதியான நன்மைகளை வழங்கும். இந்த காலகட்டத்தில் பொருளாதாரம் சிறக்கும். வீடு, நிலம் போன்ற சொத்துக்களை வாங்கும் வாய்ப்புகள் உருவாகும். உங்களை வாட்டி வதைத்து வந்த உடல்நலப் பிரச்சினைகள் குறையும். உடல் ஆரோக்கியம் மேம்படும். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். பார்ட்னர்ஷிப் தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள்.

66
விருச்சிகம்
Image Credit : Asianet News

விருச்சிகம்

செவ்வாய் பெயர்ச்சி என்பது விருச்சிக ராசிக்காரர்களுக்கு சுப பலன்களை அளிக்கும். பணியிடத்தில் இருந்து வந்த அரசியல் அகலும். தொழிலில் இருந்து வந்த எதிரிகள் விலகுவார்கள். போட்டி, பொறாமைகள் குறையும். பொருளாதார நிலை மேம்படும். குடும்ப உறுப்பினர்களிடையே இருந்து வந்த தகராறுகள் தீர்க்கப்படும். பணியில் இருந்து வந்த தடைகள் நீங்கும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்
இன்றைய இராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Morning Rituals: காலையில் எழுந்ததும் இந்த 4 பேரை நினைத்தால் போதும்... உங்கள் வாழ்க்கை பொற்காலமாக மாறும்! அதிர்ஷ்டம் தேடி வரும் ரகசியம்!
Recommended image2
ஏப்ரல் 12: இந்த 4 ராசிக்காரர்கள் இன்று ஒரு ரூபாய் கூட செலவு செய்யாதீங்க! ஏன் தெரியுமா?
Recommended image3
மேஷம் முதல் மீனம் வரை.. இன்று அதிர்ஷ்டத்தை தட்டி தூக்கும் ராசிகள் என்னென்ன? முழு பலன்கள் இதோ!
Related Stories
Recommended image1
தங்கம் விலை விண்ணைத் தொடும்.! AI-யால் அனைவரின் வேலை பறிபோகும்.! பணம் செல்லாமல் போகும்.! அதிர வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்.!
Recommended image2
தமிழ் புத்தாண்டு அன்று சுக்கிரன் உருவாக்கும் அர்த்த கேந்திர ராஜயோகம்.! 3 ராசிகளுக்கு பணமழை.! வாழ்வில் புதிய உச்சம் பெறுவீர்கள்.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved