MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • தங்கம் விலை விண்ணைத் தொடும்.! AI-யால் அனைவரின் வேலை பறிபோகும்.! பணம் செல்லாமல் போகும்.! அதிர வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்.!

தங்கம் விலை விண்ணைத் தொடும்.! AI-யால் அனைவரின் வேலை பறிபோகும்.! பணம் செல்லாமல் போகும்.! அதிர வைக்கும் பாபா வங்கா கணிப்புகள்.!

Baba Vanga Prediction About Gold : 2026 ஆம் ஆண்டு தங்கத்தின் விலை விண்ணை தொடும், பணம் செல்லாமல் போகும், பொருளாதாரத்தில் மிகப்பெரிய பின்னடைவு ஏற்படும் என்று பிரபல தீர்க்கதரிசி பாபா வங்கா கணித்துள்ளார். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். 

2 Min read
Author : Ramprasath S
Published : Apr 10 2026, 02:59 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Baba Vanga Prediction About Gold
Image Credit : Gemini AI

Baba Vanga Prediction About Gold

உலகில் என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே கணித்து சொல்வதில் பாபா வங்கா பிரபலமானவராக அறியப்படுகிறார். பார்வை மாற்றுத் திறனாளியான இவர், பல்கேரியா நாட்டைச் சேர்ந்தவர். இவருடைய பல கணிப்புகள் உண்மையாகி உள்ளன. இந்த நிலையில் அவர் 2026 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும், தங்கம் விலை குறித்தும், உலகம் சந்திக்க இருக்கும் நெருக்கடிகள் குறித்தும் அவர் கூறியுள்ள தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

26
தங்கம் குறித்து பாபா வங்காவின் கணிப்புகள்
Image Credit : AI

தங்கம் குறித்து பாபா வங்காவின் கணிப்புகள்

பாபா வங்காவின் கணிப்புப்படி 2026 ஆம் ஆண்டில் உலக நாடுகள் மிகப்பெரிய பண நெருக்கடியை சந்திக்கும் என்று கூறியிருக்கிறார். தற்போது புழக்கத்தில் இருக்கும் காகித பணம் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளில் பெரும் குழப்பம் நிலவும் என்றும், வங்கி அமைப்புகளின் பலவீனம் காரணமாக மக்கள் பணத்தின் மீதான நம்பிக்கையை இழந்து விடுவார்கள் என்றும், உலகளாவிய கடன் சுமை அதிகரிக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.

Related Articles

Related image1
Baba Vanga: பாபா வங்கா கணிப்பு உண்மையாகிறதா? இந்தியாவில் தொடரும் நில அதிர்வுகள்!
Related image2
இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. லாட்டரியில் பணம் கொட்டப்போகுது.. பாபா வங்கா சொன்ன ரகசியம்!
36
செம்பின் தேவையும், மதிப்பும் உயரும்
Image Credit : X

செம்பின் தேவையும், மதிப்பும் உயரும்

மேலும் பொருளாதாரம் வீழ்ச்சி அடையும் பொழுது முதலீட்டாளர்கள் உலோகங்களை தேடி ஓடுவார்கள் என்றும், உலோகங்களை பாதுகாப்பான முதலீடுகளாக அவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார். தங்கம், வெள்ளி, செம்பு ஆகியவற்றின் விலைகள் இதுவரை கண்டிராத அளவிற்கு உச்சத்தை அடையும் என்று கூறியுள்ள பாபா வங்கா, வெள்ளி மற்றும் செம்பு தங்கத்திற்கு இணையான அளவு முக்கியத்துவம் பெறும் என கணித்துள்ளார். மேலும் செம்பின் தேவை அதிகரிப்பதால் செம்பு, ‘புதிய தங்கம்’ என்று அழைக்கப்படும் அளவிற்கு மதிப்பு பெறும் என்று அவர் கூறியுள்ளார்.

46
AI காரணமாக வேலை பறிபோகும் அபாயம்
Image Credit : AI

AI காரணமாக வேலை பறிபோகும் அபாயம்

உலக நாடுகளுக்கு இடையே நடக்கும் போர் பதற்றங்கள், அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான போட்டிகள் ஆகியவை உலகப் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் என்றும், 2026 இல் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள், நில நடுக்கங்கள், இயற்கை சீற்றங்கள் பருவநிலை மாற்றங்கள் ஆகியவை உலக சங்கிலியை பாதித்து பொருட்களின் விலையை கணிசமாக உயர்த்தும் என்றும், செயற்கை நுண்ணறிவு (ஏஐ) காரணமாக வேலை வாய்ப்புகள் பறிபோகும் அபாயம் இருப்பதாகவும், பொருளாதார முறைகள் கடும் மாற்றத்தை சந்திக்கும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளார்.

56
உண்மையாகும் பாபா வங்கா கணிப்புகள்
Image Credit : Asianet News

உண்மையாகும் பாபா வங்கா கணிப்புகள்

பாபா வங்காவின் பல கணிப்புகள் உண்மையாகி வரும் நிலையில் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலேயே தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது பாபா வங்காவின் கணிப்புகளை மெய்பிப்பது போல உள்ளது. பங்குச் சந்தையில் நிலவும் நிலையற்றத் தன்மை, மத்திய வங்கிகள் அதிக அளவில் தங்கத்தை இருப்பு வைக்கத் தொடங்கி இருப்பது ஆகியவை உலோகங்களின் மீதான முதலீட்டையும் அதிகரித்துள்ளது.

66
முக்கிய குறிப்புகள்
Image Credit : Pixabay

முக்கிய குறிப்புகள்

பாபா வங்காவின் கணிப்புகள் பலமுறை உண்மையாக இருந்தாலும், இவை அனைத்தும் ஒரு வழிகாட்டுதலே தவிர உறுதியான முடிவுகள் கிடையாது. அவரின் கணிப்புகள் எழுத்துப்பூர்வமானவை கிடையாது. அவர் வாய்வழியில் கூறிய கணிப்புகளை அவரது சீடர்கள் குறிப்பு எடுத்து வைத்துள்ளனர். எனவே இதன் உண்மைத் தன்மை குறித்து கேள்வி எழுந்துள்ளது. இருப்பினும் 2026 ஆம் ஆண்டு பொருளாதார ரீதியாக முக்கிய திருப்புமுனையாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
பாபா வங்கா
பாபா வங்கா கணிப்புகள்
ஆன்மீகம்

Latest Videos
Recommended Stories
Recommended image1
வெள்ளி மோதிரம் அணிந்தால் பண நஷ்டம் ஏற்படுமா? இந்த ராசிக்காரர்கள் மட்டும் கவனமாக இருங்கள்!
Recommended image2
Ashtama Shani: அஷ்டம சனி: கர்ம வினைகளைக் கழிக்கும் காலம்! எந்த ராசிக்கு பாதிப்பு? முழு விவரம் உள்ளே
Recommended image3
ஏப்ரல் 17 முதல் சனியின் அக்னி பரீட்சை.. 'இந்த' 4 ராசிக்காரர்களுக்கு தலைவலி.. தப்பிக்க என்ன வழி?
Related Stories
Recommended image1
Baba Vanga: பாபா வங்கா கணிப்பு உண்மையாகிறதா? இந்தியாவில் தொடரும் நில அதிர்வுகள்!
Recommended image2
இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்.. லாட்டரியில் பணம் கொட்டப்போகுது.. பாபா வங்கா சொன்ன ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved