- Home
- Astrology
- Astrology: புதன் பகவான் உருவாக்கும் சக்தி வாய்ந்த யோகம்.! இந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்குது
Astrology: புதன் பகவான் உருவாக்கும் சக்தி வாய்ந்த யோகம்.! இந்த 3 ராசிகளுக்கு நல்ல காலம் பொறக்குது
செப்டம்பர் 3 ஆம் தேதி புதன் பகவான் உருவாக்கும் கேந்திர யோகத்தால் மூன்று ராசிகள் நல்ல பலன்களை தரவுள்ளன. அதுகுறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

யுரேஸை சந்திக்கும் புதன்
வேத ஜோதிடத்தில் புதன் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுகிறார். இவர் புத்தி, வணிகம், தகவல் தொடர்பு, கல்வி, பேச்சுத்திறன் ஆகியவற்றின் காரகராக கருதப்படுகிறார். புதன் ஒரு மாதத்திற்கு இரண்டு முறை தனது ராசியை மாற்றுகிறார். அதேபோல் ஜோதிடத்தில் முக்கிய கிரகமாக கருதப்படுபவர் யுரேனஸ். இவர் புதுமை, திடீர் மாற்றங்கள், புரட்சிகரமான சிந்தனைகள், எதிர்பாராத நிகழ்வுகளுடன் தொடர்புடையது. இது நவீன கிரகமாக கருதப்பட்டாலும், இதன் தாக்கம் குறிப்பிடத்தகுந்ததாக உள்ளது. இந்த இரு கிரகங்களும் 90 டிகிரி கோணத்தில் அமையும் போது கேந்திர யோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக 3 ராசிகள் நல்ல பலன்களை அனுபவிக்க உள்ளனர்.
கேந்திர யோகம் 2025
செப்டம்பர் முதல் வாரத்தில் புதன் சிம்ம ராசியில் பயணிக்கிறார். அந்த சமயம் அவர் யுரேனஸ் கிரகத்தை 90 டிகிரி தொலைவில் சந்திக்கிறார். இரு கிரகங்கள் கேந்திர ஸ்தானங்களில் சந்திக்கும் போது உருவாகும் ஒரு சக்தி வாய்ந்த யோகாமகும். செப்டம்பர் 03 ஆம் தேதி 1:08 மணிக்கு புதன் - யுரேனஸ் ஒருவருக்கொருவர் 90 டிகிரியில் இருப்பார்கள். இதன் காரணமாக கேந்திர யோகம் உருவாகிறது. இந்த யோகம் கேந்திர திருஷ்டி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த யோகத்தின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும் என்றாலும், குறிப்பட்ட 3 ராசிகளுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். அது குறித்து இங்கு பார்க்கலாம்.
ரிஷப ராசி:
இந்த ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகம் நல்ல பலன்களை அளிக்கவுள்ளது. ரிஷப ராசியின் 4வது வீட்டில் இந்த யோகம் நிகழவுள்ளது. ஜாதகத்தில் 4வது வீடு என்பது சுக ஸ்தானமாகும். இதனால் இந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பு நன்மைகள் கிடைக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவடையும். சொத்து, நிலம், பூர்வீக சொத்துக்கள் தொடர்பான பிரச்சினைகள் சரியாகி பணம் கைக்கு வந்து சேரும். சொந்தமாக சொத்துக்கள், வீடு, நிலம், மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். அலுவலகத்தில் வேலை செய்து வருபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கலாம்.
கடக ராசி:
புதன் யுரேனஸ் சேர்க்கையால் உருவாகும் கேந்திர யோகம் கடக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை தரும். இவர்களுக்கு திடீர் பண ஆதாயம் கிடைக்கும். நீண்டகாலமாக நிலுவையில் இருந்த பணிகள் வெற்றிகரமாக முடிக்கப்படும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்திகள் வந்து சேரும். உங்கள் பேச்சுத் திறமை அதிகரிக்கும். இதன் காரணமாக தொழில் செய்து வருபவர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். உங்கள் உறவினர்களுடனான உறவு அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அரசு வேலைக்காக முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் கிடைக்கும்.
துலாம் ராசி:
துலாம் ராசிக்காரர்களுக்கு கேந்திர யோகத்தால் பல பலன்கள் கிடைக்கும். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். பல துறைகளில் நன்மை கிடைக்கும். வாழ்க்கையில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரலாம். வணிகத்துறையில் நீங்கள் இரட்டிப்பு லாபத்தை எதிர்பார்க்கலாம். வருமானத்தில் விரைவான அதிகரிப்பு ஏற்படலாம். இதுவரை இருந்து வந்த உடல் பிரச்சனைகள் சரியாகி உடல் ஆரோக்கியம் மேம்படும். எந்தவொரு வேலையிலும் உங்கள் கடின உழைப்புக்கான பலன்களைப் பெறலாம். கல்வி பயிலும் மாணவர்களுக்கு நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்களுக்கு மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.