Birth Month : இந்த 4 மாசத்துல பொறந்தவங்க தந்திரமானவங்க! இவங்க கிட்ட உஷாரா இருங்க
ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் மிகவும் தந்திரமானவர்களாக இருப்பார்களாம். அந்த லிஸ்டில் நீங்கள் பிறந்த மாதம் இருக்கிறதா?

Cunning Birth Month
ஜோதிட சாஸ்திரம் என்பது இந்துக்களின் நம்பிக்கை. ஒரு நபரின் ஆளுமை மற்றும் எதிர்காலத்தை தெரிந்து கொள்ள ஜோதிட சாஸ்திரம் தான் உதவியாக இருந்து வருகின்றது. அதாவது ஜோதிடத்தின் படி, ஒரு நபர் பிறந்த தேதி, நேரம், நட்சத்திரம், ராசி ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அவரது எதிர்காலம் மற்றும் ஆளுமையை கணித்து விடலாம்.
அந்த வகையில் ஜோதிடம் படி, ஒவ்வொரு மாதத்தில் பிறந்தவர்களுக்கும் தனித்துவமான குணாதிசயங்கள் உண்டு. அதன்படி சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் மிகவும் தந்திரமானவர்களாக இருப்பார்கள் என்று ஜோதிட சாஸ்திரம் சொல்லுகின்றது. தந்திரம் என்பது வெறும் புத்திசாலித்தனமல்ல சூழ்ச்சி செய்யும் திறனும் அதில் அடங்கும். ஆகவே இவர்கள் தங்களது புத்திசாலித்தனத்தை தங்களது தேவைக்காக தந்திரமாக பயன்படுத்திக் கொள்வார்கள் என்று ஜோதிடம் சொல்லுகின்றது. சரி இப்போது இந்த பதிவில் அது எந்தெந்த மாதம் என்று தெரிந்து கொள்ளலாம்.
பிப்ரவரி
ஜோதிடத்தின் படி, பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் பிறரது உணர்வுகளை மிக எளிதில் படிக்கும் திறன் உடையவர்கள். மேலும் நுட்பமான விஷயங்களை கூட எளிதில் புரிந்து கொள்ளும் திறனும் உண்டு. இவர்கள் சிறந்த படைப்பாற்றல் உள்ளவர்கள். பிரச்சனைக்கு வித்தியாசமான முறையில் தீர்வுகளை காண்பார்கள். இவர்கள் தங்களது சூழ்நிலைக்கு ஏற்ப தங்களை மாற்றி கொள்வார்கள். இதனாலேயே இவர்கள் மற்றவர்களை சுலபமாக கையாள்வார்கள்.
மே
ஜோதிடத்தின் படி, மே மாதத்தில் பிறந்தவர்கள் பன்முகத் தன்மை உள்ளவர்கள். இரட்டை ஆளுமைக்கு பெயர் பெற்றவர்கள் மற்றும் தந்திரமானவர்கள். இவர்கள் பேசிய தங்களது காரியத்தை சாதித்து முடித்து விடுவார்கள். தங்களுக்கு ஏதேனும் காரியம் நடக்க வேண்டுமானால் பிறரை எளிதில் மூலச்சலவை செய்து அதை முடித்து விடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் ரொம்பவே புத்திசாலிகள் என்பதால் இவர்கள் பொய் மற்றும் சூழ்ச்சியை எளிதில் கண்டுபிடித்து விடுவார்கள்.
அக்டோபர்
ஜோதிடத்தின் படி அக்டோபர் மாதத்தில் பிறந்தவர்கள் தந்திரத்திற்கு பெயர் பெற்றவர்கள் ல். இவர்கள் பெரும்பாலும் தங்களது உண்மையான நோக்கம் மற்றும் உணர்வுகளை மறைப்பதில் சிறந்தவர்களாவர். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பிறரது எண்ணங்கள் மற்றும் உணர்ச்சிகளை எளிதில் புரிந்து கொள்ளும் திறன் கொண்டவர்கள். இவர்களின் தந்திரமான எண்ணங்கள் மற்றும் செயல்கள் மூலம் மற்றவர்களை வைத்து காரியத்தை நிறைவேற்றிக் கொள்வார்கள்.
செப்டம்பர்
ஜோதிடத்தின்படி, செப்டம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் ராஜதந்திரம் கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள் தங்களது வசீகரத்தால், அனைவரையும் எளிதில் வென்றுவிடுவார்கள். இவர்கள் தங்கள் தேவைக்காக ராஜதந்திரத்தை பயன்படுத்தி, காரியத்தை செய்து முடிப்பார்கள். அதுமட்டுமின்றி இவர்கள் சிறந்த பேச்சாளரும் கூட.