- Home
- Astrology
- Birth Month: இந்த 4 மாதத்தில் பிறந்தவங்க ரொம்ப மோசமான நண்பர்களா இருப்பார்களாம்.! இவங்க கூட பழகுறதே கஷ்டம்
Birth Month: இந்த 4 மாதத்தில் பிறந்தவங்க ரொம்ப மோசமான நண்பர்களா இருப்பார்களாம்.! இவங்க கூட பழகுறதே கஷ்டம்
ஜோதிடத்தின் படி குறிப்பிட்ட சில மாதத்தில் பிறந்தவர்கள் மோசமான நண்பர்களாக இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. அதற்கான காரணம் என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மோசமான நண்பர்கள் பிறந்த மாதங்கள்
மனிதராக பிறந்த ஒவ்வொருவருக்கும் நட்பு என்பது இன்றியமையாதது. நண்பர்கள் இல்லாத மனிதர்களே இந்த உலகில் இருக்க மாட்டார்கள். வாழ்க்கையில் நடக்கும் இன்பம், துன்பம், கஷ்டம், நஷ்டம் அனைத்திலும் நண்பர்கள் நமக்கு உறுதுணையாக இருப்பார்கள். ஆனால் அனைத்து நண்பர்களுமே நல்ல நண்பர்கள் என்று கூறி விட முடியாது. சிலர் மோசமானவர்களாகவும் இருப்பார்கள். ஜோதிடத்தின் படி சில மாதங்களில் பிறந்தவர்கள் வலிமையான ஆளுமை கொண்டவர்களாக விளங்குகின்றனர். இவர்கள் பிறரிடம் தங்கள் தேவைக்குப் பழகும் சுயநலவாதிகளாக இருப்பார்கள். இந்த பதிவில் எந்தெந்த மாதத்தில் பிறந்தவர்கள் மோசமான நட்பு பாராட்டும் குணம் கொண்டவர்கள் என்பது குறித்து பார்க்கலாம்.
மார்ச்
மார்ச் மாதத்தில் பிறந்த நபர்கள் தைரியமானவர்கள், ஆற்றல் மிக்கவர்கள் மற்றும் தலைமை பண்பு உள்ளவர்கள். இவர்கள் தங்கள் இலக்குகளில் மூழ்கி பிறரின் தேவைகளை புறக்கணிப்பவர்களாக இருக்கின்றனர். சில சமயங்களில் தேவையற்ற வாக்குவாதங்கள் மற்றும் அவசரமாக முடிவெடுப்பவர்களாக உள்ளனர். இந்த குணாதிசயம் காரணமாக அவர்கள் சில சமயங்களில் மோசமான நண்பர்களாக இருப்பார்கள். தான் சொல்வதை செய்ய வேண்டும், தன் விருப்பப்படியே அனைத்தும் நடக்க வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்களின் இந்த செயல்பாடு பிறர் மனதை புண்படுத்தும் வகையில் அமையும். அவர்கள் எப்போதும் மோதல்களை உண்டாக்குபவர்களாக இருக்கிறார்கள். இவர்களுடன் நீங்கள் நண்பராக இருக்க வேண்டும் என்றால் உங்கள் தேவைகள் மற்றும் எல்லைகள் குறித்து வெளிப்படையாக பேச வேண்டியது அவசியம். ஆனால் அவர்களின் அவசர முடிவால் உங்கள் மனது காயப்படலாம். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
ஜூன்
ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் உணர்ச்சி மிக்கவர்கள். தங்கள் உணர்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதால், பிறர் நலன்களை அவர்கள் புறக்கணிக்கலாம். அவர்கள் உங்களைப் பற்றி அதிகமாக கவலைப்படுவது போல் தோன்றினாலும், அது அவர்களின் உணர்ச்சி மிகுதியாக கூட இருக்கலாம். மேலும் ஜூன் மாதத்தில் பிறந்தவர்கள் பேசுவதில் கில்லாடிகளாக விளங்குகின்றனர். சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக் கொள்ளும் குணாதிசயம் கொண்டவர்கள். அவர்களின் இந்த குணம் அவர்களை நம்பகத்தன்மையற்றவர்களாக மாற்றுகிறது. ஜூன் மாதத்தில் பிறந்தவர்களுடன் நண்பர்களாக இருக்க வேண்டுமானால் பொறுமை மிகவும் அவசியம். மேலும் இருவருக்கும் இடையே புரிதல் இருந்தால் மட்டுமே அந்த நட்பை நீட்டிக்க முடியும். அவர்களின் சுயநல எண்ணம் மற்றும் அடிக்கடி மாறும் மனநிலையை நீங்கள் புரிந்து கொண்டால் மட்டுமே அவர்களுடன் நல்ல நண்பர்களாக நீடிக்க முடியும்.
ஆகஸ்ட்
ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் ஒழுக்கத்தை கடைப்பிடிப்பவர்கள். ஒரு விஷயத்தை பகுப்பாய்வு செய்து அதை புரிந்து கொள்ள நினைப்பவர்கள் மற்றும் பரிபூரணவாதிகள். அவர்கள் சிறு விஷயங்களை கூட பெரிதளவில் விமர்சிப்பார்கள். இது நண்பர்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தலாம். அவர்கள் தங்கள் திட்டமிடலில் மிகவும் கவனமாக இருப்பதால், நண்பர்கள் நலனை அடியோடு புறக்கணித்து விடுகின்றனர். மேலும் நண்பர்கள் ஏதாவது சாதனைகள் செய்தால் அதை தங்களுடையது என்று பெருமை பேசும் நபர்களாக இருக்கின்றனர். தங்களின் புகழ் வெளிச்சம் மற்றவர்களுக்கு செல்லக்கூடாது என்றும், அதே சமயம் பிறரின் புகழை தாங்கள் அபகரிக்கவும் நினைக்கின்றனர். இதில் ஏதாவது ஒன்று தவறினால் கூட அந்த நட்பை அவர்கள் புறக்கணிக்க தயங்குவதில்லை. நண்பர்களிடமிருந்து விசுவாசத்தை எதிர்பார்ப்பார்கள். ஆனால் அவர்கள் அப்படி இருப்பதில்லை. இந்த தார்மீக புரிதல் இல்லை என்றால் அவர்கள் மோசமான நண்பர்களாக மாறுகின்றனர்.
டிசம்பர்
டிசம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் பொறுப்பானவர்கள், ஒழுக்கமானவர்கள் மற்றும் இலக்குகளை நோக்கி செல்பவர்கள். இவர்கள் தங்களது வேலைகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால் நண்பர்களை மறந்து விடுவார்கள். மேலும் இவர்கள் கண்டிப்பான மனப்பான்மை கொண்டவர்கள். இது சில சமயங்களில் நண்பர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தலாம். நட்பை விட தங்களது வேலை மற்றும் இலக்குகளுக்கே முக்கியத்துவம் கொடுப்பதால் நண்பர்களை புறக்கணிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகம். மேலும் இவர்கள் எந்த விஷயமானாலும் அதை அளவுக்கு அதிகமாக விமர்சனம் செய்பவர்களாகவும், நட்பில் அதிக எதிர்பார்ப்புகளைக் கொண்டவர்களாகவும் இருக்கலாம். இவர்களின் இந்த குணாதிசயங்களுக்கு ஏற்ப நண்பர்கள் மாறுவது சற்று சவாலாக இருக்கலாம்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ள கருத்துக்கள் ஜோதிட நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்டவை மட்டுமே. உண்மையில் ஒருவரின் நட்பு என்பது அவர்கள் பிறந்த மாதத்தை விட அவர்களின் ஆளுமை, மதிப்புகள் மற்றும் நடத்தையைப் பொறுத்தது. எந்த மாதத்தில் பிறந்தவர்களாக இருந்தாலும் நல்ல நண்பர்களாகவும் இருக்க முடியும், மோசமான நண்பர்களாகவும் இருக்க முடியும். ஒருவரை அவர்களின் செயல்கள் மற்றும் உறவுகளின் அடிப்படையிலேயே மதிப்பிட வேண்டும். பிறந்த மாதத்தை வைத்து அல்ல. இந்த தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிட கருத்துக்களின் அடிப்படையிலானது மட்டுமே. இதன் நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)