- Home
- Astrology
- Astrology: 1 வருடத்திற்க்குப் பின் உருவாகும் சக்தி வாய்ந்த யோகம்.! 3 ராசிகள் பணக்காரர்கள் ஆகப்போறாங்க.!
Astrology: 1 வருடத்திற்க்குப் பின் உருவாகும் சக்தி வாய்ந்த யோகம்.! 3 ராசிகள் பணக்காரர்கள் ஆகப்போறாங்க.!
வேத ஜோதிடங்களின்படி சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் புதாத்ய ராஜயோகம் உருவாக உள்ளது. இதன் காரணமாக 3 ராசிக்காரர்கள் நல்ல பலன்களைப் பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சூரியன்-புதன் சேர்க்கை 2025
ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் இளவரசனாக கருதப்படுபவர் புதன். இவர் மிதுனம் மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியாக இருக்கிறார். இவர் பேச்சு, வியாபாரம், படிப்பு, புத்திசாலித்தனத்தின் காரகராவார். அதே சமயம் கிரகங்களின் தலைவராக இருப்பவர் சூரியன். இவர் சிம்ம ராசியின் அதிபதியாவார். ஆற்றல், கௌரவம், மரியாதை, தன்னம்பிக்கை ஆகிய குணங்களுக்கு சூரியன் காரகராவார். சூரியன் செப்டம்பர் மாதத்தில் கன்னி ராசிக்கு செல்ல இருக்கிறார். அதேசமயம் புதனும் கன்னி ராசியில் நுழைகிறார். சூரியன் மற்றும் புதன் சேர்க்கையால் கன்னி ராசியில் புதாத்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகத்தால் பலன்பெறும் 3 ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
கன்னி ராசி
கன்னி ராசியின் முதல் வீட்டில் சூரியன் புதன் சேர்க்கையால் புதாத்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இந்த ராஜயோகம் கன்னி ராசிக்காரர்களுக்கு அடுத்த சில தினங்களுக்கு நல்ல பலன்களைத் தரவுள்ளது. திருமணமானவர்களுக்கு குடும்ப உறவில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவை கிடைக்கலாம். உயர் அதிகாரிகளின் முழு ஆதரவு கிடைக்கும். கல்வி பயிலும் மாணவர்கள் மனதில் இருந்த சந்தேகங்கள், பயம் ஆகியவை நீங்கி படிப்பில் ஆர்வம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் மதிப்பும், கௌரவமும் அதிகரிக்கும்.
மிதுனம்
மிதுன ராசியின் 4வது வீட்டில் புதாத்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. 4-வது ஸ்தானமான வீடு சுக ஸ்தானத்தில் நிகழ உள்ளது. 4வது ஸ்தானமானது ஒரு நபரின் படிப்பு, தாய், வீடு, நிலம், சொத்து, வாகனங்கள் மற்றும் மன அமைதியை குறிக்கிறது. இரு சுப கிரகங்களும் மிதுன ராசியின் சுக ஸ்தானத்தில் நிகழ்வதால் மிதுன ராசிகளுக்கு இந்த சேர்க்கை நல்ல பலன்களை தரவுள்ளது. இதனால் புதிய வீடு, பொருள், வீடு, வாகனம் வாங்கும் யோகம் உருவாகிறது. வேலையில் இருந்து வந்த தொய்வு நீங்கி, முன்னேற்றம் ஏற்படும். தொழில் செய்து வருபவர்களுக்கு இம்மாதம் வருமானம் இரட்டிப்பாகும். அலுவலகத்தில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும்.
தனுசு ராசி
தனுசு ராசிக்கு தொழில் ஸ்தானமான 10-வது வீட்டில் சூரியன்-புதன் சேர்க்கையால் புதாத்ய ராஜயோகம் உருவாகவுள்ளது. இதனால் தனுசு ராசிக்காரர்கள் தொழில் ரீதியாக நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வணிகர்களுக்கு இரட்டிப்பு லாபம் கிடைக்கும். புதிய தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இந்த சாதகமான காலம் ஆகும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கும், ஏற்கனவே தொழில் நடத்தி வருபவர்களுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். படைப்பாற்றல் அதிகரிக்கும். தலைமைத்துவ திறன்கள் அதிகரிக்கும். புதிய விஷயத்தை தொடங்க நல்ல காலம் ஆகும். தந்தை மற்றும் தந்தை உறவுகள் மேம்படும்.