- Home
- Astrology
- This Week Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே..இந்த வாரம் அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.! மஹாலக்ஷ்மி அருள் உங்க பக்கம் தான்
This Week Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே..இந்த வாரம் அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.! மஹாலக்ஷ்மி அருள் உங்க பக்கம் தான்
செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை ரிஷப ராசிக்கான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ரிஷப ராசிக்கான வார ராசிப் பலன்கள்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் அதிக யோக பலன்கள் கிடைக்கும். இந்த வாரம் உங்கள் மனதில் தெளிவும், நம்பிக்கையும் அதிகரிக்கும். இத்தனை நாட்களாக காத்திருந்த விஷயங்கள் அனைத்தும் ஒவ்வொன்றாக நடக்கும். நீங்கள் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் தீரும். சமூகத்தில் உங்கள் மதிப்பு மற்றும் மரியாதை அதிகரிக்கும். ரத்த அழுத்தம், நீரிழிவு, ரத்தம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் கவனம் தேவை. மனதில் சில சமயங்களிங் கவலை தோன்றலாம். ஆனால் உங்கள் பொறுமை இதனை சமாளிக்க உதவும்.
நிதி நிலைமை:
இந்த வாரம் உங்களுக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் அல்லது நிலுவையில் உள்ள பணம் கைக்கு வந்து சேரலாம். சொத்துக்கள் வாங்க அல்லது விற்க இது ஏற்ற நேரமாக இருக்கும். ஆனால் ஆவணங்களை பரிசோதித்து முடிவெடுக்க வேண்டியது அவசியம். பங்குச் சந்தை அல்லது முதலீடுகளில் ஈடுபடுவோருக்கு லாபம் கிடைக்கலாம். பெரிய அளவிலான முதலீடுகளைத் தவிர்த்து, சிறிய அளவிலான முதலீடுகளை செய்யலாம். பண வரவு அதிகரிக்க வெள்ளிக் கிழமைகளில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி, வெள்ளைப் பூக்களால் அர்ச்சனை செய்யவும்.
தொழில் அல்லது வணிகம்:
தொழிலில் நீங்கள் எதிர்பாராத அளவிற்கு முன்னேற்றம் ஏற்படும். உங்கள் தொழிலில் புதிய வாய்ப்புகள் தேடி வரலாம். உங்கள் தொழிலை விரிவுசெய்யும் வாய்ப்புகளும் கிடைக்கும். அலுவலகத்தில் வேலை செய்பவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். உங்கள் கடின உழைப்பு மற்றும் அர்பணிப்பு உயரதிகரிகளால் பாராட்டப்படலாம். பதவி உயர்வு அல்லது பணி மாற்றம் தொடர்பான வாய்ப்புகள், பணி நிமித்தமாக வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு ஏற்ற காலம் இதுவாகும். ஆனால் தொழிலுக்காக பெரிய கடன்களை வாங்குவதை தவிர்க்கவும்.
குடும்பம் மற்றும் உறவுகள்:
குடும்ப வாழ்க்கையில் இந்த வாரம் மகிழ்ச்சிகரமான சூழல் நிலவும். குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல புரிதல் ஏற்படும். சிலருக்கு குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். உங்கள் துணையுடன் நெருக்கம் அதிகரிக்கும். திருமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு பெற்றோர் அல்லது உறவினர்கள் மூலம் நல்ல வரன்கள் அமைய வாய்ப்புள்ளது. தாயாரின் உடல்நிலையில் சிறிது பிரச்சனைகள் தோன்றலாம். கணவன் - மனைவி இடையே சிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும், புரிந்துணர்வுடன் நடந்து கொள்வது உறவை வலுப்படுத்த உதவும்.
ஆன்மீகம்:
ரிஷப ராசிக்காரர்கள் பெண் தெய்வ வழிபாடு செய்வது நல்ல பலன்களைத் தரும். அபிராமி அந்தாதி பாராயணம் செய்வது வீட்டில் இருந்து எதிர்மறை ஆற்றலை விலக்கி, நல்ல ஆற்றல்களை கொண்டு வரும். முன்னோர் வழிபாடு, குலதெய்வ வழிபாடு நல்ல மாற்றத்தைக் கொடுக்கும். செவ்வாய், வெள்ளி கிழமைகளில் துர்க்கை அம்மன் கோவிலுக்குச் சென்று வழிபாடு நடத்துவது மிகுந்த பலன்களைத் தரும்.
பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் சுக்கிரனுக்கு நெய் தீபம் ஏற்றி, வெள்ளை நிறப் பூக்களால் அர்ச்சனை செய்யவும். குலதெய்வ வழிபாடு, துர்க்கை, முருகன் வழிபாடு மன நிறைவைத் தரும்.

