- Home
- Astrology
- This Week Rasi Palan: மேஷ ராசி நேயர்களே.. அடுத்த 7 நாள் உங்களுக்கு சூப்பரா இருக்க போகுது.! உங்க வாழ்க்கையே மாறப்போகுது.!
This Week Rasi Palan: மேஷ ராசி நேயர்களே.. அடுத்த 7 நாள் உங்களுக்கு சூப்பரா இருக்க போகுது.! உங்க வாழ்க்கையே மாறப்போகுது.!
செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை மேஷ ராசிக்கான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மேஷ ராசிக்கான வார ராசிப் பலன்கள்:
மேஷ ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் சாதகமான சூழல் ஏற்படும். இதுவரை நிலவி வந்த கடன் பிரச்சனைகள் படிப்படியாக தீரும். மன அமைதி ஏற்படும். எதிர்பாராத பல நல்ல விஷயங்கள் நடக்கும். குழந்தைகளுக்கு தேவையான விஷயங்களை செய்து கொடுப்பீர்கள். தொழில் ரீதியாக நல்ல முன்னேற்றம் ஏற்படும். செப்டம்பர் மாத முதல் வாரத்தில் நல்ல அனுகூலங்கள் ஏற்பட்டாலும், வயிறு சம்பந்தப்பட்ட கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
ஆரோக்கியம்:
வயிறு பிரச்சனை இருப்பவர்கள், கல்லீரல், சிறுநீரக பிரச்சனை இருப்பவர்கள் மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உடல் ஆரோக்கியத்தில் இந்த வாரம் கவனத்துடன் செயல்படுங்கள். தொழில் செய்து வருபவர்களுக்கு நல்ல அனுகூலம் ஏற்படும். சிலருக்கு சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. முறையாக திட்டமிட்டால் வீடு, மனை, வாகனம், அசையும், அசையா சொத்துக்கள் வாங்கும் யோகமும் கிடைக்கும். பூர்வீக சொத்து பிரச்சனைகளை சந்தித்து வருபவர்களுக்கு, பிரச்சனைகள் முடிவுக்கு வந்து சொத்து அல்லது பணம் கைக்கு வந்து சேரலாம்.
குடும்ப உறவுகள்:
குடும்ப உறவுகளில் இதுவரை சந்தித்து வந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். இழுபறியான நிலைகள் மாறி அனைத்தும் சுமூக முடிவுக்கு வரும். கணவன் மனைவிக்கு இடையே இருந்த சண்டைகள் தீர்ந்து இணக்கம் அதிகரிக்கும். சமூகத்தில் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். மனதில் நீண்ட நாட்களாக இருந்து வந்த மனத்தடைகள் தவிடு பொடியாகும். பெரிய நிம்மதி, மகிழ்ச்சி உண்டாகும். குடும்ப உறவுகளைப் பொறுத்தவரை இந்த வாரம் பெரிய நிம்மதி, மகிழ்ச்சி உண்டாகும். குழந்தைகள் மூலம் சுபமான செய்திகள் கிடைக்கலாம்.
ஆன்மீகம்:
வீட்டில் சுப காரியங்கள் நடக்கலாம். நட்பு வட்டாரங்கள் அதிகரிக்கலாம். முதலீடுகளில் இருந்து லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் உங்கள் ஆற்றலும், உற்சாகமும் அதிகரிக்கும். செப்டம்பர் 6 மற்றும் 7 ஆகிய நாட்களில் புதிய பொறுப்புகள் அல்லது பதவி உயர்வு கிடைக்கலாம். இந்த வாரம் தெய்வ பக்தியும், ஆன்மீகத்தில் நாட்டமும் அதிகரிக்கும். குல தெய்வ வழிபாடு மற்றும் முன்னோர்கள் வழிபாடு நன்மைகளைத் தரும். செப்டம்பர் 7 அன்று சூரிய வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும்.
பரிகாரம்:
செப்டம்பர் 7 அன்று சூரியனுக்கு செம்பருத்தி மலரால் அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றவும். முருகப் பெருமானை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும்.