- Home
- Astrology
- This Week Rasi Palan: கன்னி ராசி நேயர்களே.. இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணுங்க அதிர்ஷ்ட காத்து உங்க பக்கம் தான்.!
This Week Rasi Palan: கன்னி ராசி நேயர்களே.. இந்த ஒரு விஷயத்தை மட்டும் பண்ணுங்க அதிர்ஷ்ட காத்து உங்க பக்கம் தான்.!
செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை கன்னி ராசிக்கான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

கன்னி ராசிக்கான வார ராசிப் பலன்கள்
கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த வாரம் மனதில் உற்சாகம் உயர்ந்து காணப்படும். உங்கள் வாக்கு ஸ்தானம் பலமடைந்து இருப்பதால் உங்கள் பேச்சுக்கு மதிப்பு, மரியாதை கூடும். உங்களின் கனிவான பேச்சு, எதார்த்தமான அணுகுமுறை மற்றவர்களை ஈர்க்கும். முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது உங்கள் உள்ளுணர்வு உங்களுக்கு வழிகாட்டும். சில சமயங்களில் மனதில் குழப்பம், சஞ்சலங்கள் ஏற்படலாம். எனவே முக்கிய முடிவுகளை எடுக்கும் பொழுது அவசரப்படாமல் நிதானமாக முடிவு எடுக்க வேண்டும்.
தொழில் மற்றும் வணிகம்
தொழில் செய்து வருபவர்களுக்கு கடந்த காலங்களில் இருந்த பிரச்சனைகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும். மனதில் இருந்த கவலைகள் விலகி தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலை பார்ப்பவர்கள் உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள். பணி நிமித்தமான வெளியூர் பயணங்கள் வரலாம். இந்த பயணங்களினால் ஆதாயம் கிடைக்கும். வேலையில் பதவி உயர்வுகளை எதிர்பார்க்கலாம். வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஆன்லைன் வணிகம், ஷேர் மார்க்கெட் ஆகியவற்றில் முதலீடு செய்யும் பொழுது கவனத்துடன் இருக்க வேண்டும். வேலை தேடுபவருக்கு இந்த மாதத்தில் நல்ல செய்திகள் வரும்.
நிதி நிலைமை
இந்த வாரத்தில் உங்களது பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பண வரவு அல்லது பழைய பாக்கிகள் வசூல் ஆக வாய்ப்புள்ளது. பூர்வீக சொத்துக்கள் மற்றும் பூர்வீக நிலம் தொடர்பான பிரச்சனைகள் முடிவிற்கு வந்து, பணம் கைக்கு வந்து சேரலாம். ஆடம்பர செலவுகளை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம். வீடு பராமரிப்பு, வாகன பராமரிப்பு அல்லது மருத்துவ செலவுகள் போன்ற எதிர்பாராத செலவுகளும் ஏற்படலாம். சேமிப்பு விஷயத்தில் இந்த வாரம் நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம். நீண்ட கால முதலீடுகளைப் பற்றி யோசிக்கலாம். முதலீடு செய்யும் முன்னர் தகுந்த நிபுணரை கலந்தாலோசிக்க வேண்டும்.
ஆரோக்கியம்
உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். சிறிய உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். எனவே தேவையான மருத்துவ பரிசோதனைகளை செய்து கொள்ள வேண்டும். பொதுவான ஆரோக்கிய பரிசோதனைகள் அல்லது கண் பரிசோதனைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது மன அமைதியைப் பேண உதவும். மன அழுத்தத்தை குறைப்பதற்கு தியானம் யோகா அல்லது இயற்கையோடு நேரம் செலவிடுவது ஆகியவற்றை மேற்கொள்ளலாம்.
குடும்பம் மற்றும் உறவுகள்
குடும்பத்தில் இந்த வாரம் சுமுகமான சூழல் நிலவும். மனைவி அல்லது வாழ்க்கைத் துணையுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். குழந்தைகளின் செயல்பாடுகள் மகிழ்ச்சியைத் தரும். உறவினர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் உடன் நேரம் செலவிடுவது மகிழ்ச்சி தரும். உறவினர் வீட்டு விசேஷங்களை முன்னிட்டு நடத்துவதற்கு வாய்ப்புகள் உருவாகலாம். காதல் வாழ்க்கையில் சாதகமான சூழல் ஏற்படும். காதலை வெளிப்படுத்த நினைப்பவர்களுக்கு இந்த மாதம் நல்ல நேரமாக இருக்கும்.
ஆன்மிகம்
செவ்வாய்க்கிழமைகளில் முருகர் வழிபாடு செய்வது அல்லது அருகம்புல் சமர்ப்பித்து விநாயகரை வழிபடுவது நன்மை தரும். தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் கோயிலில் பிரதோஷ நாட்களில் வழிபாடு செய்வது, அல்லது திங்கள் கிழமைகளில் சிவாலய வழிபாடு செய்வது, ஆதரவற்ற முதியவர்களுக்கு உதவி செய்வது ஆகியவை சிறந்த பலன்களை தரும்.