MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • This Week Rasi Palan: கடக ராசி நேயர்களே.. இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்.. ஆனா ஒரு விஷயத்துல கவனமா இருங்க

This Week Rasi Palan: கடக ராசி நேயர்களே.. இந்த வாரம் உங்களுக்கு அதிர்ஷ்டம் தான்.. ஆனா ஒரு விஷயத்துல கவனமா இருங்க

செப்டம்பர் 1 முதல் செப்டம்பர் 7 ஆம் தேதி வரை கடக ராசிக்கான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Aug 31 2025, 03:58 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
13
கடக ராசிக்கான வார ராசிப் பலன்கள்
Image Credit : AI Generated

கடக ராசிக்கான வார ராசிப் பலன்கள்

கடக ராசிக்கு செப்டம்பர் முதல் வாரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கவுள்ளது. இந்த வாரம் உங்களுக்கு மனதில் உற்சாகமும், தைரியமும் அதிகரிக்கும். உங்கள் முயற்சிக்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். அதே சமயம் கடக ராசிக்காரர்கள் சில சவால்களையும் சந்திக்க நேரிடலாம். தேவையில்லாத வார்த்தை பிரயோகங்களை தவிர்க்க வேண்டும். பழைய கடன் பிரச்சனைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். கடனை அடைப்பதற்கான அனைத்து முயற்சிகளும் வெற்றி தரும். தேவையில்லாம மன பயம், மரண பயம் ஆகியவை நீங்கும்.

23
ஆரோக்கியம்
Image Credit : AI Generated

ஆரோக்கியம்

ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் தேவை. உடல் உஷ்ணம், அஜீரணம், மன அழுத்தம் போன்ற பிரச்சனைகள் அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம். உணவு விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். சத்தான, எளிதில் ஜீரணமாகும் உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். உடற்பயிற்சி மற்றும் ஓய்வு மிகவும் முக்கியம். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருக்க வேண்டியது அவசியம். உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் வாக்குவாதத்தை தவிர்த்து, மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இது தேவையற்ற மன அழுத்தம், பதட்டத்தை குறைக்க உதவும்.

Related Articles

Related image1
This Week Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே..இந்த வாரம் அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.! மஹாலக்ஷ்மி அருள் உங்க பக்கம் தான்
Related image2
This Week Rasi Palan: மிதுன ராசி நேயர்களே..உங்களுக்கு வரும் காலம் வசந்த காலம் தான்.! வாழ்க்கையே மாறப்போகுது
33
நிதி மற்றும் தொழில்
Image Credit : Pinterest

நிதி மற்றும் தொழில்

நிதி விஷயத்தில் இந்த வாரம் செலவுகள் அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். ஆனால் இவை பெரும்பாலும் சுப செலவுகளாகவே இருக்கும். இந்த நாட்களில் பெரிய முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. கடன் வாங்குவதை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது. சேமிப்பு மற்றும் நிதி மேலாண்மை மூலம் நிதி நிலைமையை வலுப்படுத்தலாம். தொழில் ரீதியாக இந்த வாரம் உங்களுக்கு கூடுதல் நன்மைகள் கிடைக்கலாம். புதிய தொழில்கள் அல்லது திட்டங்களை தொடங்குவதற்கு இது நல்ல நேரமாகும். வியாபாரிகளுக்கு இந்த வாரம் லாபகரமாக இருக்கும். ஏற்றுமதி, இறக்குமதி, ரியல் எஸ்டேட் மற்றும் வேளாண் தொழில்களில் உள்ளவர்களுக்கு நல்ல மாற்றம் கிடைக்கும்.
 

ஆன்மிகம்:

இந்த வாரம் உங்களுக்கு வெற்றி கிடைக்க பின்வரும் பரிகாரங்களை செய்யலாம். தினமும் ஓம் சந்திரமசே நமஹ மந்திரத்தை ஜெபிக்கலாம். செவ்வாய் கிழமைகளில் துர்கா ஸ்தோத்திரம் பாராயணம் செய்யலாம். ஓம் கம் கணபதையே மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும். சனிக் கிழமைகளில் சனி பகவானுக்கு விளக்கேற்றி வழிபட வேண்டும். குலதெய்வ வழிபாடு, நந்தி வழிபாடு ஆகியவை மிகுந்த பலன்களைத் தரும்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Daily Rasi Palan : இன்று உங்களுக்கு லாபமா? நஷ்டமா? மார்ச் 19 ஆம் தேதி 12 ராசிகளுக்குமான ராசி பலன்கள் இதோ.!
Recommended image2
Ugadi 2026 : யுகாதிக்குப் பிறகு கோடீஸ்வரர்களாகப் போகும் ராசிகள் இவர்கள்தான்.! உங்க ராசி இருக்கா?
Recommended image3
மீன ராசியில் உதயமாகும் சனி பகவான்.! இந்த ராசிகளின் தலையெழுத்தே மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
This Week Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே..இந்த வாரம் அதிர்ஷ்டம் கொட்டப்போகுது.! மஹாலக்ஷ்மி அருள் உங்க பக்கம் தான்
Recommended image2
This Week Rasi Palan: மிதுன ராசி நேயர்களே..உங்களுக்கு வரும் காலம் வசந்த காலம் தான்.! வாழ்க்கையே மாறப்போகுது
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved