- Home
- Astrology
- Shani Vakri 2026 : மீன ராசியில் வக்ர பயணத்தை தொடங்கும் சனி பகவான்.! இந்த 5 ராசிகளுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்கபோகுது.! பணம் கொட்டப்போகுது.!
Shani Vakri 2026 : மீன ராசியில் வக்ர பயணத்தை தொடங்கும் சனி பகவான்.! இந்த 5 ராசிகளுக்கு அதிகபட்ச நன்மைகள் கிடைக்கபோகுது.! பணம் கொட்டப்போகுது.!
Saturn Retrograde in Pisces Lucky zodiac Signs : வரும் 2026 ஜூலை 27 முதல் டிசம்பர் 11 வரை, சனி பகவான் மீன ராசியில் வக்ர நிலையில் இருப்பார். இந்த காலகட்டத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிகபட்ச பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது.

Saturn Retrograde in Pisces Lucky zodiac Signs
வேத ஜோதிடத்தில் சனி பகவான் முக்கிய கிரகமாகவும், நீதிமானாகவும் அறியப்படுகிறார். இவர் இரண்டரை ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது ராசியை மாற்றுகிறார். அதே சமயம் அவ்வபோது பின்னோக்கிய நிலையிலும் (வக்ர கதி) பயணிக்கிறார். அந்த வகையில் ஜூலை 27 மீன ராசியில் வக்ர பயணத்தை தொடங்கும் அவர் டிசம்பர் 11 வரை அதே நிலையில் பயணிக்கிறார். சனி பகவானின் வக்ர பெயர்ச்சியால் பலன்பெறவுள்ள ராசிகள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
ரிஷபம்
சனி வக்ர பெயர்ச்சி ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் கைக்கு வரும். பழைய முதலீடுகள் மூலம் எதிர்பாராத லாபம் கிடைக்கும். வேலையில் ஸ்திரத்தன்மை அதிகரிக்கும், புதிய வருமானத்திற்கான வழிகளும் உருவாகும். உங்கள் கடின உழைப்புக்கு நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கும்.
கடகம்
இந்த காலகட்டத்தில் உங்கள் நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கும். சனி வக்ர பெயர்ச்சியால், நிலுவையில் உள்ள பணம் கைக்கு வர வாய்ப்புள்ளது. புதிய வேலை வாய்ப்புகள் உருவாகலாம். பதவி உயர்வு அல்லது கூடுதல் பொறுப்புகள் கிடைக்கக்கூடும். மன அழுத்தம் குறைந்து, நிம்மதியாக உணர்வீர்கள். குழந்தைகள் தொடர்பான மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும்.
கன்னி
சனி வக்ர பெயர்ச்சி உங்களுக்கு முன்னேற்றத்தையும், லாபத்தையும் தரும். பழைய பிரச்சனைகள் படிப்படியாக தீரத் தொடங்கும். வேலையில் உங்கள் கடின உழைப்புக்கு அங்கீகாரம் கிடைக்கும். புதிய பொறுப்புகள் நன்மை தரும். நிதி நிலைமை மேம்படும். முதலீடுகள் நல்ல லாபத்தைக் கொடுக்கும். வரன் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் கிடைக்கும்.
விருச்சிகம்
இந்த நேரம் உங்களுக்கு திடீர் பண லாபத்தைக் குறிக்கிறது. புதிய வழிகளில் வருமானம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. தொழிலில் செய்யும் முக்கிய மாற்றங்கள் உங்களுக்கு சாதகமாக அமையும். பழைய தகராறு ஒன்று உங்களுக்கு சாதகமாக முடிந்து, பண ஆதாயம் கிடைக்கலாம். உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். சிறிய அளவில் தொழில் செய்து வருபவர்கள் தொழிலை விரிவாக்கம் செய்வீர்கள்.
மீனம்
சனி வக்ர பெயர்ச்சி உங்களுக்கு குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டுவரும். ஆரம்பத்தில் சற்று மன அழுத்தம் இருந்தாலும், போகப்போக நிலைமை உங்களுக்கு சாதகமாக மாறும். முடங்கிக் கிடந்த வேலைகள் வேகம் பிடிக்கும். நிதி ஆதாயத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்கள் எதிர்காலம் குறித்த தெளிவு பிறக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

