சனி ராகு சேர்க்கை: 5 ராசிகளை கடுமையாக பாதிக்கும் பிசாசு யோகம்!
Saturn Rahu Conjunction in Pisces Forms Pishach Yoga Palan Tamil : ஜோதிட சாஸ்திரத்தின் படி, சனி மற்றும் ராகு குறுகிய காலத்தில் மீன ராசியில் இணைந்து பிசாசு யோகம் என்ற அசுப யோகத்தை உருவாக்குகிறது. இது 5 ராசிகளுக்கு அதிர்ஷ்டமற்றதாகவும், பயங்கரமானதாகவும் இருக்கும்.

சனி ராகு சேர்க்கை: 5 ராசிகளை கடுமையாக பாதிக்கும் பிசாசு யோகம்!
Saturn Rahu Conjunction in Pisces Forms Pishach Yoga Palan Tamil : மார்ச் மாதத்தில் சனி பகவான் குருவின் ராசியான மீன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். ஜோதிடக் கணக்கின்படி, குருவின் ராசியில் சனி மற்றும் ராகுவின் சேர்க்கை பிசாசு யோகத்தை உருவாக்குகிறது. சனி மற்றும் ராகு இந்த ராசியில் அசுப சேர்க்கையை உருவாக்குவார்கள். ராகு மற்றும் சனியின் சேர்க்கை அழிவுகரமானது என்று கருதப்படுகிறது. மார்ச் மாதத்தில் மீன ராசியில் உருவாகும் பிசாசு யோகம் 5 ராசிகளின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும்.
சூரியன் மகர ராசிக்கு பெயர்ச்சி: இந்த 3 ராசியினருக்கு 30 நாட்களும் பொற்காலம், செல்வ, செழிப்பு சேரும்!
கன்னி ராசியினருக்கு சனி ராகு சேர்க்கை பலன்:
சனி மற்றும் ராகுவின் சேர்க்கையால் உருவாகும் பிசாசு யோகத்தால் கன்னி ராசியினருக்கு அசுப பலன் உண்டாகும். கன்னி ராசிக்காரர்கள் யோசிக்காமல் முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். இழப்பு ஏற்படலாம். கடின உழைப்புக்குப் பிறகும், வெற்றி கிடைக்காது. கடன் வாங்கும் சூழ்நிலை ஏற்படலாம். இன்றிலிருந்தே நிதி நிலையில் சமநிலையைப் பேணுங்கள். கையிருப்பு கொஞ்சம் கொஞ்சமாக கரையும். செலவுகள் குறித்து புத்திசாலித்தனமான முடிவுகளை எடுங்கள்.
பிப்ரவரியில் 5 ராசிகளுக்கு விஷ்ணுவின் அருள், அதிர்ஷ்டம், செல்வம், ஆரோக்கியம் எல்லாமே கிடைக்கும்!
கடக ராசியினருக்கு கடினமான காலம்:
சனி மற்றும் ராகுவின் சேர்க்கையால் உருவாகும் பிசாசு யோகத்தால் கடக ராசிக்காரர்களுக்கு காலம் கடினமாக இருக்கலாம். வேலை தொடர்பான பயணத்தால் உடல்நலம் பாதிக்கப்படலாம். குறிப்பாக தனியார் துறையில் வேலை செய்பவர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். ஜூன் 17 வரை எந்த விதமான முதலீடுகளையும் தவிர்க்கவும். பொருளாதாரத்தில் சிக்கல் ஏற்படலாம். சேமிப்பு குறையும். பல வழிகளிலிருந்து உங்களுக்கு சிக்கல் ஏற்படும்.
Gajakesari Yogam : ரிஷபம், சிம்மம் உட்பட 5 ராசிகளுக்கு கஜகேசரி ராஜயோகம்; அடுத்த வாரம் அதிர்ஷ்டம்!
விருச்சிக ராசிக்கான பலன்:
ராகு மற்றும் சனி சேர்க்கை பலனால் விருச்சிக ராசிக்காரர்கள் தங்கள் உடல்நலத்தில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும். அரசு அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். சட்டவிரோதமாக சம்பாதித்த பணத்தை திருப்பிச் செலுத்த வேண்டியிருக்கலாம். காதல் உறவுகளில் கவனமாக இருங்கள். கருத்து வேறுபாடு காரணமாக உறவு முறிந்து போகலாம். வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும். இல்லையென்றால் விபத்து ஏற்படும். வேலையில் பல பிரச்சனைகள் வரும்.
ஏன், இந்த 3 ராசிக்காரர்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு உழைச்சாலும் பாராட்டு மட்டும் கிடைக்காது தெரியுமா?
கும்ப ராசிக்கான சனி ராகு சேர்க்கை பலன்
கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலம் சவாலாக இருக்கும். அகங்காரம் மற்றும் மாயை ஏற்படலாம். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கலாம். குடும்ப அமைதிக்கு பங்கம் ஏற்படலாம். உறவுகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். இல்லையென்றால் அதிலும் சிக்கல் தான். வண்டி, வாகனங்களில் செல்லும் போது கவனமாக சென்று வர வேண்டும். விபத்து ஏற்பட வாய்ப்பு இருக்கு. உடல் நலனில் கவனம் செலுத்த வேண்டும். மருத்துவ செலவு அதிகரிக்கும்.
பிப்ரவரியில் 2025 அதிக பிரச்சனைகளை சந்திக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?
மீன ராசிக்கான சனி ராகு சேர்க்கை பலன்
மீன ராசிக்காரர்களுக்கு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம். தேவையற்ற செலவுகள் பட்ஜெட்டை பாதிக்கலாம். முக்கியமான வேலைகள் தடைபடலாம். ஒவ்வொரு சனிக்கிழமையும் சனி பகவான் கோவிலில் கடுகு எண்ணெய் விளக்கு ஏற்றுவது நல்லது. வண்டி வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும். மெதுவாக சென்று வருவது நன்மை அளிக்கும். இல்லையென்றால் வீண் விரையம் ஏற்படும். கடன் வாங்கும் சூழல் உருவாகும். நீண்ட தூர பயணத்தை தவிர்ப்பது நல்லது.
பிப்ரவரியில் புதன், சூரியன், குரு கிரகங்களின் பெயர்ச்சி – இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கும்!