- Home
- Astrology
- கூட்டணி அமைத்த சனி-புதன்.! உருவான லாப திருஷ்டி யோகம்.! 4 ராசிகள் காட்டில் பணமழை கொட்டப்போகிறது.!
கூட்டணி அமைத்த சனி-புதன்.! உருவான லாப திருஷ்டி யோகம்.! 4 ராசிகள் காட்டில் பணமழை கொட்டப்போகிறது.!
2026 ஆம் ஆண்டு சனி மற்றும் புதன் கிரகங்களின் பார்வையால் ‘லாப திருஷ்டி யோகம்’ உருவாகவுள்ளது. இதன் காரணமாக பலன்பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

லாப திருஷ்டி யோகம் 2026
ஜோதிடத்தில் சனி மற்றும் புதன் பகவான் இருவரும் முக்கிய கிரகங்களாக அறியப்படுகின்றனர். ஜனவரி 20ஆம் தேதி ஒருவருக்கொருவர் 60 டிகிரி இடைவெளியில் அமைந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்கியுள்ளனர். இந்த யோகத்தின் தாக்கம் அடுத்த சில தினங்களுக்கு நீடிக்க இருக்கிறது. ஜோதிடத்தில் சனியும் புதனும் நட்பு கிரகங்கள் என்பதால் இது சில ராசிகளுக்கு அதிக அதிர்ஷ்டத்தை தர இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இங்கு பார்க்கலாம்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கு புதன் பகவான் யோக காரகன் என்பதால் இந்த காலகட்டத்தில் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். நீண்ட நாட்களாக வராமல் இருந்த கடன் தொகைகள் வசூல் ஆகும். பல வழிகளில் சிக்கி இருந்த பணம் மீண்டும் உங்களிடம் வந்து சேரும். நீங்கள் செய்யும் புதிய முதலீடுகள் உங்களுக்கு நன்மையை தரும். முதலீடுகள் மூலம் இரட்டிக் லாபம் கிடைக்கும். தந்தை வழி சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும்.
மிதுனம்
உங்கள் ராசிநாதன் புதன் என்பதால் சனியின் சாதகமான பார்வையுடன் நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றியாகும். வெளிநாடு செல்லும் முயற்சிகள் கைகூடும். பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வரும் மாணவர்கள் சிறந்த பலன்களைப் பெறுவார்கள். பேச்சாற்றல் மூலம் பெரிய காரியங்களை சாதிப்பீர்கள். மாமனார் மற்றும் மைத்துனர் வழியில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வரும். குடும்ப தகராறுகள் நீங்கி குடும்பம் ஒற்றுமை அடையும்.
கன்னி
கன்னி ராசிக்கு இந்த யோகம் பூர்வ புண்ணிய பலன்களைத் தரும். குடும்பத்தில் தடைபட்ட நின்ற சுப நிகழ்ச்சிகள் மீண்டும் வேகம் எடுக்கும். திருமணமாகாமல் இருப்பவர்களுக்கு திருமணம் நடைபெறும். பிள்ளைகளால் பெருமை உண்டாகும். தொழிலில் புதிய கூட்டாளிகள் இணைவார்கள். இது வணிகத்தை விரிவுபடுத்த உதவும். புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சொத்து சேர்க்கை நடைபெறும். தாய் வழி மூலம் பரம்பரை சொத்துக்கள் கைக்கு கிடைக்கும்.
கும்பம்
சனி பகவான் கும்ப ராசியிலேயே அமர்ந்து புதன் பகவானுடன் இணைந்து லாப திருஷ்டி யோகத்தை உருவாக்குவதால் இந்த யோகத்தின் முழு பலனும் உங்களுக்கு கிடைக்கும். சமூகத்தில் உங்களை குறைத்து மதிப்பிட்டவர்கள் உங்கள் மதிப்பை அறிந்து கொள்வார்கள். சமூக அந்தஸ்து உயரும். நீண்ட கால உடல் நல பாதிப்புகள் நீங்கி, புத்துணர்ச்சி பெறுவீர்கள். கடின உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரமும், பெரிய அளவிலான நிதி உதவிகளும் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

