- Home
- Astrology
- Astrology: நவம்பர் இறுதியில் நடந்த சனி பெயர்ச்சி.! இந்த 5 ராசிகளின் அனைத்து கஷ்டங்களும் முடிவுக்கு வரப்போகுது.!
Astrology: நவம்பர் இறுதியில் நடந்த சனி பெயர்ச்சி.! இந்த 5 ராசிகளின் அனைத்து கஷ்டங்களும் முடிவுக்கு வரப்போகுது.!
Pisces Sani Peyarchi 2025: நவம்பர் 28, 2025 அன்று சனி பகவான் மீன ராசியில் தனது பின்னோக்கிய பயணத்தை முடித்துக்கொண்டு நேரடிப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். ஜோதிடத்தில் இது ஒரு முக்கியமான நிகழ்வாகக் கருதப்படுகிறது.

சனி நேர்கதி பலன் பெறும் ராசிகள்
ஜூலை 2025 முதல் நவம்பர் 2025 வரை சுமார் நான்கரை மாதங்களாக பின்னோக்கிய பயணத்தில் இருந்த சனி பகவான், நேரடிப் பாதைக்கு திரும்புவது பல ராசிகளுக்கு ஒருவித நிம்மதியையும் முன்னேற்றத்தையும் அளிக்கும். இந்தக் காலகட்டத்தில், தொழில், உத்தியோகம், நிதி நிலைமை, ஆரோக்கியம் ஆகியவற்றில் நிலவி வந்த தடைகள், தாமதங்கள் மற்றும் குழப்பங்கள் நீங்கி தெளிவு பிறக்கும்.
கர்ம நாயகனான சனி பகவான் இயல்பு நிலைக்கு திரும்புவது உழைப்புக்கும் முயற்சிக்கும் உரிய பலன்களைக் கொடுக்கும். சனியின் நேரடிப் பயணத்தால் பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
1. மிதுனம்
மிதுன ராசியின் பத்தாம் வீட்டில் சனி பகவான் நேரடியாக பயணிக்க உள்ளார். பத்தாவது வீடானது உத்தியோகம் மற்றும் தொழிலைக் குறிக்கும் இடமாகும். சனி பகவான் பின்னோக்கி நகர்ந்த நிலையில் இருந்தபோது வேலையில் ஏற்பட்ட குழப்பங்கள், பதவி உயர்வு தாமதங்கள் இனி நீங்கும். உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப்படும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். சமூகத்தில் மதிப்பு கூடும். நிதி நிலைமை சீராகும்.
2. ரிஷபம்
ரிஷப ராசியின் பதினோராம் வீட்டில் சனி பகவான் நேரடியாக பயணிக்க இருக்கிறார். இது லாப ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. எனவே சனி பகவானின் நேரடிப் பயணம் உங்களுக்குக் கூடுதல் லாபத்தையும் வருமானத்தையும் தரும். முதலீடுகளில் இருந்து நல்ல வருமானம் கிடைக்கும். அதிர்ஷ்டம் பிரகாசிக்கும். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.
3.கன்னி
கன்னி ராசியின் ஏழாம் வீட்டில் சனி பகவான் நேரடி பயணத்தை தொடங்க இருக்கிறார். ஏழாம் வீடானது கணவன்-மனைவி, தொழில் கூட்டாளிகள் மற்றும் பொது உறவுகளைக் குறிக்கும் இடமாகும். எனவே இந்த காலக்கட்டத்தில் தொழில் கூட்டாளிகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். திருமண வாழ்வில் இருந்த குழப்பங்கள் நீங்கி மகிழ்ச்சி பெருகும். தடைப்பட்ட திருமணம் கைகூடும்.
4. தனுசு
தனுசு ராசியின் நான்காம் வீட்டில் சனி பகவான் நேரடியாக பயணிக்க இருக்கிறார். நான்காம் வீடு சுக ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இது தாய், வீடு, வாகனத்தைக் குறிக்கும் இடமாகும். சனி பகவானின் நேரடி பயணத்தால், சுகஸ்தானம் பலம் பெறுகிறது. வீடு, வாகனம் வாங்கும் முயற்சிகள் வெற்றிபெறும். தாயாரின் ஆரோக்கியம் மேம்படும். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த மந்த நிலை நீங்கி, தெளிவும் புத்திக்கூர்மையும் அதிகரிக்கும்.
5. மீனம்
சனி பகவான் உங்கள் ராசியிலேயே நேரடி பயணத்தை தொடங்குகிறார். மீன ராசிக்காரர்களுக்குச் சனி பகவான் ஜென்மத்தில் சஞ்சரித்தாலும், வக்ர நிவர்த்தியால் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டிருந்த உடல்நலக் கோளாறுகள், மனக் குழப்பங்கள் மற்றும் தடைபட்டு நின்ற வேலைகள் வேகமெடுக்கும். முக்கிய முடிவுகளைத் தைரியமாக எடுக்க முடியும்.

