சஷ ராஜ யோகம் - அதிர்ஷ்டத்தில் துள்ளி குதிக்க போகும் ராசிக்காரங்க நீங்களா?
Sasa Raja Yoga Palan in Tamil: நவம்பர் மாதத்தில் உருவாகு சஷ ராஜ யோகத்தின் பலனாக, ஐந்து ராசிகள் அதிர்ஷ்டம், வெற்றி, முன்னேற்றம் ஆகியவற்றை அனுபவிக்க உள்ளன. அவர்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம் வாங்க...
சில நாட்களில் புதிய மாதம்
Sasa Raja Yoga Palan in Tamil: வரும் நவம்பர் மாதத்தில் சனி பகவான் தனது நிலையை மாற்றுவார். சூரியன், சுக்கிரன், புதன் உட்பட 4 கிரகங்களின் நிலையும் மாறும். அப்போது சனி பகவான் சஷ ராஜ யோகம் உருவாக்குவார். சஷ ராஜ யோகத்தின் சுப பலன்கள் அதிகரிக்கும் என்று ஜோதிடம் கூறுகிறது. இதனால், ஐந்து ராசிகளுக்கு அதிர்ஷ்டம் கிடைக்கும். இந்த மாதத்தில் யாருக்கு வெற்றி கிடைக்கும்.
மேஷம்: நவம்பர் மாதம் சிறப்பாக இருக்கும்
மேஷம்: நவம்பர் மாதம் சிறப்பாக இருக்கும்
பணம் மற்றும் தொழில் சிறக்கும். தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம். வேலை செய்பவர்களுக்கு ‘வேலை திருப்தி’ கிடைக்கும். நீண்டகால பிரச்சனைகளில் இருந்து விடுதலை. உடல்நிலை மேம்படும்.
கடகம்: நவம்பர் மாதம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்
வாழ்க்கையில் மகிழ்ச்சி, தொழில் செய்பவர்களுக்கு லாபம். வேலையில் பதவி உயர்வு. நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். குடும்பத்தினர், நண்பர்களுடன் நேரம் சிறப்பாக இருக்கும்.
துலாம்: சிறந்த நேரம்
போட்டித் தேர்வுகளில் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும். வேலை நேர்காணலில் வெற்றி. நல்ல துணை கிடைக்கும். தொழில் முன்னேற்றம் உண்டு.
விருச்சிகம்: அற்புதமான நேரம்
தொழிலில் பணம் சம்பாதிக்க நல்ல வாய்ப்பு. சொத்துக்கள் பெருகும். வேலை செய்பவர்களுக்கு ‘வேலை திருப்தி’. வெளிநாடு செல்ல வாய்ப்பு. தொழில் செய்பவர்களுக்கு லாபம்.
கும்பம்: இந்த மாதம் மிகவும் நல்லது
தொழில் சம்பந்தமான முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகம். புதிய முயற்சிகள் வெற்றி பெறும். தொழிலில் வெற்றி. புதிய தொழில் தொடங்கலாம்.