- Home
- Astrology
- Rose Day 2025 : காதலிக்கு ரோஸ் கொடுக்குறப்ப இந்த '2' தப்ப பண்ணாதீங்க.. ஜோதிடம் சொல்லும் உண்மை
Rose Day 2025 : காதலிக்கு ரோஸ் கொடுக்குறப்ப இந்த '2' தப்ப பண்ணாதீங்க.. ஜோதிடம் சொல்லும் உண்மை
Rose Day 2025 : ஒவ்வொரு ஆண்டு பிப்ரவரி 7ஆம் தேதி ரோஜா தினம் கொண்டாடப்படுகிறது எனவே, உங்கள் காதலிக்கு ரோஜா பூ கொடுக்கும்போது என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது என்று ஜோதிடத்தில் சொல்லப்பட்டுள்ளன.

Rose Day 2025 : காதலிக்கு ரோஸ் கொடுக்குறப்ப இந்த '2' தப்ப பண்ணாதீங்க.. ஜோதிடம் சொல்லும் உண்மை
நாளை முதல் காதல் வாரம் தொடங்க உள்ளது. அந்த வாரத்தின் முதல் நாள் ரோஜா தினம் உங்கள் மனதிற்கு பிடித்தவர்களுக்கு ரோஜா பூ கொடுத்து உங்களது உணர்வுகளை வெளிப்படுத்தும் நாள் அது. ரோஜா பூ என்பது அன்பு, பாசம் மற்றும் பாராட்டு ஆகியவற்றின் சின்னம். சொல்லப்போனால் ரோஜா தினம் ஒரு புதிய தொடக்கமாகும். அதாவது புதிய உறவை தொடங்க அல்லது ஏற்கனவே இருக்கும் உறவை இன்னும் வலுப்படுத்த இது ஒரு நல்ல நாள். இந்நாள் உங்களது வாழ்க்கையில் அன்பையும், மகிழ்ச்சியும் கொண்டுவரும் நாளாக கருதப்படுகிறது. அந்த வகையில் நீங்கள் உங்கள் காதலி, காதலன், கணவன் அல்லது மனைவிக்கு ரோஸ் டே அன்று ரோஜா பூ கொடுக்க திட்டமிருந்தால், சில தவறுகளை தவிர்க்க வேண்டும் என்று ஜோதிடம் சொல்லுகின்றது. அது என்னென்ன என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
ரோஜா பூவின் நிறம்:
பொதுவாக ரோஜாப்பூவின் நிறம் உங்களது உணர்ச்சிகளையும், உறவையும் பிரதிபலிக்கின்றது. அந்த வகையில், சிவப்பு நிற ரோஜாப்பூ அன்பு மற்றும் ஆர்வத்தின் அடையாளமாகும். இளஞ்சிவப்பு நிறம் பாராட்டு மற்றும் நன்றியின் அடையாளமாகும். மஞ்சள் நிறம் நட்பு மற்றும் மகிழ்ச்சியின் அடையாளமாகும். வெள்ளை தூய்மை மற்றும் அமைதியின் அடையாளமாகும். எனவே உங்கள் மனதிற்கு பிடித்த நபரின் மீதான உங்கள் உணர்வுகளுக்கு ஏற்ப மேலே சொன்ன ரோஜாவின் நிறத்தை நீங்கள் தேர்வு செய்யுங்கள். அதுவே நீங்கள் உங்களது காதலை பிடித்த நபரிடம் சொல்ல இருக்கிறீர்கள் என்றால் இளஞ்சிவப்பு அல்லது சிவப்பு நிற ரோஜா சிறந்த தேர்வாகும்.
ரோஜா பூவில் முட்கள் இருக்கக் கூடாது:
உங்களுக்குப் பிடித்த நபருக்கு ரோஜா பூவை கொடுக்கிறீர்கள் என்றால், அதில் முட்கள் இருக்கக் கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் முட்கள் உறவில் உள்ள சிரமங்களை குறிக்கும். மேலும் அது உறவில் அசுப விளைவை கொண்டு வரும். எனவே, பிடித்த நபருக்கு ரோஜாப்பூ முட்கள் இருக்கிறதா? இல்லையா என்பதை பார்த்து கொடுங்கள்.
இதையும் படிங்க: காதலர் தினம் 2025; காதலில் கவனமாக இருக்க வேண்டிய ராசியினர் யாரெல்லாம் தெரியுமா?
வாடிய பூக்களை கொடுக்காதே!
நீங்கள் உங்கள் மனதிற்கு பிடித்த நபருக்கு எந்த ஒரு பொருளை கொடுத்தாலும் அது மங்களகரமான மற்றும் அசுபமான விளைவுகளை ஏற்படுத்தும். எனவே ரோஸ் டே அன்று உங்களுக்கு உங்களுக்கு ரோஜாப்பூ கொடுக்கப் போகிறீர்கள் என்றால் வாடிய பூவை ஒருபோதும் கொடுக்க வேண்டாம் அது அபசகுனமாக கருதப்படுகிறது. மேலும் நீங்கள் விரும்பும் நபருக்கு எப்போதும் புதிய ரோஜா பூக்களை மட்டுமே கொடுங்கள். அது உறவில் அன்பை அதிகரிக்கச் செய்யும்.
இதையும் படிங்க: Valentine's Week 2025 : காதல் வாரம்.. எந்த நாளில் 'கிப்ட்' கொடுத்தா லவ்வருக்கு பிடிக்கும்
பரிசுகள் கொடுங்கள்:
ரோஸ் டே அன்று நீங்கள் விரும்பும் நபருக்கு ரோஜா பூ கொடுக்குறீர்கள் என்றால், அதனுடன் ஏதாவது ஒரு பரிசையும் சேர்த்துக் கொடுங்கள். இதனால் உங்களது காதல் வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் மற்றும் உறவில் எந்தவித பிரச்சனையும் வராது.