- Home
- Astrology
- Astrology: சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் ராகு பகவான்.! கொட்டப் போகும் லாபம்.! 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.!
Astrology: சொந்த நட்சத்திரத்திற்கு செல்லும் ராகு பகவான்.! கொட்டப் போகும் லாபம்.! 3 ராசிகளுக்கு பொற்காலம் ஆரம்பம்.!
Rahu Peyarchi 2025: நவம்பர் 23 ஆம் தேதி ராகு பகவான் தனது சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்திற்குள் நுழைய இருக்கிறார். இந்த நட்சத்திரப் பெயர்ச்சி சில ராசிக்காரர்களுக்கு நன்மை பயக்க உள்ளது. அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ராகு பெயர்ச்சி 2025
ஜோதிடத்தில் ராகு பகவான் நிழல் கிரகமாக அறியப்படுகிறார். இவர் 23 ஆம் தேதி காலை சதய நட்சத்திரத்திற்கு இடம் பெயர்கிறார். சதய நட்சத்திரம் ராகு பகவானின் சொந்த நட்சத்திரமாகும். எனவே ராகுவின் இந்த நட்சத்திர மாற்றம் சில ராசிக்காரர்களுக்கு மிகவும் மங்களகரமானதாகவும், நன்மை பயக்கும் வகையிலும் அமைய இருக்கிறது. ராகுவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் பெறும் ராசிக்காரர்கள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ராகு பகவானின் நட்சத்திர பெயர்ச்சி மிகவும் சாதகமாக இருக்கும். உங்கள் ராசியின் 11-வது வீடதான லாப ஸ்தானத்தில் ராகு பகவான் சஞ்சரிக்கிறார். இது மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. ராகு தனது சொந்த நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆவதன் காரணமாக மேஷ ராசிக்காரர்கள் எதிர்பாராத நன்மைகளை அனுபவிப்பீர்கள். நீங்கள் ஏதேனும் ஒரு வழக்குகள் அல்லது பிரச்சனைகளில் சிக்கி இருந்தால் அதிலிருந்து விடுபடுவீர்கள். வருமானம் அதிகரிக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் மன நிலையிலும் நேர்மறையான மாற்றங்கள் நிகழும்.
கன்னி
ராகு பகவான் கன்னி ராசியின் ஆறாவது வீட்டில் சஞ்சரிக்கிறார். ராகு பகவானின் சதய நட்சத்திர பெயர்ச்சியானது கன்னி ராசிக்காரர்களுக்கும் நேர்மறையான பலன்களை வழங்கும். உங்கள் நிதி நிலைமை மேம்படும். நீங்கள் எதிர்பாராத வழிகளில் இருந்து பணத்தைப் பெறுவீர்கள். ஏற்கனவே செய்திருந்த முதலீடுகளில் இருந்து நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். ராகுவின் செல்வாக்கின் காரணமாக தொழில் அல்லது பணியிடத்தில் போட்டியாளர்களின் சதிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். இதுவரை நீங்கள் சந்தித்து வந்த பிரச்சனைகள் ஒவ்வொன்றாக தீரத்தொடங்கும்.
தனுசு
ராகு பகவான் சதய நட்சத்திர பெயர்ச்சியாகும் பொழுது தனுசு ராசியின் மூன்றாம் வீட்டில் சஞ்சரிக்க இருக்கிறார். அவரின் இந்த நட்சத்திர மாற்றம் தனுசு ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை கொடுக்கும். பல்வேறு மூலங்களிலிருந்தும் நிதி ஆதாயங்கள் கிடைக்கக்கூடும். உடல் நலத்திலும் நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். இதுவரை அனுபவித்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். வேலை மாற்றம் விரும்புவர்களுக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கும். பணியிடத்தில் சம்பள உயர்வு கிடைக்கும். உங்கள் தைரியமும், துணிச்சலும் அதிகரிக்கும். குடும்பத்துடன் தரமான நேரத்தை செலவிடுவீர்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)