MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • ராகு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு டிசம்பர் 2026 வரை அக்னி பரீட்சை! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

ராகு-செவ்வாய் சேர்க்கை: இந்த 3 ராசிகளுக்கு டிசம்பர் 2026 வரை அக்னி பரீட்சை! தப்பிக்க எளிய பரிகாரங்கள்!

Rahu Mars Conjunction 2026: ராகு-செவ்வாய் சேர்க்கையால் டிசம்பர் 2026 வரை 3 ராசிகளுக்கு கடுமையான காலக்கட்டம் இருக்க போகிறது. அவை எந்தெந்த ராசிகள்? தப்பிக்க எளிய பரிகாரங்கள்? என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

2 Min read
Author : Rayar A
Published : Jun 27 2026, 02:34 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
ராகு பெயர்ச்சி 2026
Image Credit : AI

ராகு பெயர்ச்சி 2026

ஜோதிட சாஸ்திரத்தில் நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகுவிற்கு என்று தனிப்பட்ட சொந்த ராசி எதுவும் கிடையாது. இவர் எப்போதும் வக்ர கதியிலேயே யணிக்கக்கூடியவர். தற்போது கும்ப ராசியில் சஞ்சரித்து வரும் ராகு பகவான், வரவிருக்கும் ஜூன் 30 ஆம் தேதி செவ்வாயின் ஆதிக்கம்பெற்ற அவிட்டம் நட்சத்திரத்திற்குள் நுழைகிறார்.

ராகுவும் செவ்வாயும் இணையும் போது அல்லது தொடர்பு கொள்ளும்போது ஜோதிடத்தில் அது 'அங்காரக யோகம்' என்று அழைக்கப்படுகிறது. இது மிகவும் சக்தி வாய்ந்த மற்றும் உக்கிரமான ஒரு யோகமாகும். இந்த நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் 12 ராசிகளிலும் எதிரொலித்தாலும், டிசம்பர் 2 ஆம் தேதி வரை நீடிக்கவுள்ள இந்த காலகட்டத்தில் சில குறிப்பிட்ட ராசிக்காரர்கள் கடுமையான மன உளைச்சல், தவறான முடிவுகள் மற்றும் உடல்நலப் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.

அங்காரக யோகத்தால் அக்னி பரீட்சையை சந்திக்கப்போகும் அந்த 3 ராசிகள் யார் யார் மற்றும் அவர்களுக்கான எளிய பரிகாரங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
மேஷம் (Aries)
Image Credit : Asianet News

மேஷம் (Aries)

அங்காரக யோகத்தின் தாக்கம் மேஷ ராசியினருக்கு கலக்கத்தை ஏற்படுத்தலாம். குறிப்பாக பண விஷயங்களில் நீங்கள் வழக்கத்தை விட அதிக எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். யாருக்கும் கடன் கொடுக்கவோ அல்லது வாங்கவோ வேண்டாம். அவசரப்பட்டு செய்யும் முதலீடுகள் நஷ்டத்தில் முடியலாம். உங்கள் உடல்நலத்தில் அக்கறை காட்டுவது அவசியம். சிறிய உபாதையாக இருந்தாலும் அலட்சியப்படுத்தாதீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆரோக்கியமும் கவலையைத் தரலாம்.

முக்கிய அறிவுரை: அவசரப்பட்டு எந்த ஒரு நிதி சார்ந்த முடிவுகளையும் எடுக்க வேண்டாம்; பொறுமை மட்டுமே உங்களை காக்கும்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டு, கந்த சஷ்டி கவசம் படித்து வர அசுப பலன்கள் குறையும்.

Related Articles

Related image1
Astrology: இந்த 4 ராசிக்காரங்கதான் உலகத்திலேயே 'பெஸ்ட் அப்பா'... உங்க ராசி இதுல இருக்கா?
Related image2
Zodiac Signs: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஸ்பெஷல்! தனிமைதான் இவங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்! உங்க ராசி இருக்கா?
34
விருச்சிகம் (Scorpio)
Image Credit : Asianet News

விருச்சிகம் (Scorpio)

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட விருச்சிக ராசியினருக்கு இந்த அங்காரக யோகம் மிகுந்த மன உளைச்சலைத் தரக்கூடும். எந்த ஒரு காரியத்திலும் தடைகளும், தோல்விகளும் வந்து போகலாம். வர்த்தகத் துறையில் இருப்பவர்கள் பணப் பரிவர்த்தனைகளை மிகக் கவனமாக கையாள வேண்டும். தேவையற்ற ரிஸ்க் எடுப்பதை முற்றிலும் தவிர்க்கவும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடன் தேவையற்ற வாக்குவாதங்கள் அல்லது கருத்து வேறுபாடுகள் வரலாம்.

பொருளாதாரம்: எதிர்பாராத செலவுகள் உங்கள் பட்ஜெட்டை துளைத்து எடுக்கும். புதிய முதலீடுகளை தள்ளிப்போடுவது நல்லது.

பரிகாரம்: தினமும் அல்லது செவ்வாய்க்கிழமைகளில் துர்க்கை அம்மனுக்கு நெய் தீபமேற்றி, ராகு கால பூஜை செய்து வர மன அமைதி கிடைக்கும்.

44
தனுசு (Sagittarius)
Image Credit : Asianet News

தனுசு (Sagittarius)

தனுசு ராசிக்காரர்களுக்கு இக்காலகட்டத்தில் 'வாக்கே' மிகப்பெரிய ஆயுதமாக மாறும். எனவே, பேசும் வார்த்தைகளில் நிதானம் மிக மிக முக்கியம். உங்களின் முரட்டுத்தனமான பேச்சு குடும்பத்திலும், வெளியிலும் தேவையற்ற விரிசல்களையும், சண்டைகளையும் உருவாக்கலாம். பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் அழுத்தம் அதிகமாக இருக்கும். அமைதியைக் கடைப்பிடிப்பது மட்டுமே ஆபத்தில் இருந்து உங்களைக் காக்கும்.

பண இழப்பு: நிதி இழப்புகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம் என்பதால், ஷேர் மார்க்கெட், லாட்டரி போன்ற எதிலும் பணத்தைப் போட வேண்டாம். 

பரிகாரம்: சனிக்கிழமை அல்லது வியாழக்கிழமைகளில் கால பைரவரை வழிபட்டு, ஏழை எளியவர்களுக்கு அன்னதானம் செய்து வர ராகுவின் பாதிப்புகள் குறையும்.

About the Author

RA
Rayar A
டிசம்பர் 2024 முதல் ஏசியாநெட் தமிழ் வெப்சைட்டில் பணிபுரிந்து வருகிறேன். இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளேன். விளையாட்டு, டெக்னாலஜி மற்றும் பயணம் தொடர்பான செய்திகளை எழுதுவதில் ஆர்வம் உண்டு. தினத்தந்தி, ஒன் இந்தியா தமிழ், ஆதன் என முன்னணி ஊடகங்களில் பணியாற்றிய அனுபவம் உள்ளது. என்னை rayar.a@asianetnews.in என்ற மின்னஞ்சல் முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.
ஜோதிடம்
ஜோதிடம்
Latest Videos
Recommended Stories
Recommended image1
Shadashtak Yog: ஒன்றாக இணையும் சூரியன் ராகு.! ஆகஸ்ட் 17 வரை இந்த 4 ராசிக்காரர்களுக்கு ஆபத்து; சடாஷ்டக யோகத்தால் டபுள் சிக்கல்.!
Recommended image2
Astrology: புதன்-சுக்கிரன் சுப பார்வையால் 4 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்! பணம், காதல், வேலையில் அடிக்கும் யோகம்.!
Recommended image3
சுக்ர மங்கள யோகம் : கணவன்-மனைவியும் இந்த ராசிகளில் பிறந்திருந்தால் கோடீஸ்வர யோகம் உறுதி!
Related Stories
Recommended image1
Astrology: இந்த 4 ராசிக்காரங்கதான் உலகத்திலேயே 'பெஸ்ட் அப்பா'... உங்க ராசி இதுல இருக்கா?
Recommended image2
Zodiac Signs: இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஸ்பெஷல்! தனிமைதான் இவங்களுக்கு பெஸ்ட் ஃப்ரெண்ட்! உங்க ராசி இருக்கா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved