- Home
- Astrology
- Astrology: 2026-ல் பாதையை மாற்றும் ராகு-கேது.! 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும்.! பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும்.!
Astrology: 2026-ல் பாதையை மாற்றும் ராகு-கேது.! 3 ராசிகளுக்கு பொற்காலம் தொடங்கும்.! பேங்க் பேலன்ஸ் அதிகரிக்கும்.!
Rahu Ketu Peyarchi 2026 rasi palangal: 2026 ஆம் ஆண்டு ராகு கேது ஆகிய பாவ கிரகங்கள் தங்கள் ராசிகளை மாற்ற உள்ளன. இதன் காரணமாக பலன் பெறும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி 2026
வேத ஜோதிடத்தில் ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் பாவ கிரகங்களாக அறியப்படுகின்றன. இவை நிழல் கிரகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. ராகு கேது தங்களின் ராசிகளை மாற்றும்பொழுது அது 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 2026 டிசம்பர் 5ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. ராகு பகவான் கும்ப ராசியில் இருந்து சனிக்கு சொந்தமான மகர ராசிக்கும், கேது பகவான் சிம்ம ராசியிலிருந்து சந்திரனுக்கு சொந்தமான கடக ராசிக்கும் மாற இருக்கின்றனர். இந்தப் பெயர்ச்சி சுமார் ஒன்றரை ஆண்டுகள் (18 மாதங்கள்) வரை நீடிக்கும்.
ராகு மற்றும் கேது ஆகிய இருவரும் நிழல் கிரகங்களாகும். இவர்கள் ஒருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ப பலன்களை வழங்குகின்றனர். பொதுவாக ராகு 3,6,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுதும், கேது 3,6,10,11 ஆகிய இடங்களில் சஞ்சரிக்கும் பொழுதும் சுப பலன்களை அதிகம் வழங்குவார்கள் என்பது ஜோதிட விதியாகும். ராகு மகரத்திலும், கேது கடகத்திலும் சஞ்சரிக்கும் பொழுது அதிர்ஷ்டம் பெரும் ராசிக்காரர்கள் குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.
துலாம்
- ராகு துலாம் ராசியின் நான்காவது வீடான சுக ஸ்தானத்திலும், கேது பத்தாம் வீடான கர்ம ஸ்தானம் பெயர்ச்சி அடைகின்றனர்.
- இதன் காரணமாக துலாம் ராசிக்காரர்கள் புதிய சொத்துக்களை வாங்குவீர்கள். தொழிலில் எதிர்பாராத வளர்ச்சி கிடைக்கும்.
- நீங்கள் செய்துவரும் வேலையிலும் முன்னேற்றத்தை அனுபவிப்பீர்கள். வேலையில்லாமல் தவித்து வருபவர்கள் புதிய வேலைகளைப் பெறுவீர்கள்.
- வணிகம் செய்து வருபவர்கள் நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள். அரசாங்க ஒப்பந்தம், டெண்டர்கள் அல்லது லாபம் தரக்கூடிய ஆர்டர்கள் கைவசம் கிடைக்கும்.
- திருமணமாகாதவர்களுக்கு திருமண பேச்சு வார்த்தைகள் கைகூடும்.
- நீங்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி பெறும். சமூகத்தில் உங்கள் கௌரவம் அதிகரிக்கும்.
தனுசு
- ராகு தனுசு ராசியின் இரண்டாம் வீட்டிலும்,கேது எட்டாம் வீட்டிலும் சஞ்சரிக்க உள்ளனர். இரண்டாவது வீடு செல்வ வீடாகவும், எட்டாவது வீடு ஆயுள், மரணம், நீண்ட கால நோய்கள், தடைகள், திடீர் மாற்றங்கள், சொத்துக்கள் ஆகியவற்றை குறிக்கும் வீடாக இருக்கிறது.
- எனவே இந்த நேரத்தில் நீங்கள் அவ்வப்போது எதிர்பாராத நிதி ஆதாயங்களை அனுபவிப்பீர்கள்.
- பங்குச்சந்தைகள் முதலீடுகளில் இருந்து நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். இரண்டாம் இடத்திற்கு ராகு வருவது திடீர் பண வரவு, பொருளாதார மேம்பாட்டை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது.
- குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறலாம். எட்டாம் இடத்தில் கேது வருவது எதிர்பாராத உதவிகள், மறைமுக பலன்கள், ஆன்மீக ஈடுபாட்டை கொடுக்கும்.
- நீண்ட கால நோய்களால் அவதிப்பட்டு வருபவர்களுக்கு நிரந்தர விடுதலை கிடைக்கும்.
ரிஷபம்
- ரிஷப ராசியின் ஒன்பதாவது வீடான பாக்கிய ஸ்தானத்தில் ராகுவும், கேது சகோதரன் வீரம் ஆகியவற்றை குறிக்கும் மூன்றாவது வீட்டில் சஞ்சரிக்க இருக்கின்றனர்.
- கேதுவின் மூன்றாம் வீடு சஞ்சாரம் வெற்றியைத் தரும். துணிச்சல் அதிகரிக்கும். சகோதர உறவுகள் பலப்படும்.
- ஒன்பதாவது இடத்திற்கு ராகு வருவது புதிய வாய்ப்புகள், ஆன்மீக பயணங்கள் மற்றும் தந்தை வழி உதவிகளை வழங்கும். அதிர்ஷ்டம் கை கொடுக்கும்.
- நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிவடையும். புதிய வீடு கட்டுதல் அல்லது பழைய வீட்டை மராமத்து செய்யும் பணிகள் நடைபெறும்.
- திருமணமாகாதவர்களுக்கு திருமண வாய்ப்புகள் ஏற்படும். புதிய வாகனம், வீடு, மனை வாங்கும் யோகம் கைகூடும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)