- Home
- Astrology
- Astrology: புரட்டாசி மாதம் பிறந்தாச்சு.! இந்த 3 ராசிக்காரர்கள் கொடி கட்டி பறக்கப் போறீங்க.!
Astrology: புரட்டாசி மாதம் பிறந்தாச்சு.! இந்த 3 ராசிக்காரர்கள் கொடி கட்டி பறக்கப் போறீங்க.!
Purattasi rasi palan 2025: தமிழ் மாதங்களில் புரட்டாசி மாதம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது் புரட்டாசி மாதம் பிறந்துள்ள நிலையில் 3 ராசிக்காரர்கள் அதிர்ஷ்டத்தை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

புரட்டாசி மாத ராசி பலன்கள்
தமிழ் மாதங்கள் சூரியனின் பெயர்ச்சியை அடிப்படையாகக் கொண்டே கணக்கிடப்படுகின்றன. சூரியன் ஒவ்வொரு மாதமும் தனது ராசியை மாற்றும் பொழுது தமிழ் மாதங்கள் பிறக்கின்றன. அந்த வகையில் செப்டம்பர் 17ஆம் தேதி சூரிய பகவான் சிம்ம ராசியில் இருந்து வெளியேறி கன்னி ராசிக்குள் நுழைந்திருக்கிறார். சூரிய பகவானின் கன்னி ராசி பெயர்ச்சியின் பொழுது புரட்டாசி மாதம் பிறக்கிறது. சூரியனின் பெயர்ச்சியால் பல ராசிகள் பலன்களை அனுபவித்தாலும், குறிப்பிட்ட மூன்று ராசிக்காரர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைக்க உள்ளது அவர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கன்னி
கன்னி ராசியின் முதல் வீட்டில் சூரியனின் பெயர்ச்சி நடந்துள்ளது. இதன் காரணமாக புரட்டாசி மாதத்தில் கன்னி ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். சூரிய பகவான் ஆற்றல், தன்னம்பிக்கை, தலைமைப் பண்பு, தைரியம் ஆகியவற்றின் காரகராக விளங்குகிறார். எனவே கன்னி ராசிக்காரர்களுக்கு இந்த மாதம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பல முக்கிய முடிவுகளை தைரியமாகவும், தெளிவாகவும் எடுத்து வெற்றி காண்பீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். புதிய சொத்துக்களை வாங்கும் யோகமும் கிடைக்கும். உங்கள் பேச்சாற்றல் மூலமாக பல வேலைகளையும் சிறப்பாக முடிப்பீர்கள். திருமணமானவர்களின் குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும். திருமணமாகாதவர்களுக்கு திருமண வரன்கள் தேடி வரும்.
தனுசு
தனுசு ராசியின் பத்தாவது வீட்டிற்கு சூரியன் செல்லவிருக்கிறார். இதன் காரணமாக புரட்டாசி மாதம் முழுவதும் நீங்கள் நல்ல பலன்களை அனுபவிப்பீர்கள். ஜாதகத்தின் படி 10வது வீடு என்பது கர்ம ஸ்தானம் என்று அழைக்கப்படுகிறது. இது ஒருவரின் தொழில், வேலை, சமூக அந்தஸ்து ஆகியவற்றை குறிக்கிறது. எனவே இந்த மாதம் தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை தொடர்பான பல சுப செய்திகள் வந்து சேரலாம். பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அலுவலகத்தில் ஒரு குழுவை தாங்கும் அளவிற்கு தலைமை பொறுப்புகள் வழங்கப்படலாம். உங்கள் தலைமையில் கொடுக்கப்பட்ட வேலைகளை முடித்து பாராட்டுகளைப் பெறுவீர்கள் புதிய வருமான ஆதாரங்கள் உருவாகும். வேலை மாறுதலுக்காக காத்திருப்பவர்கள், அரசு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு சுப செய்தி கிடைக்கும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியின் 11வது வீட்டில் சூரிய பகவான் சஞ்சரிக்க இருக்கிறார். ஜாதகத்தின் படி 11வது வீடு என்பது லாப ஸ்தானமாகும். அதாவது பணம், பொருள் ரீதியான லாபங்கள், உடன் பிறந்தவர்கள், குடும்பத்தினருடன் உறவுகள் ஆகியவற்றை குறிக்கிறது. இதன் காரணமாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு வருமானத்தில் அபரிமிதமான உயர்வு ஏற்படும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் உருவாகும். குடும்பத்தினருடனான நெருக்கம் அதிகரிக்கும். புதுமணத் தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். பங்குச் சந்தை மற்றும் பிற முதலீடுகள் செய்திருப்பவர்களுக்கு முதலீடுகளில் இருந்து எதிர்பாராத லாபம் கிடைக்கலாம். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரலாம். புதிய வீடு, மனை, நிலம், வாகனம் வாங்கும் யோகம் உண்டு.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)