Birth Date: இந்த 4 தேதில பிறந்தவங்க கொடுத்து வச்சவங்க; கஷ்டப்படாம முன்னேறுவாங்க
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் எந்தவித சிரமமும் இல்லாமல் முன்னேற்றத்தை காண்பார்கள்.

எண் கணிதம்..
வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தை அடைய வேண்டும் என்று எல்லோருக்கும் ஆசை இருக்கும். இதற்காக கடுமையாக முயற்சிப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் சிலர் எவ்வளவுதான் கடினமாக முயற்சித்தாலும் அவர்கள் விரும்பிய வெற்றியை அடையமாட்டார்கள். இது துரதிஷ்டம் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் சிலரோ எந்தவித சிரமமும் இல்லாமல் வெற்றியை காண்பார்கள் அவர்கள் விரும்பும் காரியம் எல்லாம் நடக்கும். அந்த வகையில் எண், கணிதத்தின் படி சில குறிப்பிட்ட தேதியில் பிறந்தவர்களுக்கு இந்த அதிஷ்டம் காத்திருக்கிறது. அவர்கள் கடினமாக உழைக்காமல் விரும்பியது சுலபமாக அடைய முடியும். அது எந்தெந்த தேதிகள் என்னவென்று இந்த பதிவில் இப்போது பார்க்கலாம்.
3ஆம் தேதி
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 3ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு வெற்றி காத்திருக்கிறது. இவர்கள் பேசுவதில் ரொம்பவே திறமையானவர்கள் இவர்கள் தங்களது வாழ்க்கையில் வெற்றியை மிக விரைவாக அடைந்துவிடுவார்கள். தெரியாத நபர்களிடம் எந்தவித தயக்கம் மற்றும் பயம் இல்லாமல் பேசும் திறன் இவர்களுக்கு உண்டு. இவர்கள் எதையும் சாதிக்க கடினமாக உழைக்க வேண்டிய அவசியமில்லை. வாய்ப்புகள் அவர்களைத் தேடி வரும். ஏதாவது ஒரு வழியில் யாராவது அவர்களுக்கு உதவி செய்வார்கள். இவர்களின் பேசும் விதம் பிறரை ஈர்க்கும். மக்களுக்கு இவர்கள் மீது மதிப்பு அதிகம் இருக்கும். இந்த குணத்திற்காக தான் வாய்ப்புகள் இவர்களுக்கு கிடைக்கிறது.
6ஆம் தேதி
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 6ம் தேதியில் பிறந்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள். இவர்கள் ரொம்பவே நேர்மையாக இருப்பார்கள் பிறரிடம் சண்டை போட மாட்டார்கள். இந்த பண்பால் வெற்றி இவர்களை தேடி வரும். இவர்கள் பிறரிடம் மிக எளிதாக பழகுவதால் புதிய வாய்ப்புகள் இவர்களை தேடி வரும். இதன் மூலம் வெற்றியை இவர்கள் சுலபமாக அடைந்து விடுவார்கள்.
11ஆம் தேதி
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 11 ஆம் தேதியில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள். இவர்கள் தங்களது வாழ்க்கையில் வெற்றியை மிக சுலபமாக அடைந்து விடுவார்கள். இவர்கள் தங்கள் மீது அதிக நம்பிக்கை வைப்பார்கள். அந்த காரணத்திற்காக பல வாய்ப்புகளை சுலபமாக தட்டி தூக்குவார்கள். இவர்கள் பிறருக்கு முன்மாதிரியாக இருப்பார்கள்.
12 ஆம் தேதி
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் 12-ஆம் தேதியில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் வெற்றியை மிகவும் விரைவாக அடைந்து விடுவார்கள். இவர்களிடம் தலைமைத்து குணம் இருக்கிறது. இவர்கள் எந்த வாய்ப்பு வந்தாலும் அவற்றை எளிதாக வெல்வார்கள். இந்த காரணத்திற்காக அவர்கள் தங்களது வாழ்க்கையில் வெற்றியை மிக விரைவாக அடைய முடிகிறது.