- Home
- Astrology
- Birth Month : ஆண்களே! உங்க மனைவி பிறந்த மாதம் இதுவா? உஷார்! நிறைய விஷயங்களை மறைப்பாங்க!
Birth Month : ஆண்களே! உங்க மனைவி பிறந்த மாதம் இதுவா? உஷார்! நிறைய விஷயங்களை மறைப்பாங்க!
ஜோதிடத்தின் படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் தங்கள் துணையிடம் ரகசியங்களை மறைப்பார்களாம். அது எந்தெந்த மாதம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

Birth Month
ஒரு உறவின் அடித்தளம் நம்பிக்கையில் தான் கட்டமைக்கப்படுகிறது. ஆனால் எவ்வளவுதான் உறவில் நெருக்கமாக இருந்தாலும் அதில் சில ரகசியங்கள் கண்டிப்பாக இருக்க தான் செய்யும். திருமண உறவும் அதில் அடங்கும். ஆம் , எல்லோருமே தங்கள் துணையிடம் வெளிப்படையாக இருப்பதில்லை. சில விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பார்கள். அந்த வகையில் ஜோதிடத்தின்படி, சில குறிப்பிட்ட மாதங்களில் பிறந்தவர்கள் தங்கள் துணையிடம் ரகசியங்களை மறைப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. அது என்னென்ன மாதம் என்று இந்த பதிவில் பார்க்கலாம்.
ஜனவரி :
ஜோதிடத்தின் படி, ஜனவரி மாதத்தில் பிறந்தவர்கள் எதார்த்த அணுகுமுறை கொண்டவர்களாக இருப்பார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பொரும்பாலும், துணையை குறித்து கவலைப்படுவதை தவிர்க்க தங்களது உணர்ச்சிகளை மறைப்பார்கள். மேலும் இவர்கள் வேலை தொடர்பான பிரச்சினைகள், தனிப்பட்ட சவால்கள் குறித்து எப்போதுமே ரகசியமாக வைத்திருப்பார்கள். ஏனெனில், அவர்கள் வலிமையாக தெரிய விரும்புவார்கள். இதனால் ரகசியங்கள் வெளிப்படுத்தமாட்டார்கள்.
மே
ஜோதிடத்தின் படி, மே மாதத்தில் பிறந்தவர்கள் வசீகரமானவர்கள், ஆனால் அதிகமாக பொய் செய்வார்கள். ஆனாலும் இவர்கள் தங்களது சில விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பார்கள். குறிப்பாக இவர்கள் தங்களது கடந்த கால விஷயங்களை ரகசியமாக வைத்திருப்பார்கள்.
ஆகஸ்ட்
ஜோதிடத்தின் படி, ஆகஸ்ட் மாதத்தில் பிறந்தவர்கள் சுதந்திரத்தை மதிக்கிறார்கள். இவர்கள் தங்களது உறவில் எப்போதுமே நீண்ட காலத் திட்டங்கள் மற்றும் உண்மையான எண்ணங்களை பகிர்ந்து கொள்ள விரும்ப மாட்டார்கள் அது ரகசியமாகவே வைத்திருப்பார்கள். சில சமயம் தங்களது தனித்துவ உணர்வை கூட ரகசியமாக வைத்திருப்பார்கள்.
நவம்பர்
ஜோதிடத்தின் படி, நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே ரகசியத்தை பாதுகாக்கும் குணம் உடையவர்கள். இவர்கள் தங்களது ஆழ்ந்த உணர்ச்சிகளை கூட துணையிடம் அரிதாகவே வெளிப்படுத்த விரும்புவார்கள். தங்களது உறவு முற்றிலும் பாதுகாப்பானது என்று இவர்கள் உணரும் வரை தங்களது ரகசியங்களை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். இவர்கள் துணைக்கு விசுவாசம் ஆனவர்களாக இருந்தாலும் அவர்களது இயல்பு ரகசியங்களை பாதுகாப்பாக வைப்பதாகும்.