- Home
- Astrology
- இந்த தேதிகளில் முதல் பெண் குழந்தை பிறந்தால் தந்தைக்கு அதிர்ஷ்டம்.! மகாலெட்சுமியே பிறந்ததாக அர்த்தம்.!
இந்த தேதிகளில் முதல் பெண் குழந்தை பிறந்தால் தந்தைக்கு அதிர்ஷ்டம்.! மகாலெட்சுமியே பிறந்ததாக அர்த்தம்.!
Numerology for father and daughter: ஒரு வீட்டில் முதல் குழந்தையாக பெண் குழந்தை பிறப்பது மகாலட்சுமியே வீட்டிற்குள் நுழைவதைப் போல கருதப்படுகிறது. எண் கணிதப்படி, சில தேதிகளில் பிறந்த பெண் குழந்தைகள் தந்தைக்கு அதிர்ஷ்டத்தைக் கொண்டு வருவார்கள்.

எண் 1 (1, 10, 19, 28)
எந்த மாதத்திலும் 1, 10, 19, 28 தேதிகளில் பிறந்தவர்கள் எண் 1-ன் கீழ் வருவார்கள். இந்த எண்ணின் அதிபதி சூரியன் ஆவார். இந்த தேதிகளில் பெண் குழந்தை முதல் குழந்தையாக பிறந்தால், தந்தைக்கு அதிர்ஷ்டம் கூடும். தந்தைக்கு சமூகத்தில் மரியாதை, பதவி உயர்வு கிடைக்கும். அரசு வேலையில் இருந்தால் பதவி உயர்வு நிச்சயம். அரசியல் இருப்பவர்கள் அதிகாரமிக்க பதவிகளிம் ஜொலிப்பார்கள். இந்த தேதிகள் பிறக்கு மூத்த மகள் தந்தைக்கு ஒரு லக்கி சார்மாக இருப்பாள்.
எண் 3 (3, 12, 21, 30)
எந்த மாதத்திலும் 3, 12, 21, 30 தேதிகளில் பிறந்தவர்கள் எண் 3-ன் கீழ் வருவார்கள். இந்த எண்ணின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த தேதிகளில் முதல் குழந்தையாக பெண் பிறந்தால், தந்தையின் அதிர்ஷ்டம் இரட்டிப்பாகும். மகள் பிறந்தவுடன் தந்தையின் பிரச்சனைகள் தீரும். சொத்து பிரச்சனைகள் முடிவுக்கு வரும். திடீர் பண வரவு உண்டாகும். தந்தை ஆன்மீக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் உயர்ந்த நிலையை அடைவார்.
எண் 5 ( 5, 14, 23)
எந்த மாதத்திலும் 5, 14, 23 தேதிகளில் பிறந்தவர்கள் எண் 5-ன் கீழ் வருவார்கள். இந்த தேதிகளில் முதல் குழந்தை பெண்ணாக பிறந்தால், தந்தையின் அதிர்ஷ்டத்தை யாராலும் தடுக்க முடியாது. இதன் அதிபதி புதன். புதன் வியாபாரத்திற்கு காரகன். தந்தை வியாபாரத்தில் இருந்தால், மகள் பிறந்த பிறகு தொழில் அபார வளர்ச்சி அடையும். புதிய ஒப்பந்தங்கள், வெளிநாட்டு பயணங்கள் கைகூடும். தந்தை கோடீஸ்வரர் ஆவார்.
எண் 6 ( 6, 15, 24)
எந்த மாதத்திலும் 6, 15, 24 தேதிகளில் பிறந்தவர்கள் எண் 6-ன் கீழ் வருவார்கள். இதன் அதிபதி சுக்கிரன். முதல் குழந்தை பெண்ணாக பிறந்தால், வீட்டில் செல்வத்திற்கு குறைவிருக்காது. சுக்கிரன் ஆடம்பரம் மற்றும் செல்வத்திற்கு அதிபதி. இந்த தேதிகளில் பெண் பிறந்தால், தந்தை புதிய வீடு அல்லது வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். வீட்டில் மகிழ்ச்சி பெருகும். தந்தையிடம் அதிக பாசம் கொண்டிருப்பார்கள்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

