Birth Date : இந்த தேதில பொறந்தவங்க செம்ம அதிர்ஷ்டசாலி! வெற்றி மேல வெற்றி குவியும்
எண் கணிதத்தின் படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் எந்த துறையில் நுழைந்தாலும் எளிதில் வெற்றி பெறுவார்கள். அந்த லிஸ்டில் நீங்கள் பிறந்த தேதி இருக்கிறதா?

Numerology Number for Success
எண் கணிதம் என்பது ஜோதிடத்தின் ஒரு கிளையாகும். இது ஒருவரது பிறந்த தேதி அடிப்படையில் அவரது குணாதிசயங்கள், எதிர்கால வாழ்க்கையை கணிக்கும். இத்தகைய சூழ்நிலையில், எண் கணிதத்தின்படி, சில குறிப்பிட்ட தேதிகளில் பிறந்தவர்கள் இயற்கையாகவே சிறப்பான திறமைகளுடன் பிறக்கிறார்களாம். அவர்கள் எந்த துறையில் நுழைந்தாலும் அதில் எளிதில் வெற்றியை பெற்று விடுவார்களாம் என்கிறது எண் கணிதம். அந்தப் பிறந்த தேதிகள் என்னென்ன என்பதை இப்போது இந்த பதிவில் பார்க்கலாம்.
எண் 1 (1, 10, 19 மற்றும் 28)
எண் கணிதத்தின்படி, எந்த மாதத்திலும் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்களிடம் தலைமை பண்புகள் இருக்கும் இவர்கள் எல்லாவற்றையும் தெளிவாக புரிந்து கொண்டு முடிவெடுப்பார்களாம். இவர்களிடம் விஷயங்களை பார்க்கும் உள்ளார்ந்த திறன் இருக்குமாம். இவர்களை நோக்கி புதிய புதிய வாய்ப்புகள் வருமாம். இந்த தேதியில் பிறந்தவர்கள் தங்களுக்கு பிடித்த புதிய பாதைகளை தேர்ந்தெடுத்து வாழ்க்கையில் முன்னேறி செல்வார்களாம்.
எண் 3 (3, 12, 21 மற்றும் 30)
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த 4 தேதிகளில் பிறந்தவர்கள் அதை புத்திசாலிகளாக இருப்பார்களாம். சவால்களுக்கு தனித்துவமான தீர்வுகளை காண்பர்களாம். கலை மற்றும் தகவல் தொடர்பு போன்ற படைப்பு துறைகளில் சிறந்து விளங்குவார்களாம். இவர்கள் எந்த துறையில் நுழைந்தாலும் அதில் வெற்றியை காண்பார்கள்.
எண் 5 (5, 14 மற்றும் 23)
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் சாகசம் செய்ய பிறந்தவர்களாம். இவர்கள் அச்சமின்றி தைரியத்துடன் புதிய புதிய விஷயங்களை ஆராய்ந்து வெற்றியை காண்பார்களாம். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் அதை பயன்படுத்தி முன்னேறுவார்களாம். இவர்களிடம் அதிக திறமை இருக்கும். இந்த தேதிகளில் பிறந்தவர்கள் புதிய நுட்பங்களை அடிக்கடி அறிமுகப்படுத்துவார்களாம்.
எண் 9 (9, 18 மற்றும் 27)
எண் கணிதத்தின் படி, எந்த மாதத்திலும் இந்த 3 தேதிகளில் பிறந்தவர்கள் தொலைநோக்கு பார்வை கொண்டவர்களாக இருப்பார்களாம். இவர்கள் வலுவான தலைமை பண்புகள் உடையவர்கள். வெற்றி பெற வேண்டும் என்று எண்ணம் இவர்களுக்கு அதிகமாக இருக்கும். வியாபாரத்தில் வரும் பிரச்சனைகளை எளிதாக தீர்த்து விடுவார்கள். புதிய தொழில்களை தொடங்குவது இவர்களுக்கு சர்வ சாதாரணம். இவர்களிடம் இருக்கும் திறமைகள் தொழிலில் லாபத்தை காண்பார்கள். சவாலான சூழ்நிலைகளை வெற்றிகரமாக முடித்து விடுவார்கள்.