- Home
- Astrology
- Mesham to Meenam Nov 21 Daily Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரை.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!
Mesham to Meenam Nov 21 Daily Rasi Palan: மேஷம் முதல் மீனம் வரை.! அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்.!
November 21 Daily Horoscope for 12 zodiac signs: நவம்பர் 21, 2025 12 ராசிகளுக்குமான பொது பலன்கள் குறித்தும், அதிர்ஷ்டம் பெறும் ராசிகள், கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் பற்றியும் இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
11

Image Credit : Asianet News
Mesham to Meenam Nov 21 Daily Rasi Palan
மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான பொதுவான பலன்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்:
- இன்று உங்கள் முயற்சிகளில் வெற்றி காணும் நாளாக இருக்கும். பணியிடத்தில் சக ஊழியர்கள் மற்றும் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல செய்திகள் வரலாம். நிதி நிலைமை சீராக இருக்கும். பேச்சில் நிதானம் தேவை.
- அதிர்ஷ்ட எண்: 9.
- அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள்.
ரிஷபம்:
- இன்று குடும்பத்துடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவீர்கள். புதிய முதலீடுகளைப் பற்றி சிந்திப்பீர்கள். வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கி முன்னேற்றம் காணப்படும். ஐடி துறையில் இருப்பவர்களுக்கு சாதகமான நாளாகும். அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது.
- அதிர்ஷ்ட எண்: 6.
- அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை.
மிதுனம்:
- இன்று எதிர்பாராத நன்மைகள் உண்டாகும். நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரின் முழு ஆதரவு கிடைக்கும். தொழில் அல்லது வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
- அதிர்ஷ்ட எண்: 5.
- அதிர்ஷ்ட நிறம்: பச்சை.
கடகம்:
- இன்று உணர்ச்சிபூர்வமான முடிவுகளை தவிர்த்து நிதானமாக செயல்படுங்கள். தாய் வழி உறவுகளால் நன்மைகள் கிடைக்கும். வேலைப்பளு அதிகமாக இருந்தாலும் திருப்தியான நாளாக இருக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.
- அதிர்ஷ்ட எண்: 2.
- அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள்.
சிம்மம்:
- சிம்ம ராசிக்காரர்கள் இன்று நம்பிக்கையுடன் செயல்பட்டு காரியங்களில் வெற்றியைக் காண்பீர்கள். உங்களின் தலைமைப் பண்பு பாராட்டப்படும். அரசு சார்ந்த துறைகளில் நன்மைகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. உங்கள் வாழ்க்கைத் துணையுடன் நல்லுறவு நீடிக்கும்.
- அதிர்ஷ்ட எண்: 1.
- அதிர்ஷ்ட நிறம்: சாம்பல்.
கன்னி:
- கன்னி ராசிக்காரர்களுக்கு நிதி நிலைமை மேம்படும். பழைய கடன்களை அடைப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். குடும்ப பொறுப்புகளை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். சில பயணங்களை ஒத்தி வைப்பது நல்லது.
- அதிர்ஷ்ட எண்: 3.
- அதிர்ஷ்ட நிறம்: அடர் பச்சை.
துலாம்:
- இன்று சமூகத்தில் உங்களின் மதிப்பு உயரும். புதிய முயற்சிகளை தொடங்குவதற்கு சாதகமான நாளாகும். வாழ்க்கைத் துணை வழி உறவுகளால் ஆதாயம் கிடைக்கும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த காரியங்கள் இன்று கைகூடும்.
- அதிர்ஷ்ட எண்: 6.
- அதிர்ஷ்ட நிறம்: இளஞ்சிவப்பு.
விருச்சிகம்:
- இன்று சவால்களை சந்திக்கும் நாளாக இருக்கலாம். மன உறுதியுடன் செயல்பட்டு வெற்றியைப் பெறுவீர்கள். இன்று உங்களுக்கு ஏற்படும் எதிர்ப்புகளை கடந்து செல்வீர்கள். வெளிநாட்டுத் தொடர்புகள் லாபம் தரும். வாகனத்தில் செல்லும் பொழுது கவனம் தேவை.
- அதிர்ஷ்ட எண்: 9.
- அதிர்ஷ்ட நிறம்: கருஞ்சிவப்பு.
தனுசு:
- தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று நிதி நன்மைகள் கிடைக்கும். நண்பர்கள் மற்றும் மூத்தவர்களின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது. மாணவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் ஏற்படும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயற்சிப்பது நல்லது. ஆன்மீகப் பயணம் மேற்கொள்ள திட்டமிடலாம்.
- அதிர்ஷ்ட எண்: 3.
- அதிர்ஷ்ட நிறம்: ஊதா.
மகரம்:
- மகர ராசிக்கு நேயர்களே நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி பெறுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. தொழில் ரீதியான உழைப்புக்கு பலன்கள் கிடைக்கும். பெற்றோரின் ஆதரவு மனதிற்கு மகிழ்ச்சி தரும்.
- அதிர்ஷ்ட எண்: 8.
- அதிர்ஷ்ட நிறம்: கருநீலம்.
கும்பம்:
- கும்ப ராசி நேயர்களே இன்று அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். புதிய திட்டங்களை செயல்படுத்துவதில் வெற்றியைக் காண்பீர்கள். தந்தையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. உங்களின் தொலைநோக்கு சிந்தனைகள் பாராட்டுகளைப் பெற்றுத் தரும். அவசர முடிவுகளை தவிர்க்கவும்.
- அதிர்ஷ்ட எண்: 4.
- அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம்.
மீனம்:
- மீன ராசிக்காரர்கள் சற்று குழப்பமான மனநிலையுடன் காணப்படுவீர்கள். யோசித்து செயல்படுவது நல்லது. எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளதால், நிதி நிலைமையை கவனமாக கையாளவும். மன அழுத்தத்திலிருந்து விடுபட தியானம் செய்வது உதவும்.
- அதிர்ஷ்ட எண்: 1.
- அதிர்ஷ்ட நிறம்: கடல் பச்சை.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)
Latest Videos

