MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Nov 2025 thulam Rasi Palangal: துலாம் ராசி நேயர்களே.! அனைத்து கிரங்களுக்கும் உங்களுக்கு சாதகம்.! கோடீஸ்வர யோகம் பெறுவீர்கள்.!

Nov 2025 thulam Rasi Palangal: துலாம் ராசி நேயர்களே.! அனைத்து கிரங்களுக்கும் உங்களுக்கு சாதகம்.! கோடீஸ்வர யோகம் பெறுவீர்கள்.!

This Month Rasi Palan: நவம்பர் 2025 துலாம் ராசிக்கான பொதுவான பலன்கள், கிரக நிலைகள், தொழில் மற்றும் வேலை, நிதி நிலைமை, ஆரோக்கியம், பரிகாரங்கள் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

2 Min read
Author : Ramprasath S
Published : Oct 31 2025, 06:40 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
நவம்பர் மாத கிரக நிலைகள்:
Image Credit : Asianet News

நவம்பர் மாத கிரக நிலைகள்:

சூரியன்: நவம்பர் 16 வரை உங்கள் ராசியின் முதல் வீட்டில் இருந்து, அதன் பிறகு இரண்டாம் வீட்டிற்கு மாறுகிறார். எனவே சராசரியான பலன்கள் கிடைக்கலாம்.

செவ்வாய்: மாதம் முழுவதும் உங்கள் ராசியில் இரண்டாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இது பொதுவாக சாதகமாக இல்லை என்றாலும், குருவின் தாக்கம் காரணமாக கலவையான அல்லது சராசரி பலன்கள் கிடைக்கலாம்.

புதன்: நவம்பர் 23 வரை உங்கள் இரண்டாம் வீட்டில் இருந்து சாதகமான பலன்களை தர இருக்கிறார்.

சுக்கிரன்: நவம்பர் 2 ஆம் தேதி கன்னி ராசியில் இருந்து துலாம் ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். ராசிநாதனான சுக்கிரன் தனது சொந்த வீட்டில் சஞ்சரிப்பதால், இந்த மாதத்தின் பெரும் பகுதி உங்களுக்கு சாதகமான பலன்களை அளிக்கும்.

சனி: இந்த மாதம் துலாம் ராசிக்காரர்களுக்கு சனி பகவான் நல்ல பலன்களைக் கொடுக்க இருக்கிறார்.

குரு: வக்ர நிலையில் பயணிக்க இருப்பதால் சராசரியை விட ஓரளவுக்கு பலன்களை அளிப்பார்.

பொதுவான பலன்கள்:

துலாம் ராசிக்காரர்கள் வாழ்க்கையில் சாதகமான மாற்றங்களை நவம்பர் மாதம் தொடங்கி காண இருக்கிறீர்கள். குழப்பமான முடிவுகளில் இருந்து விடுபட்டு துணிச்சலான முடிவுகளை எடுப்பீர்கள். உங்கள் கடின உழைப்புக்குரிய பலன்கள் இந்த மாதத்தில் கிடைக்கும். சமூகத்தில் உங்களின் நிலை உயரும். தொழில் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள்.

நிதி நிலைமை:

பணவரவு சீராக இருக்கும். முதலீடுகள் லாபம் தரக்கூடும். நிதி முடிவுகளை கவனமாக எடுப்பது நல்லது. பொருளாதார நிலை உயர்வதற்கான வாய்ப்புகள் உருவாகும். புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும். எதிர்பார்த்த பணம் கைக்கு வருவதில் சற்று தாமதம் ஏற்படலாம். பணம் கொடுக்கல் வாங்கலின் போது கவனத்துடன் இருக்க வேண்டும்.

தொழில் மற்றும் வேலை:

வேலை செய்பவர்களுக்கு இந்த மாதம் சாதகமான பலன்கள் கிடைக்கலாம். பணியிடத்தில் உங்கள் கடின உழைப்பிற்கு ஏற்ற பலன் கிடைக்கும். ஒரு குழுவை தாங்கும் அளவிற்கு பொறுப்புகள் வழங்கப்படலாம். புதிய வேலை வாய்ப்புகள், பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். தொழிலில் இருப்பவர்கள் புதிய திட்டங்களை ஆரம்பிக்கலாம். வேலை செய்யும் பாணியில் பெரிய மாற்றங்களை செய்து அதன் மூலம் லாபத்தை காண முடியும்.

கல்வி மற்றும் ஆரோக்கியம்:

ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த மாதம் கலவையான அல்லது சராசரி பலன்களூ கிடைக்கும். வாட்டி வதைத்து வந்த உடல்நலக் கோளாறுகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும். மாதத்தின் இரண்டாம் பாதியில் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். வயிறு தொடர்பான கோளாறுகள் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் தேர்வுகளில் சிறப்பாக செயல்படுவார்கள். கடின உழைப்பு நல்ல பலன்களைத் தரும். புதனின் நிலை காரணமாக கல்வி சார்ந்த விஷயங்கள் சாதகமாக அமையும்.

குடும்ப உறவுகள்:

இல்லற வாழ்வில் சிறு முரண்பாடுகள் ஏற்பட்டும் மறையும். இருப்பினும் பெரிய பிரச்சினைகள் எதுவும் வராது. குடும்ப உறவுகளில் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் நல்ல உறவைப் பேணுவீர்கள். குடும்பப் பிரச்சினைகள் தீரும். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகள் சில சமயங்களில் உங்களுக்கு எரிச்சலை தருவதாக இருக்கலாம். எனவே அனுசரித்துச் செல்வது நல்லது.

பரிகாரங்கள்:

அரிசி மற்றும் வெல்லம் கலந்து கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கலாம். ஏழைப் பெண்களுக்கு அரிசி அல்லது சர்க்கரை தானமாக வழங்கலாம். ஓம் சுக்ராய நமஹ மந்திரத்தை உச்சரிப்பது அமைதி மற்றும் செழிப்பைத் தரும். மகாலட்சுமி தாயாருக்கு தாமரை மலர்கள் சாற்றி வழிபடலாம். ஏழை எளியவர்களுக்கு உதவுவது நேர்மறை பலன்களை அதிகரிக்கும்.

(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒட்டக சிலையை வீட்டில் வைப்பதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? வாஸ்து சாஸ்திரம் கூறுவது என்ன?
Recommended image2
மார்ச் மாதம் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம்.! இந்த 4 ராசிகளுக்கு கஷ்டங்கள் முடிவுக்கு வரும்.! செல்வ செழிப்பை அடையப்போறீங்க.!
Recommended image3
மார்ச் 2026 முதல் இந்த 3 ராசிகளுக்கு வாழ்க்கையே மாறப்போகுது.! உங்க ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Nov 2025 Viruchiga Rasi Palangal: விருச்சிக ராசி நேயர்களே.! செவ்வாய் பகவான் அருளால் இந்த மாதம் உங்களுக்கு ராஜவாழ்க்கை கிடைக்கும்.!
Recommended image2
Nov 2025 Dhanusu Rasi Palangal: தனுசு ராசி நேயர்களே.! நவம்பர் மாதம் இத்தனை பிரச்சனைகள் ரவுண்டு கட்டி அடிக்கும்.! கவனமா இருங்க.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved