- Home
- Astrology
- Weekly Rasi Palan: மிதுன ராசி நேயர்களே, புதன் வக்ர நிவர்தியால் தொழில் பெரிய வெற்றிகளை குவிப்பீர்கள்.!
Weekly Rasi Palan: மிதுன ராசி நேயர்களே, புதன் வக்ர நிவர்தியால் தொழில் பெரிய வெற்றிகளை குவிப்பீர்கள்.!
Mithuna Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் மிதுன ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வார ராசிப்பலன்கள் - மிதுனம்
மிதுன ராசி நேயர்களே, இந்த மாதம் சூரியன் ஆறாம் வீட்டில் சஞ்சரிப்பது போட்டிகளில் வெற்றி, எதிர்ப்புகளை சமாளிக்கும் திறன் ஆகியவற்றை வழங்கும். புதன் வக்ர நிவர்த்தி அடைய இருப்பதால் குழப்பங்கள் நீங்கி மனத் தெளிவு கிடைக்கும். உற்சாகத்துடனும், நல்ல செய்திகளுடனும் இந்த வாரம் தொடங்கும். உங்கள் தன்னம்பிக்கை உயரும். எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் மன வலிமை உண்டாகும்.
நிதி நிலைமை:
குருவின் பார்வையால் இந்த வாரம் வணிகர்களுக்கு லாபம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கான சாதகமான சூழல் நிலவும். பழைய கடன்களை தீர்க்கும் யோகம் உண்டாகும். பாதுகாப்பான முதலீடுகளில் முதலீடு செய்வீர்கள். பூமி சம்பந்தப்பட்ட விஷயங்களில் அனுகூலம் ஏற்படும். ஆடம்பர செலவுகள் அதிகமாகலாம். எனவே வரவு செலவு திட்டத்தை கட்டுப்படுத்த வேண்டியது அவசியம்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியம் இந்த வாரம் சாதாரணமானதாக இருக்கும். கழிவுப் பாதையில் ஏற்படும் சிறு பிரச்சனைகள் பெரிதாக மாற வாய்ப்பு உள்ளதால் சுத்தத்தில் கவனம் தேவை. தொடர்ச்சியாக இருந்து வந்த மனம் சார்ந்த பிரச்சினைகள் நீங்கி மனதெளிவுடன் இருப்பீர்கள். வேலைக்கும், ஓய்வுக்கும் இடையே சமநிலையை பின்பற்ற வேண்டியது அவசியம். யோகா அல்லது தியானம் மனதிற்கு அமைதி தரும்.
கல்வி:
புதனின் ஆதிக்கம் காரணமாக படிப்பில் தெளிவும், படிப்படியான முன்னேற்றமும் ஏற்படும். மாணவர்கள் தேர்வில் வெற்றி பெறுவதற்கு அதிக முயற்சி மற்றும் கவனம் தேவை. போட்டித் தேர்வுகளுக்கு தயாராகும் மாணவர்களுக்கு இந்த வாரம் சாதகமான பலன்கள் கிடைக்கும்.
தொழில் மற்றும் வியாபாரம்:
உத்தியோகத்தில் நல்ல உயர்வும், மகிழ்ச்சியும் ஏற்படும். உங்கள் உழைப்புக்கான அங்கீகாரம் கிடைக்கும். வேலை தொடர்பாக வெளிநாடு பயணங்கள் மேற்கொள்ளும் வாய்ப்புகள் கிடைக்கலாம். நீண்ட காலமாக இடமாற்றம் எதிர்பார்த்து வருபவர்களுக்கு விருப்பங்கள் நிறைவேறும். தொழில் ரீதியாக அனுகூலங்கள் காணப்படும். தொழிலில் இருந்த கஷ்டங்கள், சிக்கல்கள் அனைத்தும் நீங்கும். தொழில் முன்னேற்றத்தை அடையும்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் ஏராளமான நல்ல விஷயங்கள் நடைபெறும். மகிழ்ச்சி அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களுடன் நெருக்கம் அதிகரிக்கும். தாய் வழி உறவுகள் மூலம் அனுகூலம் ஏற்படும். மூதாதையர் சொத்துக்கள் தொடர்பான தகராறுகள் தீரும். துணையுடன் தரமான நேரத்தை செலவிட வாய்ப்புகள் கிடைக்கும். மனக்கசப்பு ஏற்பட்டாலும் அதை சமாதானம் செய்து கொள்வீர்கள். துணையின் ஆரோக்கியத்தை கவனம் தேவை.
பரிகாரம்:
புதன்கிழமைகளில் விநாயகரை வழிபடுவதால் காரியங்களில் ஏற்படும் தடைகள் நீங்கும். செவ்வாய்க்கிழமைகளில் அம்மன் வழிபாடு உத்தியோகம் மற்றும் தொழிலில் உள்ள தடைகளை நீக்க உதவும். ஏழை குழந்தைகளின் கல்விக்கு உதவுவது அல்லது எழுதுப் பொருட்களை வழங்குவது நல்ல பலன்களை அதிகரிக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)