- Home
- Astrology
- Weekly Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் வெற்றி மீது வெற்றி வந்து குவியும்.! அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் தான்.!
Weekly Rasi Palan: ரிஷப ராசி நேயர்களே, இந்த வாரம் வெற்றி மீது வெற்றி வந்து குவியும்.! அதிர்ஷ்டம் உங்கள் பக்கம் தான்.!
Rishaba Rasi Weekly Rasi Palan: நவம்பர் 10 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலக்கட்டம் ரிஷப ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கப்போகிறது என்பது குறித்த வார ராசிப்பலன்கள் பற்றி இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

வார ராசிப்பலன்கள் - ரிஷபம்
ரிஷப ராசி நேயர்களே, குரு உங்கள் ராசிக்கு சாதகமான நிலையில் இருப்பதால் சுப காரியங்கள், அதிர்ஷ்டம் ஆகியவை கிடைக்கும். சனி பகவான் கர்ம ஸ்தானத்தில் இருப்பதால் தொழிலில் ஸ்திரத்தன்மை ஏற்படும். இந்த வாரம் வெற்றிகரமான வாரமாக இருக்கும். நீண்ட நாட்கள் இழுபறியில் இருந்த பிரச்சனைகள் முடிவடைந்து, அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும்.
நிதி நிலைமை:
வியாபாரிகளுக்கு லாபத்தின் அடிப்படையில் மிகவும் நல்ல வாரமாக அமையும். புதிய வருமானத்திற்கான வாய்ப்புகள் தேடி வரும். இந்த வாரம் பண விரயம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. எதிர்பாராத செலவுகளுக்காக பணத்தை இப்போதே ஒதுக்கி வைப்பது நல்லது. அவசரப்பட்டு முதலீடுகள் செய்வதை தவிர்க்கவும். நிதானமான மற்றும் நீண்டகால முதலீடு திட்டங்களில் கவனம் செலுத்தவும்.
கல்வி:
போட்டித் தேர்வுகள் மற்றும் உயர்கல்விக்கு தயாராகும் மாணவர்களுக்கு நல்ல செய்திகளும், முயற்சிகளில் வெற்றியும் கிடைக்கும். மாணவர்களுக்கு ஏற்படும் கவனச் சிதறல்கள் குறைந்து, படிப்பில் கவனம் அதிகரிக்கும். புதிய பாடங்களை கற்றுக் கொள்வதில் ஆர்வம் அதிகரிக்கும்.
ஆரோக்கியம்:
ஆரோக்கியத்தைப் பொறுத்தவரை இந்த வாரம் சாதாரணமாக இருக்கும். அதிக வேலைப்பளு காரணமாக சோர்வை செரிமானக் கோளாறுகள் போன்ற சிறிய பிரச்சனைகள் ஏற்படலாம். உடலுக்கு அதிக அழுத்தம் கொடுக்காமல் போதுமான ஓய்வு எடுக்கவும். வேலை இடத்தில் இருக்கும் மன அழுத்தத்தை குறைக்க உடற்பயிற்சி, நடைபயிற்சி, யோகா, தியானம் ஆகியவற்றை மேற்கொள்ளுங்கள்.
தொழில் மற்றும் வியாபாரம்:
நீங்கள் விரும்பிய வெற்றியை உங்கள் வேலைத் துறையில் பெறுவீர்கள். கௌரவம் அதிகரிக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான முயற்சிகள் முன்னேற்றமடையும். நீண்ட காலமாக எதிர்பார்த்து இருந்த பணி மாறுதல் நிறைவேறும். தொழிலில் இருந்த சிக்கல்கள் நீங்கி லாபம் அதிகரிக்கும். வேலை செய்யும் இடத்தில் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
குடும்ப உறவுகள்:
குடும்பத்தில் இருந்த தவறான புரிதல்கள் மற்றும் சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சி நிலவும். உங்கள் துணையின் மீது காதல் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மனக்கசப்பு ஏற்பட்டாலும் அதை சமாளித்து வாழ்க்கையை அமைதியாக கொண்டு செல்வீர்கள். முக்கிய முடிவுகள் எடுப்பதில் துணையின் ஆதரவு கிடைக்கும். தாய் வழி மற்றும் தந்தை வழி உறவுகளால் அனுகூலம் ஏற்படும். குடும்பத்துடன் வெளியிடங்களுக்கு செல்வது, கோயில்களுக்கு செல்வது போன்ற மகிழ்ச்சியான நிகழ்வுகள் நடக்கும்.
பரிகாரம்:
நிதி நிலைமை மேம்பட மகாலட்சுமி தாயாருக்கு வெள்ளைத் தாமரை மலர்கள் அர்ச்சனை செய்து வழிபடுவது நல்லது. ஆதரவற்றவர்களுக்கு அன்னதானம் அல்லது கல்வி உதவி செய்வது நல்ல கர்ம பலன்களைக் கொடுக்கும். தொழில் மற்றும் பணியில் உள்ள தடைகளை நீக்க சனீஸ்வரருக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்று வழிபடுவது நல்லது.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)