- Home
- Astrology
- Monthly Rasipalan நவம்பர்: மேஷ ராசி நேயர்களே, இனிப்பான செய்திகள் காத்திருக்கு.! லக்கி பாஸ்கர் நீங்கதான்.!
Monthly Rasipalan நவம்பர்: மேஷ ராசி நேயர்களே, இனிப்பான செய்திகள் காத்திருக்கு.! லக்கி பாஸ்கர் நீங்கதான்.!
இந்த நவம்பர் மாதம் மேஷ ராசிக்காரர்களுக்கு மனஅழுத்தம், நிதிப் பொறுப்புகளுடன் தொடங்குகிறது. மாதத்தின் மத்தியில் ஏற்படும் கிரக மாற்றங்களால் எதிர்பாராத நிதி வாய்ப்புகள் உருவாகும், இறுதியில் புத்துணர்ச்சியுடன் புதிய பாதையைத் தொடங்குவீர்கள்.

பழைய கடன், சொத்து பிரச்சினை தீரலாம்
மேஷ ராசிக்காரர்களே, இந்த நவம்பர் மாதம் உங்களின் உள்ளுணர்வைத் தூண்டும் ஆழமான அனுபவங்களுடன் தொடங்குகிறது. நவம்பர் 4 வரை உங்கள் ஆதிபதி செவ்வாய் விருச்சிக ராசியில் இருப்பதால், சிலர் மனஅழுத்தம், உறவுகளில் குழப்பம், நிதி பொறுப்புகள் போன்றவற்றை எதிர்கொள்வர். யாரை முழுமையாக நம்பலாம்?, என் ஆற்றலை தவறான இடத்தில் செலவிடுகிறேனா?” என்ற கேள்விகள் எழும். இது ஒரு ஆன்மீக சோதனை. புதிய நபரை சந்தித்து அவர்களுடன் நெருக்கமான உருவாகலாம். பழைய கடன், சொத்து பிரச்சினை தீரலாம்.
புதிய பாதையை தொடங்கப் போகிறீர்கள்
நவம்பர் 5 அன்று ரிஷப ராசியில் பூரண சந்திரன் தோன்றுவதால், பணம், மதிப்பு, சுயநம்பிக்கை போன்றவை முக்கியம் பெறும். உங்களின் உழைப்புக்கு சரியான மதிப்பு கிடைக்கிறதா, அல்லது உங்களின் செலவுகள் உங்கள் மதிப்புகளுடன் பொருந்துகிறதா என்பதைக் கவனியுங்கள்.எதிர்பாராத நிதி மாற்றங்கள், புதிய வருமான வாய்ப்புகள், ஏற்படலாம். இது ஒரு பிரபஞ்ச பரிசோதனை. உங்களை சீரமைக்க வைக்கும் நிகழ்வாகும்.
நவம்பர் 4க்குப் பிறகு செவ்வாய் தனுசு ராசியில் நுழையும்போது, உங்கள் மனநிலை மிகுந்த உற்சாகத்துடன் மாறும். பயணம், உயர்கல்வி, புதிய திட்டங்கள், வெளியுலக அனுபவங்கள் போன்றவற்றில் ஆர்வம் பெருகும். ஆனால் நவம்பர் 9 முதல் புதன் பின்னோக்கிச் செல்லும் என்பதால், ஒப்பந்தங்கள், பயண திட்டங்கள், ஆவணங்களில் கவனம் அவசியம். சில தாமதங்கள் இருந்தாலும், அவை உங்களின் நோக்கம் தெளிவாகும் விதமாகவே இருக்கும்.
நவம்பர் 21 முதல் மனம் தெளிவாகி, புதிய ஆற்றல் உருவாகும். நவம்பர் 30 அன்று சுக்ரன் தனுசு ராசியில் சேருவதால், கல்வி, ஆன்மிகம், நீண்டகால இலக்குகளில் அதிர்ஷ்டம் அமையும். இந்த மாதம் முடிவில் நீங்கள் ஆழமான அனுபவத்திலிருந்து எழுந்து, புத்துணர்வுடன் புதிய பாதையை தொடங்கப் போகிறீர்கள்