- Home
- Astrology
- Astrology Predictions: மே 3 இன்று மெகா ராஜயோகம்! குபேர யோகத்தால் கோடீஸ்வரராகப் போகும் ராசிகள் எவை? முழு விவரம்!
Astrology Predictions: மே 3 இன்று மெகா ராஜயோகம்! குபேர யோகத்தால் கோடீஸ்வரராகப் போகும் ராசிகள் எவை? முழு விவரம்!
சக்தி வாய்ந்த ராஜயோகம் உருவாகியுள்ள நிலையில், 12 ராசிகளுக்கும் பலன்கள் மாறுபடுகின்றன. மேஷம் போன்ற சில ராசிகளுக்குப் பணவரவு அதிகரிக்கும் அதே வேளையில், ரிஷபம் போன்ற ராசிகளுக்குப் பொறுமை தேவைப்படும் நாளாக இது அமைகிறது.

12 ராசிகளுக்கான பலன்கள்
ஜோதிட சாஸ்திரத்தில் 'ராஜயோகம்' என்பது ஒரு ஜாதககாரர் சாதாரண நிலையில் இருந்து மிக உயர்ந்த அதிகாரத்திற்கும், செல்வத்திற்கும் கொண்டு செல்லும் கிரகங்களின் சேர்க்கையாகும். இது ஒரு நபருக்கு சமூக அந்தஸ்து, செல்வாக்கு மற்றும் அனைத்து சுகபோகங்களையும் போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு அள்ளிக் கொடுக்கும். இந்நிலையில் 2026 மே 3 இன்று ராஜயோகம் எனப்படும் சக்தி வாய்ந்த கிரக சேர்க்கைகள் உருவாகின்றன. அந்த 12 ராசிகளுக்கான இன்றைய பலன்கள் என்பதை பார்க்கலாம்.
மேஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும்
இன்று உங்களுக்கு யோகமான நாள். நீண்ட நாட்களாக வாட்டி வந்த பணப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புதிய இடத்திற்கு மாறவோ அல்லது சொத்துக்கள் வாங்கவோ இது மிகச்சிறந்த நாள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும்.
ரிஷபம்: பொறுமை தேவை
திட்டமிட்ட காரியங்கள் தடங்கலால் தள்ளிப்போகலாம். இதனால் மன அழுத்தம் ஏற்பட வாய்ப்புண்டு. சின்ன விஷயங்களுக்குக் கோபப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. இன்று நிதி நெருக்கடி ஏற்படக்கூடும் என்பதால் செலவுகளில் கவனம் தேவை.
மிதுனம்: தன்னம்பிக்கை குறைய வேண்டாம்
பணியிடத்தில் உங்களைச் சிறுமைப்படுத்த சிலர் முயலலாம். அவற்றைப் புறந்தள்ளி முன்னேறுங்கள். பெரிய அளவில் மருத்துவச் செலவுகளோ அல்லது பொருளாதார இழப்புகளோ ஏற்படாது என்பது நிம்மதியான விஷயம்.
கடகம்: சுப காரியங்கள் கைகூடும்
திருமணமாகாத கடக ராசி நேயர்களுக்கு இன்று வரன் அமைய வாய்ப்புள்ளது. திருமணமானவர்கள் உறவினர்களுடன் ஆன்மீகப் பயணம் மேற்கொள்வீர்கள். நீண்ட நாள் ஆசைப்பட்ட விலையுயர்ந்த பொருட்களை இன்று வாங்குவீர்கள்.
சிம்மம்: ஆரோக்கியத்தில் கவனம்
இன்று உடல்நலத்தில் சிறு பாதிப்புகள் அல்லது காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளதால் எச்சரிக்கை தேவை. குடும்பத்தில் வீண் விவாதங்கள் வந்து போகலாம். செலவுகள் உங்கள் பட்ஜெட்டைத் தாண்டிச் செல்லும்.
கன்னி: பயணங்கள் இனிக்கும்
குடும்ப உறுப்பினர்களுக்காகச் செலவு செய்ய வேண்டியிருக்கும். திருமணமாகாதவர்களுக்கு மனதிற்குப் பிடித்த நபர் அறிமுகமாவார். இன்று மேற்கொள்ளும் பயணங்கள் மகிழ்ச்சியையும், புதிய அனுபவத்தையும் தரும்.
துலாம்: திடீர் பணவரவு
எதிர்பாராத வழியில் இருந்து இன்று கைநிறையப் பணம் வந்து சேரும். உடல்நிலை மிகச் சிறப்பாக இருக்கும். இருப்பினும், வீட்டில் உள்ளவர்கள் மந்தமாகச் செயல்படுவது உங்களுக்குச் சற்று எரிச்சலைத் தரலாம்.
விருச்சிகம்: காதலில் கனிவு
பேச்சுலர்ஸ்க்கு இன்று காதல் மலரும் நாளாக இருக்கும். ஆனால், திருமணமானவர்கள் தங்கள் துணையுடன் கருத்து வேறுபாடுகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். வரவுக்கு மீறிய செலவுகளால் பட்ஜெட் சுமையாகும்.
தனுசு: எதிரிகள் தொல்லை
மறைமுக எதிரிகளால் உங்கள் வேலைகளில் இடையூறு ஏற்படலாம், விழிப்புடன் இருங்கள். அவசரப்பட்டு எந்த முக்கிய முடிவையும் எடுக்க வேண்டாம். இன்று குடும்பத்துடன் நேரத்தைச் செலவிடுவது மனதிற்கு அமைதி தரும்.
மகரம்: அலைச்சல் கூடும்
வீட்டில் உள்ள பெரியவர்களின் உடல்நிலையில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இன்று எவ்வளவுதான் உழைத்தாலும் சேமிக்க முடியவில்லையே என்ற ஏக்கம் இருக்கும். பயணங்களால் அலைச்சலும் சோர்வும் ஏற்படும்.
கும்பம்: வியாபாரத்தில் சுணக்கம்
பழைய கசப்பான நினைவுகள் இன்று வாட்டும். மற்றவர்களின் விமர்சனங்கள் மனதை நோகடிக்கலாம். தொழிலில் எதிர்பார்த்த லாபம் இன்று குறைவு என்பதால் புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது.
மீனம்: உழைப்பிற்கு ஏற்ற உயர்வு
இளைஞர்களின் விடாமுயற்சிக்கு இன்று இரட்டிப்புப் பலன் கிடைக்கும். நீங்கள் விரும்பிய இலக்கை அடைவீர்கள். தொழில் வெற்றி தரும், ஆனால் வேலை நிமித்தமாகத் தனிமையில் இருக்க வேண்டிய சூழல் உருவாகலாம்.

