- Home
- Astrology
- Jan 08 Mesha Rasi Palan: மேஷ ராசி நேயர்களே, இன்று முதல் மாறப்போகும் வாழ்க்கை.! மேஷ ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.!
Jan 08 Mesha Rasi Palan: மேஷ ராசி நேயர்களே, இன்று முதல் மாறப்போகும் வாழ்க்கை.! மேஷ ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.!
January 08, 2026 Mesha Rasi Palangal: ஜனவரி 08, 2026 மேஷ ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

கிரக நிலைகள்:
மேஷ ராசி நேயர்களே, இன்றைய தினம் சந்திர பகவான் பஞ்சம ஸ்தானத்திலும், ராசிநாதன் செவ்வாய் சாதகமான ஸ்தானத்திலும் சஞ்சரிக்கின்றனர். குருவின் பார்வை கிடைப்பது கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது. ராகு-கேது, சனி பகவான் தங்களது வழக்கமான பெயர்ச்சிப் பாதையிலே நீடிக்கின்றனர்.
பொதுவான பலன்கள்:
மேஷ ராசி நேயர்களே, இன்று உங்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும் நாளாக அமையும். நீண்ட நாட்களாக தள்ளிப் போன காரியங்கள் என்று வேகமெடுக்கும். வெளியூர் அல்லது வெளிநாடு தொடர்பான முயற்சிகளில் சாதகமான செய்திகள் கிடைக்கும். உற்சாகமாக செயல்பட்டு மற்றவர்களின் பாராட்டுகளைப் பெறுவீர்கள்.
நிதி நிலைமை:
இன்று பண வரவு திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத வழிகள் மூலம் பணவரவு கைக்கு கிடைக்கலாம். புதிய முதலீடுகள் செய்வதற்கு முன்னர் பெரியவர்களின் ஆலோசனையைக் கேட்பது நல்லது. ஆடம்பரச் செலவுகளை தவிர்த்து விடுங்கள். இன்று பணம் கொடுத்தல், வாங்கல் ஆகியவற்றை மேற்கொள்வதை தவிர்க்கவும்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன் மனைவிக்கு இடையே புரிதல் அதிகரிக்கும். பிள்ளைகள் மூலம் மகிழ்ச்சியான செய்திகள் தேடி வரலாம். நண்பர்களுடன் ஏற்பட்ட மன ஸ்தாபங்கள் நீங்கி நட்பு பலப்படும். அலுவலகத்தில் உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் காண்பீர்கள்.
பரிகாரம்:
வியாழக்கிழமை என்பதால் குரு்பகவானை வழிபடுவது நல்லது. அருகில் உள்ள ஆலயங்களுக்கு சென்று தட்சிணாமூர்த்தி சன்னதியில் நெய் தீபமேற்றி வழிபடவும். இயலாதவர்களுக்கு ஒருவேளை உணவு அல்லது தானியங்கள் தானமாக வழங்குவது தோஷங்களை நீக்கி வெற்றியைத் தரும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

