- Home
- Astrology
- Oct 22 Today Rasi Palan: மீன ராசி நேயர்களே, நீங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் எல்லாம் இன்றுடன் தீரப்போகுது.!
Oct 22 Today Rasi Palan: மீன ராசி நேயர்களே, நீங்கள் அனுபவித்து வந்த கஷ்டங்கள் எல்லாம் இன்றுடன் தீரப்போகுது.!
Today Rasi Palan: அக்டோபர் 22, 2025 தேதி மீன ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 22, 2025 மீன ராசிக்கான பலன்கள்:
மீன ராசி நேயர்களே, இன்றைய நாள் குழப்பங்கள் அனைத்தும் நீங்கி தெளிவு பிறக்கும் நாளாக அமையும். தாமதமாகி வந்த காரியங்களை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகளை மேற்கொள்வீர்கள். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதற்கு முன்னர் ஒரு முறைக்கு இருமுறை ஆலோசிப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களுடன் கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புள்ளதால் பேசும்பொழுது கவனத்துடன் இருங்கள்
நிதி நிலைமை:
நிதி நிலைமையைப் பொறுத்தவரை இன்று செலவுகள் அதிகரிக்கும். இதன் காரணமாக கையில் இருக்கும் சேமிப்பு குறையக்கூடும். பணம் கொடுக்கல், வாங்கல் விஷயங்களில் கவனமாக இருங்கள். பெரிய பணங்களை கைமாற்றும் பொழுது அல்லது ஆன்லைன் பரிவர்த்தனைகளின் பொழுது கவனத்துடன் செயல்பட வேண்டியது அவசியம். முதலீடு செய்வதற்கு முன்னர் நிபுணர்களின் ஆலோசனையைப் பெறுங்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
தனிப்பட்ட வாழ்க்கையைப் பொறுத்தவரை கணவன் மனைவிக்கு இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்துச் செல்வீர்கள். வாழ்க்கைத் துணையின் வழியில் உறவினர்களால் சில பிரச்சனைகள் ஏற்பட்டு மறையும். இன்று பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டிய நிலை வரலாம். காதல் வாழ்க்கையில் பரஸ்பர அன்பு புரிதல் அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
இன்று விஷ்ணு அல்லது பெருமாள் வழிபாடு நன்மை பயக்கும். குலதெய்வத்தை வணங்குவது குடும்பப் பிரச்சனைகளை தீர்க்க உதவும். விரய சனியின் ஆதிக்கம் இருப்பதால் சனிபகவானை வணங்குவது நன்மைகள் தரும். இயலாதவர்கள், ஏழை எளியவர்களுக்கு உதவுவது நற்பலன்களைக் கூட்டும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.