- Home
- Astrology
- Astrology: ராசியை மாற்றும் சுக்கிரன்.! தொடங்கும் சுக்கிர திசையால் சொத்துக்களை வாங்கி குவிக்கப்போகும் 3 ராசிகள்.!
Astrology: ராசியை மாற்றும் சுக்கிரன்.! தொடங்கும் சுக்கிர திசையால் சொத்துக்களை வாங்கி குவிக்கப்போகும் 3 ராசிகள்.!
Venus transit in Libra 2025: சுக்கிர பகவான் விரைவில் தனது ராசியை மாற்ற இருக்கிறார். இதன் காரணமாக உருவாகும் ராஜயோகம் சில ராசிகளுக்கு சொத்துக்களை அளிக்க இருக்கிறது. அந்த ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிரன்
வேத ஜோதிடத்தின்படி, சுக்கிரன் ஒரு குறிப்பிட்ட ராசியில் சஞ்சரிக்கும்போது உருவாகும் முக்கியமான யோகங்களில் ஒன்று மாள்வ்ய ராஜயோகம். இது பஞ்ச மஹாபுருஷ யோகங்களில் (ஐந்து மகா யோகங்கள்) ஒன்றாகும். இந்த யோகம் ஒருவருக்கு அளவற்ற செழிப்பு, ஆடம்பர வாழ்க்கை, அழகு, மகிழ்ச்சி மற்றும் புகழ் ஆகியவற்றை அள்ளித் தரும்.
சுக்கிரன் தனது சொந்த ராசிகளான ரிஷபம் அல்லது துலாம் ராசிகளிலோ அல்லது அவர் உச்சம் பெறும் ராசியான மீனம் ராசியிலோ சஞ்சரித்து, அது ஒருவரின் ஜாதகத்தில் கேந்திர (1, 4, 7, 10) ஸ்தானங்களில் அமைந்தால் மாள்வ்ய ராஜயோகம் உருவாகிறது.
மாள்வ்ய ராஜயோகம் 2025
ஜோதிடக் கணக்கீடுகளின்படி, 2025 நவம்பர் மாதத்தில் சுக்கிரன் துலாம் ராசிக்குள் சஞ்சரிப்பதால் இந்த யோகம் உருவாகவுள்ளது. இந்த சஞ்சாரம் சில ராசிக்காரர்களுக்குச் சிறப்பான பலன்களை அளிக்கும். சுக்கிரனால் ஏற்படும் மாள்வ்ய ராஜயோகம் கீழ்க்கண்ட ராசிக்காரர்களுக்குப் பல்வேறு துறைகளில் அபரிமிதமான வெற்றியை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தனுசு
- தனுசு ராசிக்காரர்களுக்கு மாள்வ்ய ராஜயோகம் நிதி ரீதியாக சாதகமான பலன்களை தர இருக்கிறது.
- உங்கள் ராசியின் 11வது வீட்டில் சுக்கிர பகவான் சஞ்சரிக்கிறார். 11வது வீடு என்பது லாப ஸ்தானமாகும்.
- எனவே உங்களுக்கு எதிர்பாராத வருமானம் கிடைக்கும். தொழில் செய்து வருபவர்களுக்கு வருமானம் இரட்டிப்பாக கிடைக்கும்.
- புதிய வருமானத்திற்கான வழிகள் திறக்கப்படும்.
- முதலீடுகளில் இருந்து பயனடைவீர்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்களுக்கும் வாய்ப்பு உள்ளது.
- முதலீடுகள், பங்குச் சந்தைகள் அல்லது பிற வழிகளில் இருந்து பணவரவு இருக்கும். நீண்ட காலமாக சிக்கி இருந்த பணத்தை திரும்பப் பெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு.
- குழந்தைகள் தொடர்பான நல்ல செய்திகளையும் பெறுவீர்கள்.
மகரம்
- மகர ராசிக்காரர்களுக்கு இந்த ராஜயோகம் பல வழிகளில் நன்மையை அளிக்கும். இந்த ராஜயோகம் தொழில் ஸ்தானமான பத்தாவது வீட்டில் உருவாக இருக்கிறது.
- எனவே இந்த நேரத்தில் புதிய வேலை மற்றும் வணிக வாய்ப்புகளைப் பெறுவீர்கள். வேலை செய்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் மற்றும் பதவி உயர்வு கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.
- வேலையில் உங்களது யோசனைகள் பாராட்டப்படும். தொழில் செய்து வருபவர்கள் நிதி ஆதாயங்களைப் பெறுவீர்கள்.
- உங்கள் வணிகம் விரிவடையக்கூடும்.
- புதிய ஒப்பந்தங்களை பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.
- புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் திறக்கப்படும்.
துலாம்
- துலாம் ராசிக்காரர்களுக்கு மாள்வ்ய ராஜயோகம் சாதகமான பலன்களை அளிக்கலாம்.
- இந்த ராஜயோகமானது உங்கள் ராசியின் லக்ன ஸ்தானத்தில் உருவாக இருக்கிறது. எனவே இந்த நேரத்தில் உங்கள் ஆளுமை மேம்படும்.
- ஆடம்பரத்தின் காரகராக விளங்கும் சுக்கிர பகவான் உங்கள் ராசியின் முதல் வீட்டில் சஞ்சரிப்பதால் ஆடம்பரமான பொருட்களை வாங்குவீர்கள்.
- வாடகை வீட்டில் வசித்து வருபவர்கள் சொந்த வீட்டுக்குச் செல்வீர்கள்.
- திருமணமாகாதவர்களுக்கு நல்ல இடத்திலிருந்து வரன் தேடி வரும்.
- திருமணமானவர்களுக்கு மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை ஏற்படும்.
- குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் நல்லிணக்கம் அதிகரிக்கும்.
- வீட்டில் சுப காரியங்கள் நடைபெறும்.
- அன்புக்குரியவர்களுடனான உறவுகள் சுமூகமாக மாறும்.
- தொழில் செய்து வருபவர்கள் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
மேலும் பலன் பெறும் ராசிகள்
ஜோதிட கணிப்புகளின்படி, சுக்கிரனின் கேந்திர நிலைப்பாட்டைப் பொறுத்து, ரிஷபம், மிதுனம், கன்னி போன்ற ராசிக்காரர்களுக்கும் இந்த யோகத்தின் தாக்கம் சாதகமாக இருக்கலாம். இவர்களுக்குத் தொழில்ரீதியான ஒப்பந்தங்கள் வெற்றிகரமாக அமையும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். சொத்து சேர்க்கைக்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருக்கும். பூர்வீகச் சொத்துக்களால் லாபம் கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)

