MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Jupiter Sun conjunction 2026: ஜூலை 16 முதல் குரு ஆதித்ய ராஜயோகம்! ஆகஸ்ட் 17 வரை இந்த 6 ராசிகளுக்கு அசுர வளர்ச்சியும், கோடீஸ்வர யோகமும் கன்பார்ம்!

Jupiter Sun conjunction 2026: ஜூலை 16 முதல் குரு ஆதித்ய ராஜயோகம்! ஆகஸ்ட் 17 வரை இந்த 6 ராசிகளுக்கு அசுர வளர்ச்சியும், கோடீஸ்வர யோகமும் கன்பார்ம்!

Astrology: கடக ராசியில் குரு மற்றும் சூரியனின் சேர்க்கையால் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது. ஜூலை 16 முதல் ஆகஸ்ட் 17 வரை நீடிக்கும் இந்த யோகத்தால் இந்த 6 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் மற்றும் அசுர வளர்ச்சி உள்ளிட்ட பல நன்மைகள் உண்டாகும்.

2 Min read
Author : vinoth kumar
Published : Jul 14 2026, 09:32 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
குரு ஆதித்ய ராஜயோகம்
Image Credit : Asianet News

குரு ஆதித்ய ராஜயோகம்

ஜோதிட சாஸ்திரப்படி, கிரகங்கள் அவ்வப்போது தங்களின் ராசி மற்றும் நட்சத்திரங்களை மாற்றுவது வழக்கம். அந்த வகையில், ஒவ்வொரு மாதமும் ராசி மாறும் சூரியன், அதேபோல் குரு பகவான் ஆண்டிற்கு ஒருமுறை மாறுகிறார். தற்போது குரு பகவான் தனது உச்ச ராசியான் கடக ராசிக்குள் நுழைகிறார். இந்நிலையில் கடக ராசிக்கு ஜூலை 16 ம் தேதி சூரிய பகவான் பெயர்ச்சி ஆகிறார். இதனால் கடக ராசியில் குரு மற்றும் சூரியனின் சேர்க்கை நிகழ உள்ளது. இந்த சேர்க்கையால் குரு ஆதித்ய ராஜயோகம் உருவாகிறது.

இந்த யோகம் ஆகஸ்ட் 17 வரை என ஒரு மாத காலத்திற்கு நீடிக்கும். இந்த ராஜயோகத்தால் மேஷம் முதல் மீனம் வரையிலான அனைத்து ராசிகளிலும் மாற்றங்கள் ஏற்பட்டாலும், பின்வரும் 6 ராசிக்காரர்களுக்கு மட்டும் கோடீஸ்வர யோகமும், அசுர வளர்ச்சியைுயம் அள்ளிக்கொடுக்கப் போகிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
மேஷம் - எதிர்பாராத பண வரவு
Image Credit : Pixabay

மேஷம் - எதிர்பாராத பண வரவு

மேஷ ராசியினருக்கு 4-ஆம் இடத்தில் உருவாகும் இந்த யோகத்தால் பணப் பற்றாக்குறை நீங்கி, எதிர்பாராத பண வரவுகள் உண்டாகும். நீண்ட நாட்களாக உங்களை வாட்டி வதைத்த கடன் சுமைகள் படிப்படியாக குறையும். கணவன்-மனைவி இடையே இருந்த கருத்து வேறுபாடுகள் நீங்கி தம்பதி பிணைப்பு பலப்படும். மாணவர்களுக்கும் சாதகமான காலம் இது. தொழில் மற்றும் உத்தியோகம் தொடர்பாக நீங்கள் மேற்கொள்ளும் நீண்ட தூர பயணங்கள் நல்ல லாபத்தைத் தரும். பணியிடத்தில் உங்களின் கடின உழைப்புக்குத் தகுந்த அங்கீகாரமும், சமூகத்தில் மதிப்பும் உயரும்.

Related Articles

Related image1
Temple Bell: பூஜையின்போது மணி அடிப்பது ஏன்? பலருக்கும் தெரியாத ஆன்மிக காரணம் என்ன தெரியுமா?
Related image2
Astrology Predictions: எமன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறும்.! பணம் மூட்டை மூட்டையாய் சேரப்போகுது.!
37
மிதுனம் - வாழ்க்கை தரம் உயரும்
Image Credit : Pixabay

மிதுனம் - வாழ்க்கை தரம் உயரும்

மிதுன ராசியின் 2-ம் இடத்தில் இந்த ராஜயோகம் அமைவதால், உங்கள் பொருளாதார நிலை மிகவும் வலுவடையும். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றியை நோக்கி நகரும். போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்களுக்கு இந்த காலகட்டத்தில் நல்ல செய்தி கிடைக்கும். உத்தியோகம் மற்றும் சொந்த வாழ்க்கை என இரண்டிலுமே சிறப்பான முன்னேற்றத்தைக் காண்பீர்கள். ஆன்மீகக் காரியங்களில் ஈடுபாடு அதிகரிப்பதுடன், சமுதாயத்தில் உங்களுக்கான மரியாதையும் அந்தஸ்தும் கூடும்.

47
சிம்மம் - குடும்பத்தில் மகிழ்ச்சி
Image Credit : Pixabay

சிம்மம் - குடும்பத்தில் மகிழ்ச்சி

சிம்ம ராசிக்கு 12-ம் வீட்டில் இந்த யோகம் அமைவதால், குடும்பத்திற்குள் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கி நிம்மதியும் மகிழ்ச்சியும் பிறக்கும். திடீர் அதிர்ஷ்டம் மூலம் பணப்புழக்கம் அதிகரித்து, நிதி நிலைமை சீராகும். கடன்களில் இருந்து விடுபடுவதற்கான புதிய வழிகள் மற்றும் வாய்ப்புகள் கைகூடி வரும். சகோதர, சகோதரிகளின் ஆதரவு உங்களுக்கு இந்த வாரம் பக்கபலமாக இருக்கும்.

57
கன்னி - தொழிலில் புதிய உச்சம்
Image Credit : Pixabay

கன்னி - தொழிலில் புதிய உச்சம்

கன்னி ராசியினருக்கு 11-ம் இடத்தில் தோன்றும் குரு ஆதித்ய ராஜயோகம், தொழிலில் நீங்கள் நினைத்துப் பார்க்காத புதிய உயரத்தை எட்ட உதவும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டாவதோடு, ஒன்றுக்கும் மேற்பட்ட வழிகளில் வருமானம் வரத் தொடங்கும். வேலை செய்யும் இடத்தில் உயரதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களின் முழு ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கும். நீண்ட நாட்களாக உங்களைத் தொந்தரவு செய்து வந்த உடல்நலப் பாதிப்புகள் நீங்கி ஆரோக்கியம் மேம்படும்.

67
துலாம் - அசுர வளர்ச்சி
Image Credit : Pixabay

துலாம் - அசுர வளர்ச்சி

துலாம் ராசியின் 10-ம் வீட்டில் இந்த யோகம் உருவாவதால், உங்கள் நிதி நிலைமையில் அசுர வளர்ச்சி ஏற்படும். குறிப்பாக வியாபாரிகளுக்கு இருந்து வந்த மந்த நிலை மாறி, தொழில் ரீதியான பணப் பற்றாக்குறைகள் அனைத்தும் முற்றிலும் தீரும். சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் நட்பு கிடைப்பதுடன், அது உங்களின் எதிர்கால முன்னேற்றத்திற்குப் பெரிதும் உதவும். அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசுவதால் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தடையின்றி நிறைவேறும்.

77
தனுசு - புகழ் ஓங்கும்
Image Credit : Pixabay

தனுசு - புகழ் ஓங்கும்

தனுசு ராசிக்கு 8-ம் இடத்தில் இந்த ராஜயோகம் அமைவதால், சமூகத்தில் உங்கள் பெயர் மற்றும் புகழ் ஓங்கும். நீண்ட நாட்களாக வராமல் முடங்கிக் கிடந்த நிலுவைத் தொகைகள் மற்றும் வாராக்கடன்கள் வசதியாகும். குடும்பத்தில் நிலவி வந்த குழப்பங்கள் நீங்கி அமைதியான சூழல் உருவாகும். கோர்ட், கேஸ் போன்ற சட்ட ரீதியான சிக்கல்களிலிருந்து உங்களுக்குச் சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய வருமான வாய்ப்புகளால் சேமிப்பு உயரும்.

About the Author

VK
vinoth kumar
வினோத்குமார் 10 ஆண்டுகளாக செய்தித்துறையில் பணியாற்றி வரும் இவர். கடந்த 2018ம் ஆண்டு முதல் ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா குறித்து நன்கு அனுபவம் கொண்டவர். தமிழ்நாடு, அரசியல், குற்றம் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Astrology : புஷ்ய நட்சத்திரத்தில் சங்கமிக்கும் சூரியன் - குரு... அதிர்ஷ்டத்தின் உச்சியை தொடப்போகும் 5 ராசிகள்!
Recommended image2
Temple Bell: பூஜையின்போது மணி அடிப்பது ஏன்? பலருக்கும் தெரியாத ஆன்மிக காரணம் என்ன தெரியுமா?
Recommended image3
Astrology: ஜூலை 16-ல் அரிய கிரகப் பெயர்ச்சி: இந்த 3 ராசிகளுக்கு பணம் கொட்டப் போகுது! அதிர்ஷ்ட மழை!
Related Stories
Recommended image1
Temple Bell: பூஜையின்போது மணி அடிப்பது ஏன்? பலருக்கும் தெரியாத ஆன்மிக காரணம் என்ன தெரியுமா?
Recommended image2
Astrology Predictions: எமன் நட்சத்திரப் பெயர்ச்சி: இந்த 4 ராசிகளின் தலைவிதியே மாறும்.! பணம் மூட்டை மூட்டையாய் சேரப்போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved