- Home
- Astrology
- Astrology: உருவாகப் போகும் மகா புருஷ ராஜயோகம்.! இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப் போகுது.!
Astrology: உருவாகப் போகும் மகா புருஷ ராஜயோகம்.! இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கப் போகுது.!
ஜோதிட சாஸ்திரங்களின்படி செவ்வாய் பகவான் விருச்சிக ராசியில் சஞ்சரித்து ருச்சக ராஜயோகத்தை உருவாக்க இருக்கிறார். இதன் காரணமாக மூன்று ராசிகள் செல்வ செழிப்பை பெற உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

ருச்சக ராஜயோகம் (மகா புருஷ ராஜயோகம்)
வேத ஜோதிடத்தின் படி கிரகங்களின் தளபதியாக செவ்வாய் பகவான் அறியப்படுகிறார். இவர் அக்டோபர் மாதம் தனது சொந்த ராசியான விருச்சிக ராசிக்கு செல்ல இருக்கிறார். இதன் காரணமாக ருச்சக ராஜயோகம் உருவாக இருக்கிறது. இந்த ராஜயோகம் “மகா புருஷ ராஜயோகம்” என்றும் அழைக்கப்படுகிறது. ஜோதிடத்தில் இந்த ராஜயோகம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது. இந்த ராஜயோகம் உருவாவதால் மூன்று ராசிகளுக்கு அதிர்ஷ்ட மழை பொழிய இருக்கிறது. அந்த அதிர்ஷ்ட ராசிகள் யார் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்ம ராசி
ருச்சக ராஜயோகம் சிம்ம ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களை தரவுள்ளது. செவ்வாய் உங்கள் ராசியில் இருந்து நான்காம் இடத்தில் சஞ்சரிக்க இருக்கிறார். இந்த நேரத்தில் நீங்கள் பொருள், இன்பம் ஆகியவற்றைப் பெறலாம். புதிய வாகனம் அல்லது புதிய சொத்துக்களை வாங்கும் யோகமும் உண்டு. எல்லா துறைகளிலும் உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். வேலை மற்றும் தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பரம்பரை சொத்துக்கள் கைக்கு வந்து சேரும். வணிக ரீதியாக நல்ல லாபத்தை பெறுவீர்கள். சமூகத்தில் நல்ல அந்தஸ்து கிடைக்கும். திருமணமாகாமல் காத்திருப்பவர்களுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும்.
கடக ராசி
கடக ராசிக்காரர்களுக்கு ருச்சக ராஜயோகம் பலன் வழிகளில் நன்மையைத் தரவுள்ளது. செவ்வாய் பகவான் உங்கள் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்க இருப்பதால், நீங்கள் தொழிலில் எதிர்பாராத வெற்றியைப் பெறலாம். நல்ல ஊதியத்துடன் வேறு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை வாய்ப்பு கிடைக்கும். பணியிடத்தில் உங்களுக்கு சில சவால்கள் ஏற்பட்டாலும் அதை உங்கள் திறமையால் வெற்றிகரமாக முடித்து அதற்கான பலன்களை அனுபவிப்பீர்கள். ஒரு குழுவை தாங்கும் அளவிற்கான பொறுப்புகள் உங்களுக்கு கிடைக்கலாம். குடும்பத்தில் ஏதேனும் பிரச்சனைகள் இருந்தால் அனைத்தும் நீங்கி மகிழ்ச்சி பன்மடங்காக பெருகும்.
விருச்சிக ராசி
ருச்சக ராஜயோகம் விருச்சிக ராசிக்காரர்களுக்கு நல்ல காலத்தை தரவுள்ளது. உங்கள் லக்ன வீட்டில் இந்த ராஜயோகம் உருவாகுவதால் உங்கள் தன்னம்பிக்கை அதிகரிக்கும். உங்கள் தைரியமும், வீரமும் பெருகும். இதன் காரணமாக எந்த ஒரு செயலையும் துணிவுடன் எடுத்து அதை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். வெளிநாடு செல்லும் கனவு நிறைவேறும். தொழிலில் போட்டியாக இருந்தவர்கள், தொழில் எதிரிகள் அனைவரும் விலகுவதால் தொழில் மேம்பட்டு வருமானம் இரட்டிப்பாகும். நிதிநிலைமை மேம்படுவதால், குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். வீட்டில் அடுத்தடுத்த சுப காரியங்கள் நடைபெறும். திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும்.
(குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் கிடைக்கும் அனுமானங்கள் மற்றும் ஜோதிட கருத்துக்கள் அடிப்படையிலானவை மட்டுமே. இதன் நம்பகத்தன்மையை ஏசியாநெட் நிறுவனம் சரி பார்க்கவில்லை. இதன் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது. ஒவ்வொருவரின் தனிப்பட்ட ஜாதகமும் வேறுபடும் என்பதால் அனுபவமிக்க ஜோதிடரை கலந்தாலோசிப்பது நல்லது)