- Home
- Astrology
- Astrology: 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு பகவான் நிகழ்த்தப் போகும் அதிசயம்.! 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.!
Astrology: 10 ஆண்டுகளுக்குப் பிறகு ராகு பகவான் நிகழ்த்தப் போகும் அதிசயம்.! 3 ராசிக்காரர்களின் வாழ்க்கை அடியோடு மாறப்போகுது.!
கிரகங்களில் முக்கிய கிரகமாக அறியப்படும் ராகு, 10 ஆண்டுகளுக்குப் பிறகு தனது சொந்த நட்சத்திரக்கு செல்ல இருக்கிறார். இதனால் பலனடையும் ராசிகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

சதய நட்சத்திரத்துக்கு செல்லும் ராகு
ஜோதிட சாஸ்திரங்களின்படி ராகு மற்றும் கேது ஆகிய கிரகங்கள் முக்கிய கிரகங்களாக அறியப்படுகின்றன. இவை நவகிரகங்களில் நிழல் கிரகங்களாக அறியப்படுகின்றன. ராகு பகவான் ஒரு சக்தி வாய்ந்த கிரகமாகும். இவர் ஆசைகள், மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத நிகழ்வுகளுக்கு காரகராக விளங்குகிறார். ராகு பெயர்ச்சியானது ஒவ்வொரு ராசிக்கும் வெவ்வேறு தாக்கங்களை ஏற்படுத்தவுள்ளது.
10 ஆண்டுகளுக்குப் பிறகு நடக்கும் அதிசயம்
ராகு நவம்பர் மாதத்தில் பூரட்டாதி நட்சத்திரத்தில் இருந்து வெளியேறி, சதய நட்சத்திரத்தில் நுழையப் போகிறார். சதய நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு பகவான் விளங்கி வருகிறார். எனவே இவர் தனது சொந்த நட்சத்திரத்தில் நுழைவது ஜோதிடத்தில் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வு பத்து ஆண்டுகளுக்குப் பிறகு நடத்த இருப்பதால் சில ராசிகள் சிறப்பான அதிர்ஷ்டத்தைப் பெற உள்ளனர்.
மிதுனம்
ராகு பகவான் சதய நட்சத்திரத்தில் சஞ்சரிக்க இருப்பது மிதுன ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அளிக்க உள்ளது. ராகுவின் இந்த சஞ்சாரம் மிதுன ராசிக்காரர்களுக்கு ஆன்மீகம் மற்றும் தனிப்பட்ட வளர்ச்சியை ஊக்குவிக்கும். பயணங்கள் மேற்கொள்வது, கல்வி மற்றும் புதிய திறன்களை கற்றுக் கொள்வதற்கு இது உகந்த காலமாகும். குடும்பத்தில் உள்ள பிரச்சனைகள் சரியாகும். உறவுகளில் முன்னேற்றம், சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயர்வு ஆகியவையும் ஏற்படலாம். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த பணிகள் முடிக்கப்படும். பணியிடத்தில் உங்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்கும். இதை நீங்கள் நேர்மையுடனும் திறமையுடனும் நிறைவேற்றுவதால் உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும்.
கடகம்
ராகுவின் சதய நட்சத்திர பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு பல நன்மைகளை அளிக்க உள்ளது. கடக ராசிக்காரர்கள் பெரும் பலன்களை அனுபவிக்க உள்ளனர். இவர்கள் எந்த துறையை எடுத்தாலும் அதில் சிறந்த வெற்றியைப் பெறுவார்கள். இதன் காரணமாக அவர்களின் பெயரும், புகழும் அதிகரிக்கும். உங்கள் ஆளுமை திறன் அதிகரிப்பதால் பலரையும் ஈர்ப்பீர்கள். உங்களுடைய வசீகரம் அதிகரிக்கும். இதன் காரணமாக உங்கள் தொழில் மற்றும் சமூக வாழ்க்கையில் புதிய வெற்றிகள் கிடைக்கும். நீங்கள் வேலை செய்யும் இடத்தில் உங்கள் கடின உழைப்புக்கான பலன்கள் கிடைக்கும். கடினமான வேலையை செய்து முடிப்பீர்கள். இதன் காரணமாக பலரும் உங்களை பாராட்டுவார்கள். உங்களுக்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கலாம். குடும்ப வாழ்க்கையை பொறுத்தவரை பல நேர்மறையான மாற்றங்கள் ஏற்படும். மகிழ்ச்சியான சூழல் நிலவும்.
கும்பம்
கும்ப ராசியின் அதிபதியாக விளங்கும் சனி பகவானுக்கும், ராகு பகவானுக்கும் இடையே நட்பு உண்டு. எனவே ராகு தனது சொந்த நட்சத்திரத்திற்கு செல்வதால் கும்ப ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களை அடையவுள்ளனர். இவர்கள் நவம்பர் மாதத்திற்கு பின்னர் மிகப்பெரிய மாற்றங்களை சந்திக்க இருக்கின்றனர். நிதி ரீதியாக பல நேர்மறையான மாற்றங்கள் இவர்கள் வாழ்க்கையில் வரவுள்ளது. குடும்ப உறவுகளில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கி பிணைப்பு ஏற்படும். பிரிந்து சென்ற கணவன் மனைவி மீண்டும் ஒன்றும் சேரலாம். புதிய வழிகளில் பணத்தை சேமிக்கும் ஆதாரங்கள் திறக்கப்படும். கடந்த கால கடன் பிரச்சனைகள் சரியாகி மன நிம்மதி கிடைக்கும். புதிய வீடு, சொத்து, மனை, நிலம் வாங்கும் யோகமும் உண்டு. பரம்பரை சொத்துக்கள் மூலம் எதிர்பாராத பண வரவு ஏற்படலாம்.