- Home
- Astrology
- Astrology: நவம்பரில் தொடங்கும் சுக்கிர திசை.! கொட்டும் பண மழை.! ஆடம்பர வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்.!
Astrology: நவம்பரில் தொடங்கும் சுக்கிர திசை.! கொட்டும் பண மழை.! ஆடம்பர வாழ்க்கை வாழப்போகும் 3 ராசிகள்.!
Malavya Rajyog 2025: நவம்பரில் சுக்கிர பகவான் உருவாக்கும் மாளவ்ய ராஜயோகத்தால் சில ராசிக்காரர்கள் நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். அது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

மாளவ்ய ராஜயோகம் 2025
ஜோதிட சாஸ்திரத்தில் ஐந்து மங்களகரமான யோகங்கள் “பஞ்ச மகா புருஷ யோகங்கள்” என்று அழைக்கப்படுகின்றன. இந்த யோகங்களில் மாளவ்ய ராஜயோகமும் ஒன்று. இந்த யோகம் சுக்கிரன் பகவான் ஒருவரின் ஜாதகத்தில் வலிமையுடன் கேந்திர ஸ்தானங்களான (1,4,7,10) ஆகிய வீடுகளில் அமையும் பொழுதோ, தனது சொந்த ராசிகளான ரிஷபம், துலாம் ராசிகளில் அல்லது உச்ச ராசியிலான மீனம் ஆகியவற்றில் சஞ்சரிக்கும் பொழுதோ உருவாகிறது.
நவம்பர் 2, 2025 அன்று சுக்கிர பகவான் தனது சொந்த ராசியான துலாம் ராசிக்குள் நுழைய இருக்கிறார். சுக்கிரனின் இந்த பெயர்ச்சி மாளவ்ய ராஜயோகத்தை உருவாக்குகிறது. இந்த ராஜயோகம் நவம்பர் 2, 2025 முதல் நவம்பர் 26, 2025 வரை சுக்கிரன் துலாம் ராசியில் இருக்கும் வரை நீடிக்க இருக்கிறது. எனவே நவம்பர் மாதம் முழுவதும் சில ராசிக்காரர்கள் பல நன்மைகளை அனுபவிக்க உள்ளனர். மாளவ்ய ராஜயோகத்தால் பலன் பெறும் மூன்று ராசிகள் குறித்து இங்கு காணலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களின் முதல் வீடான லக்ன ஸ்தானத்தில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. எனவே துலாம் ராசிக்காரர்களுக்கு நவம்பர் மாதம் முழுவதும் அனுகூலமான காலமாக இருக்கும். ஆடம்பரத்தின் காரகராக சுக்கிர பகவான் விளங்குவதன் காரணமாக உங்களின் ஆடம்பரம் அதிகரிக்கும். மேலும் துலாம் ராசி சுக்கிர பகவானின் சொந்த ராசி என்பதால் அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள்.
உங்கள் தன்னம்பிக்கை மேம்படும். ஆளுமைத் திறன் அதிகரிக்கும். திருமணம் ஆனவர்களின் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கூட்டாக தொழில் செய்து வருபவர்கள் நல்ல லாபத்தைப் பெறுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த காரியங்களை வெற்றிகரமாக முடித்துக் காட்டுவீர்கள். அதீத பண வரவால் நல்ல திட்டங்களில் முதலீடு செய்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
மகரம்
மகர ராசிக்காரர்களின் 10 ஆம் வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாகிறது. பத்தாம் வீடு என்பது தொழில் மற்றும் கௌரவத்தை குறிக்கும் வீடாகும். எனவே நவம்பர் மாதத்தில் மகர ராசிக்காரர்கள் வேலை மற்றும் வணிகத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிதாக தொழில் செய்ய விரும்புபவர்கள் தொழிலை தொடங்குவீர்கள். பணியிடத்தில் பதவி உயர்வு அல்லது புதிய பொறுப்புகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது.
தொழிலதிபர்கள் புதிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல நிதி ஆதாயத்தைப் பெறுவீர்கள். சமூகத்தில் உங்கள் செயல்கள் பாராட்டப்படும். உங்களின் மதிப்பு, மரியாதை, கௌரவம், அந்தஸ்து அனைத்தும் உயரும். குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். இதன் காரணமாக மனமகிழ்ச்சி அதிகரிக்கும்.
தனுசு
தனுசு ராசியின் 11-வது வீட்டில் மாளவ்ய ராஜயோகம் உருவாக இருக்கிறது. 11-வது வீடு என்பது வருமானம் மற்றும் லாபத்தை குறிக்கும் வீடாகும். எனவே தனுசு ராசிக்காரர்கள் நவம்பர் மாதத்தில் நல்ல வருமானத்தைப் பெறுவீர்கள். புதிய வருமானத்திற்கான வழிகள் உருவாகும். நீங்கள் ஏற்கனவே செய்த முதலீடுகளில் இருந்து நல்ல லாபம் பெறுவீர்கள். பங்குச் சந்தையில் முதலீடு செய்தவர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
முடங்கி கிடந்த பணம் கைக்கு வந்து சேரும். நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் உங்களுக்கு சாதகமாக அமையும். திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் தொடர்பான நல்ல செய்திகள் கிடைக்கும். திருமணம் ஆகாமல் இருப்பவர்களுக்கு சுப செய்திகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. வேலை மாறுதலுக்காக நேர்காணல் முடித்து காத்திருப்பவர்களுக்கு விரைவில் நல்ல செய்தி கிடைக்கும்.
(பொறுப்பு துறப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் ஜோதிட கருத்துக்கள், மத நூல்கள், பஞ்சாங்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டவை. இதை ஏசியாநெட் தமிழ் நிறுவனம் சரி பார்க்கவில்லை. தகவல்களை வழங்குவது மட்டுமே எங்கள் நோக்கம். இதன் துல்லியம், நம்பகத்தன்மை மற்றும் விளைவுகளுக்கு ஏசியாநெட் தமிழ் நிறுவனம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது)