- Home
- Astrology
- சந்திரன் செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் மஹாலட்சுமி ராஜயோகம்; 4 ராசிகளுக்கு பணம், பதவி தேடி வரும்!
சந்திரன் செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் மஹாலட்சுமி ராஜயோகம்; 4 ராசிகளுக்கு பணம், பதவி தேடி வரும்!
Mahalakshmi Rajayogam Palan in Tamil : சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் மஹாலட்சுமி ராஜயோகத்தால் இந்த 4 ராசிகளுக்கு பதவி உயர்வு தேடி வரப் போகிறது. அந்த ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.

சந்திரன் செவ்வாய் சேர்க்கையால் உருவாகும் மஹாலட்சுமி ராஜயோகம்
Mahalakshmi Rajayogam Palan in Tamil : சந்திரன் மற்றும் செவ்வாய் சேர்க்கையால் மஹாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. பொதுவாக ஜோதிட சாஸ்திரத்தின்படி மஹாலட்சுமி ராஜயோகம் என்பது ஒருவரது ஜாதகத்தில் அமையப்பெறும் மிக சுபமான யோகங்களில் ஒன்று. மஹாலட்சுமி ராஜயோகம் செல்வ செல்ழிப்பையும், சமூகத்தில் கிடைக்க பெறும் மதிப்பு, மரியாதையையும் குறிக்கிறது.
மஹாலட்சுமி ராஜயோகம் எவ்வாறு உருவாகிறது?
மஹாலட்சுமி ராஜயோகம் பல்வேறு கிரக சேர்க்கைகளால் உருவாகிறது.
செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கை:
இது மிகவும் பொதுவான மற்றும் சக்திவாய்ந்த ஒரு சேர்க்கையாகும். சந்திரன் (மனம், செழிப்பு) மற்றும் செவ்வாய் (தைரியம், சக்தி) ஆகிய கிரகங்கள் ஒரு ஜாதகத்தில் ஒன்றாக இணையும் போது மஹாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. குறிப்பாக, இந்த சேர்க்கை 2ஆம் வீடு (செல்வம்), 9ஆம் வீடு (அதிர்ஷ்டம்), 10ஆம் வீடு (தொழில்), அல்லது 11ஆம் வீடு (லாபம்) போன்ற சுப ஸ்தானங்களில் அமைந்தால், அது மிகவும் பலன் தரும்.
சுக்கிரன் மற்றும் குருவின் பங்கு:
சுக்கிரன் (செல்வம், ஆடம்பரம்) மற்றும் குரு (ஞானம், செல்வம்) ஆகிய சுப கிரகங்கள் கேந்திர அல்லது திரிகோண ஸ்தானங்களில் வலுவாக அமைவது இந்த யோகத்திற்கு மேலும் பலம் சேர்க்கும். குறிப்பாக, குரு பகவான் 2ஆம் வீட்டை (தன ஸ்தானம்) பார்வையிடும் போதும், 11ஆம் வீட்டில் அமையும் போதும் மிகுந்த செல்வத்தை அளிப்பதாகக் கூறப்படுகிறது.
மஹாலட்சுமி ராஜயோகத்தின் பலன்கள்:
இந்த யோகம் ஜாதகத்தில் வலுவாக அமையப் பெற்றவர்களுக்குக் என்னென்ன பலன்கள் உண்டாகும் என்று ஜோதிடம் கூறுகிறது:
நிதி வளம் மற்றும் செழிப்பு:
பெயருக்கேற்ப, இந்த யோகம் கொண்டவர்கள் நிதி ரீதியாக மிகவும் வலிமையுடன் இருப்பார்கள். பணம் தானாகவே ஈர்க்கப்படும். திடீர் பண வரவு, முதலீடுகளில் லாபம், அசையாச் சொத்து வாங்கும் யோகம் ஆகியவை உண்டாகும்.
வசதியான வாழ்க்கை:
இவர்கள் ஆடம்பரமான மற்றும் வசதியான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். வாழ்க்கையில் எந்தவிதமான பொருளாதார நெருக்கடியும் இருக்காது. பணப் பற்றாக்குறையே ஏற்படாது.
சமூகத்தில் மதிப்பு மரியாதை:
சமூகத்தில் நல்ல மதிப்பும், கௌரவமும் கிடைக்கும். தலைமைப் பண்புகள் அதிகரிக்கும்.
தொழில் மற்றும் வியாபாரத்தில் வெற்றி:
தொழில் மற்றும் வியாபாரத்தில் சிறப்பான வெற்றிகள் கிடைக்கும். புதிய வாய்ப்புகள் உருவாகும், பதவி உயர்வு, சம்பள உயர்வு என உத்தியோகத்திலும் முன்னேற்றம் காணலாம்.
அதிர்ஷ்டம்:
அதிர்ஷ்டம் இவர்களுக்குத் துணையாக இருக்கும். எடுத்த காரியங்களில் தடைகள் நீங்கி வெற்றி கிடைக்கும். எல்லா காரியங்களும் வெற்றிகரமாக முடியும். வெற்றி மேல் வெற்றி குவியும். அலுவலகத்தில் செய்யாத வேலைக்கு கூட பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு தேடி வரும். சம்பள உயர்வு உண்டாகும். இப்படி அடுத்தடுத்து எல்லாமே தானாக அமையும்.
குடும்ப மகிழ்ச்சி: குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். சுப காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உண்டு. கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும்.
மஹாலட்சுமி ராஜயோகத்தால் 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம்
இப்படிப்பட்ட இந்த மஹாலட்சுமி ராஜயோகமானது வரும் 26ஆம் தேதி சந்திரன் சிம்ம ராசியில் இருக்கும் செவ்வாயுடன் இணைவதால் உண்டாகிறது. இந்த மஹாலட்சுமி ராஜயோகத்தால் இந்த 4 ராசிகளுக்கு தான் மேலே குறிப்பிட்ட பலன்கள் எல்லாம் உண்டாக போகிறது. அந்த நான்கு ராசியினர் யார் யார் என்று பார்க்கலாம்.
மேஷ ராசிக்கான மஹாலட்சுமி ராஜயோகம்:
மஹாலட்சுமி ராஜயோகம் மேஷ ராசிக்கு வருமானத்தை அதிகரிக்கும். ஜூலைக்குப் பிறகு தொழில் முன்னேற்றம் ஏற்படும். பல வழிகளில் பணம் கிடைக்கும். நல்லவர்களின் தொடர்பு அதிகரிக்கும். காதல் உங்கள் வாழ்க்கையில் வரலாம். நீண்ட காலமாக காதலித்தால் திருமணம் நடக்கலாம்.
மிதுன ராசிக்கான மஹாலட்சுமி ராஜயோக பலன்:
மிதுன ராசிக்கு செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கை நல்ல பலன்களைத் தரும். உங்கள் திட்டங்களை சரியாகச் செயல்படுத்த முடியும். தொழில் முனைவோருக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். வாகனங்கள் வாங்கலாம். பணம், தானியங்கள் ஏராளமாகக் கிடைக்கும். உடல்நிலையும் நன்றாக இருக்கும்.
சிம்ம ராசிக்கான மஹாலட்சுமி ராஜயோக பலன்:
சிம்ம ராசிக்கு மஹாலட்சுமி யோகம் தன்னம்பிக்கையை அதிகரிக்கும். நல்ல தொழில் மாற்றங்கள் ஏற்படலாம். உயர் அதிகாரிகள் உங்கள் வேலையைப் பாராட்டுவார்கள். ராணுவம், காவல்துறையில் பணிபுரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். விளையாட்டுத் துறையில் முன்னேற்றம் ஏற்படும். முதலீடுகளுக்கு லாபம் கிடைக்கும். சமூகத்தில் செல்வாக்கு அதிகரிக்கும்.
துலாம் ராசிக்கான மஹாலட்சுமி ராஜயோகம்:
துலாம் ராசிக்கு சந்திரன், செவ்வாய் சேர்க்கையால் நீதிமன்ற வழக்குகளில் வெற்றி கிடைக்கும். சேமிப்பை முதலீடு செய்ய திட்டமிடலாம். நிதிப் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். வேலை கிடைக்கலாம். குடும்பக் கடமைகளை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தில் மதிப்பு கூடும்.