- Home
- Astrology
- 2026-ஆம் ஆண்டின் முதல் மகாலட்சுமி ராஜயோகம்; 3 ராசிகளுக்கு தேடி வரும் சொகுசு வாழ்க்கை, அதிகாரம்!
2026-ஆம் ஆண்டின் முதல் மகாலட்சுமி ராஜயோகம்; 3 ராசிகளுக்கு தேடி வரும் சொகுசு வாழ்க்கை, அதிகாரம்!
Mahalakshmi Rajayogam 2026 Top 3 Lucky Zodiac Signs : ஜோதிடத்தில் மிகவும் மங்களகரமானதாக கருதப்படும் மகாலட்சுமி ராஜயோகம் ஜனவரி 18ஆம் தேதி உருவாகிறது. இந்த ராஜயோகம் 3 ராசிகளுக்கு அதிகாரத்தையும், செல்வ செழிப்பையும் கொடுக்க போகிறது.

மகாலட்சுமி ராஜயோகம்
2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் வரும் ஜனவரி18ஆம் தேதி செவ்வாய் மற்றும் சந்திரன் சேர்க்கையால் மகாலட்சுமி ராஜயோகம் உருவாகிறது. இந்த ஆண்டில் உருவாகும் முதல் ராஜயோகம் என்பதால் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 18 மாதங்களுக்குப் பிறகு நிகழும் இந்த யோகம் செல்வம், செழிப்பு, மகிழ்ச்சி மற்றும் மரியாதையைத் தரும்.
மகாலட்சுமி ராஜயோகம் - மேஷம் ராசி பலன்கள்
ஜனவரி 18ல் உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் மேஷ ராசிக்கு மங்களகரமானது. புதிய வருமான வழிகள் உருவாகும். நீண்டகாலமாக வராத பணம் திரும்பக் கிடைக்கும். பதவி உயர்வு, முக்கிய வாய்ப்புகள் வரலாம். மேஷ ராசியினருக்கு கடந்த சில மாதங்களாக இருந்து வந்த பொருளாதார நெருக்கடி வரும் 18ஆம் தேதிக்கு பிறகு நீங்கும். நீண்ட நாட்களாக வராமலிருந்த பணம் திரும்ப கிடைக்கும். அலுவலகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். அதிகார பதவியும் தேடி வரும். பிஸினஸில் புதிய முயற்சிகள் கைகொடுக்கும். புதிதாக தொழில் தொடங்க நினைப்பவர்களுக்கு இது ஏற்ற காலகட்டம். கணவன் மனைவிக்கிடையில் அந்நியோன்யம் அதிகரிக்கும். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஷேர் மார்க்கெட் லாபம் கொடுக்கும்.
ரிஷப ராசி - மகாலட்சுமி ராஜயோகம் பலன், செவ்வாய் சந்திரன் சேர்க்கை
ரிஷப ராசியினருக்கு வரும் ஜனவரி 18ஆம் தேதி உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் திருப்புமுனையை ஏற்படுத்தும் காலமாக அமையப்போகிறது. ஜோதிடத்தில் ரிஷப ராசியின் அதிபதி சுக்கிரன். வசதி வாய்ப்பு, ஆடம்பரம் ஆகியவற்றிற்கு காரகனான சுக்கிரன் உங்களது ராசிக்கு அதிபதி என்பதால் இந்த மகாலட்சுமி ராஜயோகம் உங்களுக்கு இரட்டிப்பு பலனை தரும். புதிதாக வீடு, வண்டி, வாகனம் வாங்கும் காலகட்டம். சொந்தமாக பிஸினஸ் செய்பவர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். தொழிலில் லாபம் அதிகரிக்கும். வெளிநாடு, வெளியூர் சென்று வருவீர்கள். தீராத கடன் தீரும். கையில் காசு, பணம் இருந்து கொண்டே இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கை கூடும். ஒரு சிலருக்கு குழந்தை பாக்கியமும் கிடைக்கும்.
சந்திரன் செவ்வாய் சேர்க்கை - மகரம் ராசிக்கான மகாலட்சுமி ராஜயோக பலன்
வரும் ஜனவரி 18ஆம் தேதி உருவாகும் மகாலட்சுமி ராஜயோகம் மகர ராசியினருக்கு வாழ்க்கையின் புதிய தொடக்கமாக அமைய போகிறது. நினைத்தது நிறைவேறும் காலகட்டம். தொழிலை விரிவுபடுத்தலாம். புதிய தொழில் ஒப்பந்தம் கையெழுத்தாகும். அலுவலகத்தில் வேலையில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். சனி பகவானின் ஆதிக்கம் நிறைந்த இரும்பு, சிமெண்ட் மற்றும் கட்டுமான தொழில் செய்பவர்களுக்கு எதிர்பார்த்ததை விட அதிக லாபம் கிடைக்க பெறும். அரசு வழி காரியங்கள் அனுகூலமாக முடியும். அரசு வழியில் டெண்டர்கள் கிடைக்க பெறலாம்.