MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Astrology
  • Oct 17 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, சூரிய பகவான் அருளால் இன்று எதிர்பாராத பண மழை கொட்டும்.!

Oct 17 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, சூரிய பகவான் அருளால் இன்று எதிர்பாராத பண மழை கொட்டும்.!

Today Rasi Palan : அக்டோபர் 17, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

1 Min read
Author : Ramprasath S
Published : Oct 16 2025, 04:22 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
11
அக்டோபர் 17, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
Image Credit : Asianet News

அக்டோபர் 17, 2025 மகர ராசிக்கான பலன்கள்:

மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் சூரிய பகவான் துலாம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார். அன்றைய தினம் மகர ராசியின் பாக்கிய ஸ்தானத்திலிருந்து சூரிய பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுவதால் தொழில் மற்றும் உத்தியோகத்தில் முன்னேற்றம் காணப்படும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிடைக்கும். தன்னம்பிக்கை மற்றும் மன உறுதி அதிகரிக்கும்.
 

நிதி நிலைமை:

இன்று பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். திட்டமிட்டபடி செலவுகளை கையாள்வது நன்மை தரும். திடீர் பண ஆதாயம் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. புதிய ஆடை, ஆபரணங்கள் சேரலாம் பூர்வீக சொத்துக்கள் மூலம் எதிர்பாராத நிதி நன்மைகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் உண்டு.

தனிப்பட்ட வாழ்க்கை:

கணவன் மனைவிக்கு இடையே அன்னோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். உறவினர்கள் மூலம் உதவி கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களை அவர்களிடத்திலிருந்து புரிந்துகொண்டு செயல்படுங்கள். தேவையற்ற வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.

பரிகாரங்கள்:

தொழில் முன்னேற்றம் பெறுவதற்கு சூரிய பகவானை வணங்குவது நல்லது. காலையில் சூரிய நமஸ்காரம் செய்வது பலன்களைத் தரும். ரோஜா மலர்கள் கொண்டு சூரிய பகவானுக்கு அர்ச்சனை செய்வது பலன்களை அதிகரிக்கும். மாற்றுத்திறனாளிகளுக்கு இயன்ற உதவிகளை செய்யலாம்.

முக்கிய குறிப்பு:

இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.

About the Author

RS
Ramprasath S
பொறியியல் பட்டதாரியான இவர், செய்திகள் மீது கொண்ட ஆர்வம் காரணமாக 4 ஆண்டுகளுக்கும் மேலாக டிஜிட்டல் பத்திரிக்கைத் துறையில் பணியாற்றி வருகிறார். மே 2025 முதல் ஏசியாநெட் தமிழ் இணையதளத்தில் தமிழ் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, பொழுதுபோக்கு, லைஃப்ஸ்டைல் செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஜோதிடம்
இராசி அறிகுறிகள்
ஜோதிடம்
ராசி பலன்

Latest Videos
Recommended Stories
Recommended image1
பின்னோக்கி நகரத் தொடங்கிய புதன் பகவான்.! இந்த ராசிகளுக்கு வேலை போகலாம்.! தொழிலில் பலத்த அடி விழப்போகுது.!
Recommended image2
ஒரே நேர்க்கோட்டில் வரும் 5 கிரகங்கள்.! 4 ராசிகள் அடுத்தடுத்து சிக்கல்களை சந்திக்கப்போறீங்க.!
Recommended image3
இந்த 4 ராசிக்காரர்கள் விரைவில் செல்வந்தர்கள்!.. பாபா வாங்கா கணிப்பு!.. உங்கள் ராசி இருக்கா?
Related Stories
Recommended image1
Astrology: ஐப்பசி மாதத்தில் கவனமாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.! பிரச்சினைகள் ரவுண்டு கட்டி அடிக்குமாம்.!
Recommended image2
Astrology: ஐப்பசி மாதத்தில் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள்.! இவர்களுக்கு பொன், பொருள், வசதிகள் குவியப் போகுது.!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved