- Home
- Astrology
- Oct 15 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று கஷ்டமான வேலைகளை கூட ஈஸியாக முடித்துக் காட்டுவீர்கள்.!
Oct 15 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று கஷ்டமான வேலைகளை கூட ஈஸியாக முடித்துக் காட்டுவீர்கள்.!
Today Rasi Palan : அக்டோபர் 15, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

அக்டோபர் 15, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் உங்கள் வேலையில் அதிக கவனம் செலுத்துவீர்கள். புதிய முயற்சிகளை தொடங்குவதற்கான நல்ல நாளாகும். தொடங்கும் வேலைகளை சிறப்பாக முடித்துக் காட்டுவீர்கள். உங்களைத் தேடி புதிய வாய்ப்புகள் வரும். உங்கள் புத்திசாலித்தனமானது கடினமான சூழ்நிலைகளை சமாளித்து வெற்றி பெற உதவும். குடும்பத்தின் ஆதரவு மன மகிழ்ச்சியை அதிகரிக்கும்
நிதி நிலைமை:
நிதி நிலைமை வலுப்பெறும். பொருளாதார நிலைமை சீராக இருக்கும். புதிய முயற்சிகளில் முதலீடு செய்வது எதிர்காலத்தில் நல்ல வருமானத்தைத் தரும். புதிய வசதிகள், ஆடம்பரத்தை அனுபவிப்பீர்கள். முதலீடுகள் செய்வதற்கு சிறந்த நாளாக இருக்கும். புதிய வீடு, வாகனம், சொத்துக்கள் வாங்குவதற்கு இன்று அடித்தளம் அமைப்பீர்கள்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப வாழ்க்கை இன்று மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். இருப்பினும் பேச்சில் நிதானத்தை கடைபிடிக்க வேண்டியது அவசியம். இல்லையெனில் தேவையற்ற தகராறுகள் ஏற்படலாம். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். குடும்பத்தின் தேவைகளுக்காக பொருட்களை வாங்குவீர்கள். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து அதிகரிக்கும்.
பரிகாரங்கள்:
இன்று குலதெய்வ வழிபாடு செய்வது நன்மைகளைத் தரும். மன அமைதிக்கு சிவபெருமானை வழிபடலாம். நிதி நிலைமை மேம்பட லட்சுமி தேவியை வழிபடுவது நல்லது. ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபடுவது சிறந்தது. பேச்சில் நிதானம் பொறுமையை கடைபிடியுங்கள். இயலாதவர்களுக்கு உதவுங்கள்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.