- Home
- Astrology
- Nov 06 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று இந்த விஷயங்களில் சறுக்கல்கள் வரும்.! கவனமா இருங்க.!
Nov 06 Today Rasi Palan: மகர ராசி நேயர்களே, இன்று இந்த விஷயங்களில் சறுக்கல்கள் வரும்.! கவனமா இருங்க.!
Today Rasi Palan : நவம்பர் 06, 2025 தேதி மகர ராசிக்கான பொதுவான பலன்கள், நிதி நிலைமை, தனிப்பட்ட வாழ்க்கை, பரிகாரம் குறித்து இந்த பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

நவம்பர் 06, 2025 மகர ராசிக்கான பலன்கள்:
மகர ராசி நேயர்களே, இன்றைய தினம் பொறுமையும், நிதானமும் தேவைப்படும் நாளாக இருக்கும். இருப்பினும் திட்டமிட்ட பணிகள் சரியான நேரத்தில் முடிவடைய வாய்ப்பு உள்ளது. அவசர முடிவுகளை தவிர்க்கவும். உடல் ஆரோக்கியம் சாதகமாக இருக்கும். உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். சமூகத்தில் மரியாதை கூடும். முக்கிய பிரமுகர்களின் அறிமுகம் கிடைக்கலாம். அதிக உற்சாகத்தில் அமைதியை இழக்காமல் கவனத்துடன் செயல்படவும்.
நிதி நிலைமை:
இன்றைய தினம் தொழில் மற்றும் வியாபாரம் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தின் மூலம் லாபம் அதிகரிக்கும். பணவரவு சீராக இருக்கும். தேவையான பண உதவிகள் கிடைக்கும். இருப்பினும் பங்குதாரர்களுடன் பண விவகாரங்களில் கவனமாக இருப்பது நல்லது. பண பரிவர்த்தனைகள், ஆன்லைன் பரிவர்த்தனைகளில் அதிக கவனம் தேவை. செலவுகளை கட்டுப்படுத்த வேண்டிய சூழல் ஏற்படலாம்.
தனிப்பட்ட வாழ்க்கை:
குடும்ப உறுப்பினர்களுடன் குறிப்பாக உறவினர்களுடன் சில சங்கடங்கள் ஏற்படலாம். எனவே வார்த்தைகளில் கவனம் தேவை. அன்புக்குரியவர்களுடன் விட்டுக் கொடுத்துச் செல்வது உறவை பலப்படுத்தும். பெற்றோரின் விருப்பத்தை நிறைவேற்றும் வாய்ப்புகள் ஏற்படும். வாழ்க்கைத் துணையுடன் பேசும்பொழுது வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது.
பரிகாரங்கள்:
காரியத் தடைகள் நீங்கி வெற்றி பெற விநாயகப் பெருமானை வழிபடலாம். சாய்பாபாவுக்கு செவ்வரளி மாலை சாற்றி சர்க்கரை பொங்கல் பிரசாதம் படைத்து வழிபட வெற்றி கிடைக்கும். மாற்று திறனாளிகளுக்கு உங்களால் முடிந்த உதவிகளை செய்வது நன்மைகளை அதிகரிக்கும்.
முக்கிய குறிப்பு:
இந்த பலன்கள் பொதுவானவை. உங்கள் தனிப்பட்ட ஜாதகத்தைப் பொறுத்து பலன்களில் மாற்றங்கள் ஏற்படலாம்.